(Reading time: 14 - 28 minutes)

ழக்கமா evening வந்தவுடன் சூடா எதாவது கலந்து கொடுப்பவர், அப்படியே சென்று விட்டார் அவள் மாமியார்..

வெகு நேரம் தனிமையில் அழுதவள், பிறகு மாமியாரின் வயதை மனதில் கொண்டு எதுவும் பேசாது, இரவு உணவு வேலையை பார்த்தாள்.

வழக்கம் போல் அன்றும் இரவு நைட் சாட் செய்தவர்கள்,

“ஏன் பா... உங்க கிட்ட ஒன்னு சொன்னால் தப்பா எடுத்துக்க மாட்டீங்களே? “

“என்ன டா... “ என்றான் கரிசனமாக.. அவன் இன்று அவள் முகத்தை பார்த்தவுடனே கண்டு கொண்டான் , ஏதோ வீட்டில் நடந்திருக்கிறது என்று.. அவளாக  சொல்வாள் என்று எதிர் பார்த்தவன் , இப்போ கேட்கவும்.

“இல்ல.. அத்தையும், நானும் உங்க கூடவே வந்துடட்டுமா? நாம எல்லோரும் சேர்ந்து இருக்கலாம்’? என்றாள்.

தன் அறையில் தான் பேசியது அதிகபடியோ என்று சங்கடபட்டபடி இருந்த அவள் மாமியார், அப்போதுதான் ப்ரத்யாவிடம் பேசலாம் என்று வந்தவர்,

அவள் பேசியதை கேட்டவுடன், மீண்டும் கோபம் தலைக்கேற,

“என்ன நடக்குது இங்க?” என்ற படி கேமரா முன் வந்தவர், “ஆதி, இவள் பேச்சை கேட்டு உன் இஷ்டப்படி ஆடாத .. ஏதோ சாயந்திரம் கொஞ்சம் கோபமா பேசிட்டேன் தான் .. அதுக்காக இவ சொல்ற மாதிரி நான் என் பொண்ண விட்டுட்டு அங்கெல்லாம் வர மாட்டேன்.. அப்படி உனக்கு உன் பொண்டாட்டி முக்கியம் னா ... அவள் மட்டும் கூட்டிகிட்டு போ.. நான் இங்க தனியா இருந்துக்கிறேன்.. “ என்று சொல்லி விட்டு, பிரத்யாவை முறைத்த படி சென்று விட்டார்.

அவள் கண்ணீர் தளும்ப அமர்ந்திருப்பதை பார்த்த ஆதிக்கு , மனதை பிசைந்தது..

சற்று நேரம் கழித்து “மாலை என்ன நடந்துச்சு ப்ரயு?” என்று வினவினான்.

அவள் ஒண்ணுமில்லை என்று சமாளிக்க,

“இப்போ அம்மா சொல்றத கேட்டில்ல .. எனக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியனும்,” என,

மாலை நடந்ததை சுருக்கமாக விவரித்தாள்.. அவர்கள் பேசிய சில வார்த்தைகளை விட்டு விட்டு..

கேட்ட ஆதிக்கு கோபமும், வருத்தமும் ஒன்றை ஒன்று மிஞ்சியது.. அப்படியே அம்மாவிற்கு அழைக்க நினைத்தவன், பிறகு இந்த எரிச்சலும் பிரயுவிடம் தான் பாயும் என்று பேசாதிருந்தான்..

“ப்ரயு, நீ சொல்லு .. உனக்கு அங்க இருக்க கஷ்டமா இருக்கா? பரவால்ல ன்னு உனக்கு விசா எடுத்து கூப்பிட்டுகறேன்.. அம்மாவை வித்யாவிடம் விடலாம்.. வித்யா டெலிவரி வரை விட்டுட்டு பிறகு அவங்களையும் கூபிட்டுக்கலாம்”

“ஐயோ.. வேணாம் பா.. அவங்கள தனியா விடறதோ, வித்யா வீட்டில் விடறதோ தப்பு.. நேத்து வித்யா மாமியார் பேசினத நாம பெரிசு படுத்தாம விட்ருக்கலாம்... சரி விடுங்க.. இனிமேல் ஜாக்கிரதையா இருப்போம்” என்று தன் கண்ணீரை துடைக்கவும்,

கேமரா வழியே பார்த்துக் கொண்டிருந்த ஆதிக்கு மனம் வலித்தது.. அவளே சமாதனம் சொல்லும் போது ஒன்றும் செய்ய வழியில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான்..

பிறகு சற்று நேரம் அன்றைய தினம் தங்கள் வேலையை பற்றி இருவரும் பேசினார்கள். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தவன், பிறகு அவள் மொபைல்க்கு whats up இல் வழக்கம் போல் பாடல் அனுப்பி விட்டு படுத்துக் கொண்டிருந்தான்.

அவன் சிந்தனை எல்லாம் இந்த வாய்ப்பு எப்பொழுது வேண்டும் என்றாலும் வரும் என்பது தெரிந்தது தானே... அம்மாவிற்கு மாற்று ஏற்பாடு செய்யாமல் ஏன் கல்யாணத்திற்கு ஒத்துக் கொண்டோம் என்று இருந்தது. இன்றைக்கு தன் மனைவியை தவிக்க விட்டு விட்டோமே... என்று மருகினான்.

அங்கே ப்ரத்யாவின் சிந்தனையும் அதே போலே.. அவர் மூன்று வருடம் நம்மோடு இருக்க மாட்டார் என்று தெரிந்தும் ஏன் ஒத்துக் கொண்டோம் என்று யோசித்தாள். தன் மனதை அடக்கி தூங்க ஆரம்பித்தாள்.

அவள் மனதிற்கு தோன்றியது இன்றைய பிரச்சினை இதோடு முடியாது, தொடரும் என்று.. அதை தாங்க தன் மனதிற்கு திடம் வேண்டி கடவுளிடம் முறையிட்டாள்.

றுநாள் காலை அவள் எழுந்து வந்த போது, அவள் மாமியார் இன்னும் முகத்தை தூக்கி வைத்திருப்பதைக் கண்டு எதுவும் பேசாமல் தன் வேலையை பார்த்தாள்.

அவள் வேலைக்கு கிளம்பிய பிறகு, ஆதிக்கு போன் பண்ணி கூப்பிட்டார். அவன் எடுக்கவில்லை.

ஆதி முந்தைய நாள் இரவு ஏதோ ஏதோ யோசித்துக் கொண்டிருந்ததில் தூங்க லேட் ஆகி விட , அன்று தாமதமாக எழுந்து அலுவலகத்திற்கு அரக்க பறக்க கிளம்பி கொண்டிருந்தான். அப்போது வீட்டிலிருந்து போன் வரவே பிறகு பேசலாமென்று கட் செய்து விட்டான்.

கிட்ட தட்ட அன்று மாலை தான் அவனால் ப்ரீ ஆக முடிந்தது. அப்போது தன் வீட்டு லைன் க்கு அழைத்தான்.

போன்ஐ எடுத்த ஆதியின் அம்மா, ஆதி என்று அறிந்து,

“ஏன் பா.. ? உன்னால் என் போன் கூட அட்டென்ட் பண்ண முடியாதா? உன் பொண்டாட்டி கிட்ட மட்டும் ஒரு நாளைக்கு நாலு தரம் பேசற?” என்று ஆரம்பிக்க,

ஆதிக்கு அதிர்ச்சியாக இருந்தது.. அவன் அம்மாவா இப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்று.

“அம்மா, நான் தினமும் ஒரு தடவை தான் அவகிட்ட பேசுறேன்” என்றான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.