(Reading time: 14 - 28 minutes)

ஸ்ஸ்!! அய்யோ!! இதை யார்கிட்டயும் சொல்லாதேன்னு சொன்னாரே!!”, என்று நுனி விரலை கடித்தவள்... மறுபடியும் அவளை பாட வருமாறு அழைப்பு வர...

“நீயும் யார்கிட்டயும் சொல்லாதே”, என்று மேடையை நோக்கி ஓட.. சசி குழம்பினாள். அவன் கோகிலாவைப் பார்த்த பார்வை வேறு மனதில் தோன்றி மறைய...

‘ம்ம்... அவன் யாருக்கு ரூட் விட்டா நமக்கு என்ன...’, என்று அந்த விஷயத்தை கண்டு கொள்ளவில்லை..

மேடையில் ஏறி, ஆர்யமனுக்கும் கோகிலாவுக்கும் இடையில் நின்று பாட ஆட ஆரம்பித்தாள்..

“கமான் கைஸ்.. சிங் அன்ட் டான்ஸ் வித் மீ...”, என்று அழைப்பை தட்டி விட...

மொத்த அரங்கமும்.. அதற்கு இசைந்தது...

அஞ்சனா:

மன மன மன mental மனதில்

லக்க லக்க லக்க பொல்லா வயதில்

டக்க டக்க டக்க கொட்டும் இசையில்

என்று  முடிக்கும் பொழுது மைக் ஆர்யமன் முன் நீட்ட..

ஆர்யா: ஓ கே என் கண்மணி மடியில்

என்று அவன் முடிக்கவும்.. அதைத் தொடர்ந்து பாட ஆரம்பித்த அஞ்சனா..

அஞ்சனா:

நேற்று என்பது இன்றில்லை

நாளை நினைப்பே ஓ தொல்லை

Like a like my லைலா லைலா

இன்று மட்டும் king and queen ஆ

மன மன மன mental மனதில்

லக்க லக்க லக்க பொல்லா வயதில்

டக்க டக்க டக்க கொட்டும் இசையில்

என்று மைக்கை கோகிலா முன் நீட்ட ....

கோகிலா: ஓ கே என் கள்வனின் மடியில்

என்று அவள் அந்த வரியை முடிக்க... தொடர்ந்து பாடிய அஞ்சனா ஆர்யமனிடம் கண்களால் சைகை செய்தாள்.. ‘உன் ஆளை எப்படி பாட வைச்சுட்டேன் பார்த்தியா?’, என்பது போல...

அதைக் கண்ட ஆர்யமனின் பார்வையோ கோகிலாவை தழுவி மீண்டது...

இதை மற்றவர் யாரும் கவனித்திருக்க வாய்ப்பில்லை..

ஏற்கனவே அஞ்சனா சொல்லிச் சென்ற செய்தியால், அந்த சிறு மேடை அருகே நின்றிருந்த சசியால் எல்லாம் புரிந்து கொள்ள முடிந்து அவர்களை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தாள்..

அந்த பாட்டோடு பார்ட்டிக்கு சுபம் போடப் பட, மேடையை விட்டு இறங்கும் பொழுதே... ஆர்யமன் முகம் இறுக அஞ்சனாவை கடிவது போல் தெரிய...

இவளோ அலட்டிக் கொள்ளாமல்.. அவனோடு இணைந்து செல்ஃபி எடுக்க முனைய... இன்னும் கடுப்பானவனாக விடு விடுவென அங்கிருந்து செல்லும் பொழுது,

“சை.. சரியான மூட்டைப் பூச்சி”, என்று முணுமுணுத்த வார்த்தைகள் சசியின் காதில் விழ.... அந்த வார்த்தை சசியின் கோபத்தை தூண்ட...

அதற்குள் அவளருகில் வந்த அஞ்சனாவும் முன்னே சென்ற ஆர்யாவைப் பார்த்த படி..

“ஒரு செல்ஃபி எடுக்கலாம்ன்னா இந்த ஓட்டம் பிடிக்கிறார்!!”, என்று சொல்ல... இப்பொழுது சசியின் கோபம் அஞ்சனாவிடம் திரும்பியது!

“செல்ஃபி தான் இப்போ குறைச்சலாக்கும்! அவன் உன்னை மூட்டை பூச்சின்னு சொல்லிட்டு போறான்!!!!”, என்று எரிச்சலுடன் தான் கேட்டதை அவளிடம் அப்படியே சொல்ல..

“ஆர்யாக்கு வேணா நான் மூட்டைப் பூச்சியா இருக்கலாம்! பேசிக்கலி இந்த அஞ்சனா ஒரு பட்டாம் பூச்சி!! யு நோ!!! “, என்று தற்பெருமையடிக்க...

“இப்படி சொல்லிட்டு போறான்னு உனக்கு கொஞ்சங் கூட கோபமே வரலையா அஞ்சு?”, தோன்றியதை கேட்டவளிடம்,

உதட்டை பிதுக்கி மறுப்பாக தலையசைத்து..

“மான ரோசமேல்லாம் நம்ம பரம்பரைக்கே கிடையாதே! அதை விடு! இப்போ  கும்முன்னு நம்ம செல்ஃபி “, என்று துரிதமாக தனது அலைபேசி கேமிராவை இயக்கி சசியுடன் இணைந்து செல்ஃபி எடுத்தவள்.. அந்த படத்தை சசிக்கும் அனுப்பி வைத்து,

“இதை தான் இனி நம்ம ஃபோன்ல வால் பேப்பரா வைக்கிறோம்!!!”, என்றாள் அன்பு கட்டளையாக..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.