(Reading time: 14 - 28 minutes)

சொல்றதை சொல்லிட்டேன்... அப்புறம் உன் இஷ்டம்.. அளவுக்கு மீறி பாசம் வைச்சு உன்னை நீயே காயப்படுத்திக்காதே!”, அறிவுரையோடு நிறுத்திக் கொண்டான் அவன்...

‘அவன் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது தானே! இனி நான் தேடி போக மாட்டேன்.. அவளா வந்தா வரட்டும்!’, என்று நினைத்து கொண்டாள். ஆனால், அஞ்சனா வரவே இல்லை...

நிகழ்ச்சி நிறைவடையும் தருணம் வர, அப்பொழுது விருதுகள் பற்றிய

முடிவுகளை வெளியிட வந்த சுகுமார்,

“நம்ம எத்தினிக் டே அழகிய தமிழ் மகன் பட்டத்தை தட்டி செல்வது...........”, என்று இழுத்தவன்..

“எனி கெஸ்???”, என்று குழுமியிருந்த கூட்டத்திடம் கேட்க...

பல பெயர்கள் வந்தது.. அதில் “ஆர்யமன்.. “, “முகுந்த்... “ என்ற பெயரை பல குரல்கள் சொல்ல.. அது முகுந்த் மனதில் ஆவலை தோற்றுவித்த அடுத்த நொடி,

“ஆர்யமன்.. “, என்று முடிவை அறிவிக்க..

முகுந்த், “பார்த்தியா! இதுல கூட அதிர்ஷடம் அவன் பக்கம் தான்”, என்றான் விரக்தியாக  சசியிடம்...

“ப்ச்.. தேவையில்லாம யோசிக்கிறே! சரி! இனி நாம இங்க இருக்க வேண்டாம்!”, என்று அங்கிருந்து அவனை கிளப்பி அந்த இடத்தை விட்டு வெளியே வர...

காரிடரில் அஞ்சனா அவர்கள் முதுகைக் காட்டிய படி யாரிடமோ அலைபேசியில் பேசிக் கொண்டிருப்பது இருவரின் செவியைத் தீண்டியது..

“பாஜி!!!!! காசுக்காகவா... ஸ்டுபிட்! உளறாதே!”

“நான் கொடுத்த சேலைக்கு கூட செக்கை கொடுத்திட்டு தான் அதை கையில் வாங்கினா! அந்த செக்கை வாங்க எனக்கு எவ்வளோ மனசு வலிச்சது தெரியுமா... என்னை எவ்வளோ கேர் பண்றா தெரியுமா? . அவளை போய் இப்படி சொல்ற பாரு!!! அது அதை விட ரொம்ப வலிக்குதுடா... ”

அந்த வாக்கியத்தை முடிக்கும் பொழுது அவள் குரல் கலங்கி தேய்ந்தது....

அதைக் கேட்ட சசி முகுந்த்தை குற்றம் சாட்டும் பார்வை பார்க்க... அதை எதிர் கொள்ள முடியாமல் அவன் விழித்த நேரம்...

“-----”

“அழாம பின்ன???? வலிக்குதுன்னு சிரிச்சிகிட்டேவா சொல்ல முடியும்! நான் அழுது என் சோகம் உன்னை தாக்க வேண்டாமா? அதான் அந்த சவுன்ட் எபக்ட்  கொடுத்தேன்..”

அஞ்சனாவின் குரலில் குறும்பு தொற்றியிருக்க.. இருவருக்கும் சிரிப்பு வந்து விட்டது... சிரிப்பொலி கேட்டு திரும்பியவள் இருவரையும்  பார்த்த மாத்திரத்தில் அவர்கள் கிளம்புகிறார்கள் என்பது புரிபட...

‘எங்கே?’, என்று  அவர்களிடம் சைகையில் கேட்க.. அதற்கு சசி ‘முகுந்த்திற்கு வேலை இருக்கு! கிளம்புகிறோம் பை’, என்று சைகையிலே சொல்ல...

அவர்களை காத்திருக்குமாறு சைகை செய்தவள் அலைபேசியில்,

“நான் இங்கே சேஃப்பா இருக்கேன் பாஜி! என்னை பத்தி குடையுறதை விட்டுட்டு ஏதாவது சப்பை மூக்கி கூட தவளை சூப் குடிக்கிற வழியைப் பாரு!”,

என்று சொல்லி அலைபேசியை வைத்தவள் சசியைப் பார்த்து,

“செந்தாமரைக்கு வேலை இருந்தா போகட்டும்... நீ என்ன செய்யப் போறே! உங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்ன்னு தான் பக்கத்திலே வரலை! இனி என்கூட இரு! அவார்ட்ஸ் பங்க்ஷன்ல முடிஞ்சதும் நானே ட்ராப் பண்றேன்!”,

என்று இவள் சொன்னதும்..  ‘என் ஃப்ரைவசிக்காக விலகி இருந்தவளை தப்பா நினைச்சுட்டேனே!’, என்று சசியின் மனம் குற்ற உணர்வில் தவிக்க..

அதே சமயம், அஞ்சனாவை பாட மேடைக்கு வருமாறு அறிவிப்பு வர...   முகுந்த்தைப் பார்த்த அஞ்சனா,  அதிகாரமாய்,

“உங்க டாக் டைம் முடிஞ்சு போச்சுல! இன்னும் என்ன மச மசன்னு நின்னுகிட்டு...  போய் ஆக வேண்டிய வேலையைப் பாருங்க.!!”, என்று அவனை துரத்தாத குறையாக சொல்லி விட்டு... சசியின் கரம் பிடித்து உள்ளே அழைத்து செல்ல...

அவள் இழுத்த இழுப்புக்கு மறுப்பு சொல்ல முடியாது, தன்னை கெஞ்சலாக பார்த்த சசியிடம் முகுந்த்,  ‘என்னமும் செய்துக்கோ! போ!’, என்ற ரீதியில் கண்களால் விடை கொடுத்தான்!

சசியை அந்த ஹாலிற்குள் அழைத்து சென்றவள்.. மேடையில்  ஆர்யமனும், கோகிலாவும் பக்கத்தில் நிற்பதை கண்டதும்,

“ஆர்யா அவரோட ஆளு கூட நிற்கிறார் பாரேன்! ஜோடிப் பொருத்தம் செமையா இருக்குல்ல! ” என்று உற்சாகமாக சொல்ல...

“என்னது? கோகிலா ஆர்யாவோட ஆளா?!!!! யார் சொன்னா?!!!”, அதிர்ந்த சசியிடம்,

“ஆர்யாவே தான் சொன்னார்! பட், ஒன்-சைட் தான். அஞ்சனாவா கொக்கா! கரந்துட்டோம்ல!!!!”, என்று காலரை தூக்கி விடாத குறையாக  சொல்லி விட்டு..  பின் நினைவு வந்தவளாய்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.