(Reading time: 14 - 28 minutes)

ண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

காதல் முகம் கண்டுகொண்டேன்

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

காதல் முகம் கண்டுகொண்டேன்

விரல் தொடும் தூரத்திலே

வெண்ணிலவு கண்டுகொண்டேன்

வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தில்

விழுந்து நிறைந்தால் வழிந்தால் மகிழ்ச்சி

வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தை

உடைத்தால் உயிரை உடைப்பாள் ஒருத்தி

என் கண் பார்த்தது என் கை சேருமோ

கை சேராமலே கண்ணீர் சேருமோ

பரணிதரனை சந்திக்க வேண்டும் என்ற உந்துதலோ.. என்னவோ இப்படி ஒரு பாட்டை தேர்ந்தெடுத்து பாடி.. கேட்பவர் மனதை கட்டி போட்டிருந்தது அவள் குரல்..

பிரமாதமாக பாடி விட்டு வந்தவளை சுகுமார் பாராட்ட வர, அதற்குள் அவனை வழி மறித்த இன்னொருவன்,

“பாஸ்.. ஓட்டு கவுன்ட்டிங் முடிஞ்சது.. நம்ம தலையும், கோகிலாவும் டைட்டில் வின்னர்ஸ்..”, என்று சொல்ல.. இதற்குள் அவர்களை நெருங்கிய அஞ்சனா காதிலும் இது விழுந்தது.

“ஹே.. ஆர்யா அழகிய தமிழ் மகனா?”, மகிழ்ச்சியில் குதூகலித்தவளாய் அவர்களிடம் கேட்க...

“ஸ்ஸ்ஸ்!!!!!!”, என்று எச்சரிக்கை ஒலி எழுப்பி அவளை அடக்கிய சுகுமார்...

“இப்போ யாருக்கும் தெரிய வேண்டாம்! கடைசியில் தான் சொல்லணும்! சூப்பரா பாடுறீங்க! வின்னர்ஸ் கூட சேர்ந்து இன்னொரு பாட்டு பாட ரெடியாகிக்கோங்க!”, என்று சொல்ல,

“மறுபடியுமா?”, என்று அலுத்துக் கொண்டாலும், “ஓகே!!”, என்ற படி ஹெட் போனை காதில் மாட்டிக் கொண்டு அடுத்த பாட்டை தேர்ந்தெடுத்து ஒளிபரப்ப விட்டவளுக்கு மனது ஒரு நிலையில் இல்லை..

‘அஞ்சு பேபி!!! இவ்வளோ பெரிய ரகசியத்தை காக்கிற பூதமாக்கிட்டியே என்னை!!! ரொம்ப கனக்குதும்மா!!! தயவு செய்து இறக்கி வைச்சிடேன்!!!!’, என்று  கெஞ்சியது ‘ரஸ்டான’ அவள் மூளை!!!

அந்த கெஞ்சலை தாங்காத அவள் இளகிய மனம் கட்டளையிட..  இவள் கண்களும்.. கால்களும் அந்த இடத்தை சல்லடை போட்டு ஆர்யமனை தேட... பின்னாலிருந்து வந்த சசியின் அழைப்பு கேட்கவில்லை..

ஓரிரு முறை சசி கூப்பிட்டு பார்த்து விட்டு, அவள் திரும்பி பார்க்கவில்லை என்றதும் தான் கவனித்தாள்  அவள் ஹெட்ஃபோன் மாட்டியிருப்பதை...

‘ப்ச்.. இவ என்ன!!! எந்த நேரமும் ஹட்போனை மாட்டிக்கிட்டு இருக்கிறா’, என்று மனதுக்குள் நினைத்த படி நடையின் வேகத்தை கூட்டி அவளைத் தொடர,

அதற்குள் அவள் ஆர்யமனை நெருங்கி விட்டதை கண்டதும் சசி அதற்கு மேல் அவளைத் தொடராது நின்று விட்டாள்.

‘எனக்கு சசி எப்படி ஃப்ரண்ட்டோ.. ஆர்யாவும் அப்படி ஃப்ரண்ட்’, என்று முன்னர் சொன்னது நினைவு வர... பல வருடம் பழகியது போல ஒரே நாளில் மனதில் நெருங்கிய தோழி மீது உண்டான பொசசிவ்னஸ்ஸோ... இல்லை தனக்கு பிடிக்காதவன் கூட பேசுகிறாள் என்ற ஆதங்கமோ.. மனம் ஒரு கசப்பை உணர.. வெறுப்புடன் ஆர்யமன் மீது இவள் பார்வை விழ...

அவனோ... “பப்பின்னு சொல்றப்போ ஒரு ஸ்பெஷல் பீல் வருது!!!”, என்று ஃபிராண்டிங் மானேஜரிடம் சொல்லிக் கொண்டிருந்த கோகிலாவை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான்..

அப்பொழுது அஞ்சனா அவன் காதில் ஏதோ கிசுகிசுக்க... வெறுமனே தலையசைத்தவனின்  பார்வை மட்டும் கோகிலா விட்டு விலகாமல் பதிந்தது...

‘சை... ஒரு பெரிய அக்கவுன்ட்டை மானேஜ் பண்ணிகிட்டு... இப்படி பப்ளிக்கா ஒரு பொண்ணை முழுங்குற மாதிரி பார்க்கிற! நீ இவ்வளோ தானா!’, என்று இன்னும் ஆர்யமன் தகுதி இறங்கியது சசி மனதில்..  

அதற்கு மேல் அங்கே நிற்க பிடிக்காமல் சசி முகுந்த்திடமே திரும்பி விட்டாள்.

“என்ன உன் ஃப்ரண்ட்டின்  இன்னிசையை மெச்சி பாராட்டு தெரிவிச்சாச்சா ?”, முகுந்த் கேட்க இவள் மறுப்பாக தலையசைக்க...

“ம்ம்... ஆர்யமனைத் தேடிப் போய் பேசுறா.. உன் பக்கத்தில் வந்தாளா பார்த்தியா? ஒரு சேலை கொடுத்து, கொஞ்சம் அன்பா பேசினதும் அப்படியே உருகிடுற சசி!”, என்றான் முகுந்த்.

எளிதில் உணர்ச்சி வசப்படும் தன் காதலியை புரிந்தே அப்படி சொன்னான்... புசுபுசுவென்று கோபம் வந்தது சசிக்கு!

“நான் அவளுக்கு முக்கியமா தெரியாம இருக்கலாம்! ஆனா, அவ நல்ல எண்ணத்தில் செஞ்ச உதவியை உதாசீனப் படுத்தாதே முகுந்த்!”, கண்டித்தாள் சசி. உள்ளுக்குள் ஏமாற்றம் இருந்தாலும் அஞ்சனாவை விட்டு கொடுக்க மனதில்லை..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.