(Reading time: 7 - 13 minutes)

02. கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான(?) கதை இது... - தங்கமணி சுவாமினாதன் 

mannan

ன் மகள் அபரஞ்சிதாவை மணந்த ஐம்பத்தியாறு தேசத்து இளவரசர்களும் ஒவ்வொரு நாளும் இறந்துபோக தாங்க முடியா சோகத்தில் தவித்த சிங்கபுரி மன்னன் தன் நாட்டு மக்களுக்கு "என் தேசத்து மக்களே இனி உங்கள் வீட்டில் திருமண வயதில் இருக்கும் இளைஞ்ஞர்களை தினம் ஒருவராய் ஒவ்வொரு வீட்டினரும் இளவரசியைத் திருமணம் செய்ய அனுப்பவேண்டும்.அப்படி அனுப்பாத குடும்பத்தினர் கடுமையாக தண்டிக்கப்படுவர்.அவர்கள் அனைவரும் சிரச் சேதம் செய்யப்படுவர்." என பறை அடித்து தெரிவிக்கச் செய்தான்.

நாட்டு மக்கள் அனைவரும் இவ்வறிவிப்பைக்கேட்டு அதிர்ச்சி அடைந்து அழுது புரண்டனர்.என்ன கொடுமை இது?பெற்ற மகன்களை இளவரசிக்குத் திருமணம் செய்து வைத்து அதனால் தங்கள் மகன்கள் பலியாவதை எந்த பெற்றோர்தான் ஏற்றுக்கொள்வர்? ஆனாலும் கட்டளையை ஏற்றுக்கொள்ளாவிட்டால் குடும்பத்தில் அனைவரும் சிரச் சேதம் செய்யப்படுவார்களே என்ற அச்சத்தில் திருமணவயதில் இருக்கும் தங்களது மகன்களை ஒவ்வொரு நாளும் ஒருவீட்டுக்கு முறை என்று வைத்து அரண்மனைக்கு இளவரசி அபரஞ்சிதாவை மணக்க அனுப்பிவைக்க முதலிரவு அறைக்குள் ஒவ்வொருவராய் அபரஞ்சிதாவைத் தொடும் முன்பே மாண்டு போயினர்.பெற்றவர்கள் செய்வதறியாது கதறி அழுதனர்.நாட்டில் வாலிபர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இளைஞர்கள் குறைந்து போயினர்.கொஞ்சனஞ்சம் இருப்பவர்களும் தங்களின் வரப்போகும் சாவு நாளை நினைத்து நினைத்து அஞ்சி அஞ்சி அழுதனர்.நாடே துன்பத்தில் தவித்தது அரசனின் ஆணையாலும் அவனின் கொடுஞ் செயலாலும்.

ந்தப் பெண்மணி வயதானவர்.அவருக்கு ஒரே மகன்.கட்டுடல் கொண்ட காளை.

ஆணழகன் அவன்.இளம் வயதிலேயே தந்தையை இழந்து தாயால் மிகுந்த பாசத்தோடும்,வீரத்தோடும் வளர்க்கப்பட்டவன்.ஒரு பெண்ணை உயிருக்குயிராய் காதலித்து வந்தான் அவன்.அந்த இளைஞன் அன்று இளவரசிஅபரஞ்சிதாவை மணக்கச் செல்லவேண்டிய முறை நாள்.

தன் ஒரே மகனை இளவரசியை மணக்க அனுப்பி அவன் பலியாகப் போவதை எண்ணி எண்ணி வாய்விட்டு அழுது ஒப்பாரி வைத்தாள்அந்தத் தாய்.அழுது அரற்றினாள். நிலத்தில் விழுந்து உருண்டு புரண்டு கதறினாள்.பாவம் அந்த வயதான தாய்.அப்படி அந்தத் தாய் கதறி அழுதுகொண்டு இருந்த வேளையில் அந்தப் பக்கமாக புரவி ஒன்றில் வந்துகொண்டிருந்தான் அந்த நாட்டுக்குப் புதிதான வீரன் ஒருவன்.

அவனைப் பார்த்தாலே அவன் வீராதி வீரன் சூராதிசூரன் புஜ பல பராக்ரமசாலி எதற்கும் அஞ்சாத மனத் திண்மை கொண்டவன் என்பது தெரிந்தது. வாட்டசாட்டமான உடலோடும் பார்த்தவர்களைக் கவரும் அழகோடும் தேஜஸோடும் இருந்தான்...அவ்வீரன் புரவிமீது அமர்ந்து வரும்போது லேசாய் புரவி எம்பி எம்பி நடந்துவர பாகுபலி படத்து நாயகன்போல்அவன் கையில்லா அங்கி அணிந்திருந்ததால் அவனின் திண்ணிய தோள்கள் புரவியின் எம்பி நடக்கும் நடைக்கேற்ப மேலே ஏறிஏறி இறங்கியது.பளீரென்று சிவந்த உடல்.சுருண்ட கேசம். பிறைனிலா வடிவில் நெற்றியில் பொட்டு,அரும்பு மீசை,காதுகளில் மீன்வடிவம் பொரிக்கப்பட்ட வளையம்.அவனைப் பார்த்தால் ஆணுக்கே ஆசைவரும். புரவி நடந்து வரும் அந்த வீதியில் இருபுரமும் இருந்த வீட்டுகளின் வாசலில் நின்றிருந்த ஆண்களும் பெண்களும் கம்பீரமாய்க் குதிரையில்(புரவி இனி வேண்டாம்)அமர்ந்து வரும் அவனை கண்கொட்டாமல் பார்த்தனர்.பெரும்பாலும் அங்கே இருந்தவர்கள் எல்லாம் தங்கள் மகன்களை  அபரஞ்சிதாவை மணந்தது மூலம் இழந்தவர்கள்தான்.அங்கே நின்றிருந்த பெண்களின் கண்கள் அழுதழுது சிவந்திருந்தன.

ஆனாலும் குதிரைவீரனைப் பார்த்தமாத்திரத்தில் தங்கள் சோகத்தையும் மறந்து அவன் அழகில் மயங்கினர் என்பது என்னவோ உண்மை.

அழகை ரசிப்பதில் தவறொன்றும் இல்லையே.அவனின் வசீகரம் அனைவரையும் சுண்டி இழுத்ததில் வியப்பொன்றும் இல்லை.தெருவின் இருபுரமும் நின்றிருந்தவர்களை இப்படியும் அப்படியுமாய் பார்த்தபடி வந்த குதிரை வீரனின்செவிகளில் வயதான அந்தத் தாயின் கதறல் விழுந்தது.குதிரையை அந்தத் தாயை நோக்கி செலுத்தினான்.

அந்தத் தாயின்அருகில்குதிரையை நிறுத்திவிட்டுக் கீழே குதித்தான் அந்த வீரன்.ஏன் இந்த வயதான பெண்மணி இப்படிக் கதறி அழுகிறார்..என்ன காரணமாய் இருக்கும்?இவரைப் பார்க்க மிகவும் பாவமாக உள்ளதே?என நினைத்தவாரே..தாயே..ஏன் இப்படி அழுது புலம்புகிறீர்கள்?என்ன கெடுதல் நேர்ந்தது தங்களுக்கு?அதனைச் செய்தவர் யார்?கூறுங்கள் தாயே..நான் உங்களுக்கு உதவுகிறேன்..என்று அந்தத் தாயிடம் வினவ..பெருங்குரலிட்டுஅழ ஆரம்பித்தாள் அந்தத் தாய்.

அப்பா தங்களைப் பார்த்தால் வேற்று நாட்டினர் போல் தெரிகிறது.இன்னாட்டில் நடக்கும் பெருந்தீங்கு பற்றி உங்களுக்குத் தெரியாது.தெரிந்தால் எனக்கு உதவ நீங்கள் முன்வரமாட்டீர்கள்.யார்தான் முன் வருவார்? உயிரை இழக்க யாருக்குத்தான் துணிவு உண்டு?அவசரப்பட்டு வாக்கு ஏதும் கொடுத்து விடாதீர்..என் துன்பத்திற்கான காரணத்தை நான் சொன்னால் எனக்கு உதவுவதாக சொன்ன நீங்கள் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் இவ்விடம் விட்டு சென்றுவிடுவீர்கள்..என்று அழுதவாரே சொன்னாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.