(Reading time: 7 - 13 minutes)

 

தற்கும் அஞ்சாத துணிவுடையவன் போல் தெரிந்த அந்த வீரன் சற்றும் தாமதிக்காமல் தாயே..தயங்கவேண்டாம்..நான் எதற்கும் அஞ்சாதவன்..உங்களின் துன்பத்திற்கான காரணத்தை உடனே சொல்லுங்கள்..என்னை உங்கள் மகனாகக் கருதி தயங்காமல் சொல்லுங்கள் என்றான்.

அந்தத் தாயும் அழுகையை நிறுத்தி கண்களைத் துடைத்தவாறே இளவரசிக்கு நடந்த திருமணங்கள் பற்றியும் முதலிரவில் மாப்பிளைகள் ஒவ்வொருவராய் இறப்பது பற்றியும் மன்னனின் ஆணை பற்றியும் அன்று தனது மகனின் முறை என்பது பற்றியும் விரிவாய்ச் சொல்லிவிட்டு..நான் என் ஒரே மகனை எப்படி இழப்பேன்? எனச் சொல்லி மீண்டும் அழ ஆரம்பித்தாள்.

குதிரை மீது வந்த வீரனுக்கு இளவரசியின் நிலை கண்டு வருத்தமும் மன்னனின் ஆணை கேட்டு கோபமும் வந்தது.

தாயே கவலை கொள்ளாதீர்கள்.இன்று உங்களின் மகனுக்குப் பதிலாக இளவரசியை மணந்துகொள்ள நான் செல்கிறேன்.என்னை தங்கள் மகனென்று சொல்லிவிடுங்கள் மன்னனிடம்...பிறகு நடப்பதனைத்தயும் நான் பார்த்துக்கொள்கிறேன்.நீங்கள் சிறிதும் கலங்க வேண்டாம்.உங்கள் மகனோடு நிம்மதியாய் வாழுங்கள் என்றான்.

ஐயோ வேண்டாமப்பா..நீ யார் பெற்ற பிள்ளையோ?உனக்கு ஏதும் ஆகிவிட்டால் உன் பெற்றொர் எவ்வளவு துன்பம் அடைவர்?என் மகனுக்கு எது விதியோ அதன்படியே நடக்கட்டும்.நீ செல்வாயாக என்றாள் அந்தத் தாய்.

அப்போது தூரத்தில் அரண்மனை ஆட்கள் அந்தத் தாயின் மகனை அழைத்துச் செல்ல குதிரைகள் மீது வந்துகொண்டிருந்தனர்.அதைப் பார்த்த அந்தத்தாய் ஓவென்று அழ ஆரம்பித்தாள்.சட்டென அந்தத் தாயின் கால்களில் விழுந்த குதிரை வீரன் தன்னைத் தன்னுடைய மகன் என்று சொல்லும்படி வற்புறுத்தினான்.அரண்மனை ஆட்கள் இவர்களின் அருகில் வந்து அந்தத் தாயின் மகனை இளவரசியை மணந்துகொள்ள அழைத்துச் செல்ல வந்திருப்பதாகக் கூற குதிரை வீரன் தானே அந்தத் தாயின் மகனென்றும் அவர்களோடு வர ஆயத்தமாக இருப்பதாகவும் கூறி அந்தத் தாயை வணங்கிவிட்டு அவர்களோடு செல்ல குதிரைமீது ஏறினான்.காற்றென அரண்மனை நோக்கிப் பறந்தன குதிரைகள்.

அரண்மனை விழாக்கோலம் பூண்டிருந்தது.இருக்காதா பின்னே?தினம் தினம் அல்லவா திருமணம் நடக்கிறது அரண்மனையில்.

அரண்மனை வாசலுக்குச் சென்றதும் அரண்மனை ஆட்கள் அவரவர் குதிரையிலிருந்து குதிக்க நம் குதிரைவீரனும் வெகு அலட்சியமாயும் லாகவத்தோடும் குதிரையிலிருந்து தொப்பென்று குதிக்க அந்த அதிர்வில் அங்கே தானியங்களைத் தின்றுகொண்டிருந்த புறாக்கூட்டம் பயத்தில் சடசடவென இறக்கைகளை அடித்துக்கொண்டு கீழேயிருந்து மேல் நோக்கிப் பறந்தன.கீழே குதித்த குதிரைவீரனின் பார்வை புறாக்கள் மேலெழும்பிப் பறப்பதைப் பார்த்தவாறே அரண்மனை மாடம் வரை சென்றது.

அப்படிப் பார்த்தவனின் வாயிலிருந்து அவனை அறியாமலேயே ஹம்ம்ம்ம்மா..என்ற சொல் வேகமாய் வந்து விழுந்தது.அப்படியே திகைத்துப் போனான் அவன்.திகைப்பால் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்திருந்த கை சற்றே தளர்ந்து அவன் முதுகு குதிரையின் மீது சாய்ந்தது.அப்படி அங்கே எதைப்பார்த்தான் அந்த அழகன் அந்தக் குதிரை வீரன்..?.அவன் திகைப்புக்குக் காரணம் என்ன..?

மாடத்தில் குதிரை வீரன் பார்த்தது என்ன? அடுத்தவாரம் பார்ப்போமா?..நன்றி...

தொடரும்...

Episode 01

Episode 03

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.