(Reading time: 17 - 33 minutes)

ஜய்யும், "சார்..  ஹவ் இஸ் இட் பாசிபிள்?"

சாரதாவோ,  'ஈஸ்வரா.. இதென்ன சோதனை.. இந்த மனுஷர் வாயிலே இப்படிபட்ட வார்த்தைகள் வரலாமா?.. இதை கேட்டும் நான் உயிரோட வேறு இருக்கனுமா?.. நான் என்ன பண்ணுவேன்.. எனக்கு இந்த சோதனையை கொடுக்கனுமா?.. தாயே.. இத்தனை நாளா என்னை காத்தது இப்படி ஒரேடியா என்னை எடுத்துண்டு போரதுக்கா?.. இப்ப நான் என்ன பண்ணுவேன்.. நான் வாயை திறந்தால் அதுனாலே எத்தனை பேர் பாதிக்கப்படுவா?..'என மனதுக்குள் புலம்பியபடி, எப்படியாவது அவரை தடுக்க நினைத்து..

"என்ன பேசறீங்கோன்னா நீங்கள்?.. அது எப்படி சாத்தியமாகும்?" என சாரதா மெல்ல முனக,

அதற்குள் வசந்தே, "அப்பா.. என்ன இது .. நீங்க பாட்டுக்கு என்னென்னவோ பேசிண்டே போறேள்.. அதான் நான் சொல்லிட்டேன் இல்லை.. ஏதோ தெரியாத்தனமா காதலிச்சிட்டேன்.. தப்பு பண்ணிட்டேன்.. ஒத்துக் கொள்கிறேன்.. நீங்க நினைக்கரது மாதிரி நான் பெரிசா தப்பும் செய்யலை.. அந்த பெண் கவிதா என்னை அப்படி ஒன்னும் உசிரா காதலிக்கவும் இல்லை, நான் அவளுக்கு நம்பிக்கை துரோகம் பண்ணிட்ட மாதிரி நீங்க நினைக்க வேண்டாம்.. அவளுக்கு நான் ஜஸ்ட் பாஸ் டைம் தான்.. இத்தனை நேரம் அவாத்துல அவளுக்கு டாக்டரோட நிச்சயமே பண்ணியிருந்தாலும் ஆச்சர்யம் இல்லை.. இனி அவாளை பத்தி நாம பேச வேண்டாம் ப்ளீஸ்"..

"அவ போகும் பொழுது வேணுன்னே என் பேர்ல பழி போட்டுட்டு போயிருக்கா.. அவ ஈகோவை நான் ஹர்ட் பண்ணிட்டேன்னு, தேவையில்லாமல் பைரவியை இழுத்து என்னோட சம்மந்தம் பண்ணியிருக்கா.. பைரவி என்னோட நல்ல பிரண்ட்.. என் உடன் பிறவா தங்கை..அவா எனக்கு மஹி மாதிரி சிஸ்டர் தான்.. எனக்கு எத்தனையோ விஷயத்துல அவா ஹெல்ப் செஞ்சிருக்கா.. நான் அவளுக்கு ரொம்பவே கடமை பட்டிருக்கேன்..அவ்வளவுதான்.. என்னோட நினைப்பெல்லாம் இனிமே, என் உத்யோகம் மட்டும் தான்" என வசந்த் பேசி முடித்தான்.

'அம்மாடி, இந்த பையன் என் வயத்துல இப்பத்தான் பாலை வார்த்தான்' என நிம்மதி பெருமூச்சு விட்டார் சாரதா..

பைரவிக்கும், அஜய்குமே சற்று நிம்மதியாக இருந்தது..

"ஏன்ப்பா.. உனக்கு பைரவியை பிடிக்கலையா.. பேச்சுன்னு வந்தாச்சு.. இந்த பொண்ணுக்கு என்ன குறை?.. நீ ஏன் யோசிக்கறே?.. அம்மாவுக்கும் அவளை ரொம்ப பிடிச்சிருக்கு.. பைரவி என்னோட இன்னொரு பொண்ணு.. அப்படின்னு சொல்லிண்டே இருக்கா.. எனக்குமே அவளை ரொம்ப பிடிச்சிருக்கு..ஏன் அவ இந்தாத்து மாட்டுப் பொண்ணா வரக் கூடாதா என்ன?.. உங்க அக்காக்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆயாச்சு.. இன்னும் என்ன?.. நீ சரின்னு சொன்னா, நான் அவாத்துல பேசி பார்கட்டுமா?..

"ஏம்மா பைரவி நீ என்ன சொல்லறே... உனக்கு என் பையன் வசந்தை பிடிச்சிருக்கா?"  என நேரடியாகவே ராமமூர்த்தி பைரவியை கேட்க,

"இப்போ கூட நீங்க என்னை ஏற்று கொள்ள மாட்டீங்களா!!... என்னை இந்த இக்கட்டில் இருந்து காப்பாற்றுங்களேன்!!"  கண்களால் யாசித்த தன் மகள் பைரவியை பார்த்தவர்,

'ஒரு நிமிடம் முன் நெஞ்சில் பாலை வார்த்தவர், இப்பொழுது தலையில் இடியை இரக்க, இதற்கு மேல் சும்மாயிருந்தால், பத்து மாதம் சுமந்து பெற்றதற்கு அர்த்தமே இல்லை.. ஒரு தாயாய் இனி என் மகளுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.. போதும் , இனி என் மகளை தவிக்க விட்டது'  என நினைத்த சாரதா, பைரவியை தன்னுடன் சேர்த்தணைத்துக் கொண்டு,

"எப்படி முடியும்... இது சாத்தியமே இல்லை.. பைரவி என்னோட மகள் தான்"..

"அதானே நானும் சொல்லறேன்.. பைரவியை நீ பொண்ணா பார்த்துக்கரே.. ஏன் அந்த பொண்ணு நம்மாத்து மாட்டுப்பெண்ணா வரக் கூடாது?." புரியாமல் ராமமூர்த்தி கேட்க,

"அய்யோ.. எப்படி முடியும்.. அவள் எப்பொழுதும் என்னோட பெண் மட்டும் தான்.. 

‘”பைரவி நான் பத்து மாதம் என் வயிற்றில் சுமந்து, நானே பெற்ற என் பெண்.”

சாரதா, பைரவியை உச்சி முகர்ந்து கட்டியணைத்து அழ துவங்க,

"அம்மா.. நான் உங்களை அப்படி கூப்பிடலாமா"  என பைரவியும் கண்ணீர் வடிக்க,

அங்கே தாயும், மகளுக்குமான ஒரு புது சங்கமம் தோன்றியது...

அஜய் அவர்களை கண்டு தன் கண்களில் தோன்றிய கண்ணீரை துடைக்க மறந்து அவர்களை பார்த்தபடி இருக்க,

ராமமூர்த்தியும் அவர்களை பார்த்து புரியாமல் 'என்ன இது புது குழப்பம்' என பார்க்க,

வசந்தும், மஹதியும் புரியாமல் தங்கள் அன்னையை பார்க்க,

அஜய் தான் முதலில் சுதாரித்தான்..

"ஆம் .. அத்தை சொல்வது நிஜம் தான்.. பைரவி உண்மையிலேயே சாரதா அத்தைக்கும், அத்திம்பேருக்கும் பிறந்தவள் தான்"  என்றான்.

"என்னப்பா சொல்லறே..  சாரதா, என்னடி இங்கே என்ன நடக்கிறது?.. பைரவி அஜய் சொல்லாறாப்ல நம்ம பொண்ணா?.. அப்ப வசந்த்?"  என நிறுத்த,

ஏற்கனவே கொஞ்சம் விஷயம் பைரவி மூலம் அறிந்திருந்த மஹதி அஜய்யை பார்க்க, "நீ நினைப்பது சரிதான்" என அவன் தலையாட்டினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.