(Reading time: 11 - 21 minutes)

ரிம்மா, நாளைக்கு நீங்க தனியாப் போக வேண்டாம். நானும் உங்களோட வரேன். ரெண்டு பேரும் சேர்ந்தே அவங்க வீட்டுக்குப் போகலாம்”

“சரிடா. நாளைக்கு அப்பறம் நமக்கு கண்டிப்பா இந்த வீட்டுல இடம் இல்லை. அதனால நான் போய் முக்கியமான டாகுமென்ட்ஸ், சர்டிபிகேட்ஸ், பேங்க் பாஸ்புக், உன்னோட என்னோட நகை எல்லாம் எடுத்து வச்சுக்கறேன். உனக்கும் ஏதானும் எடுக்கணும்ன்னா எடுத்து வச்சுக்கோ. அப்படியே ஒரு நாலைஞ்சு டிரஸ் பாக் பண்ணிடு. எல்லாத்தையும் கொண்டு போய் மாமா வீட்டுல வச்சுட்டு அப்பறம் நாம அந்தத் தம்பி வீட்டுக்குப் போகலாம்”

“அம்மா நான் ஒண்ணு சொல்லுவேன். தப்பா நினைக்காத. நம்ம என்னதான் வாக்குமூலம் கொடுத்தாலும் அவங்க நம்ம பேச்சை நம்ப எவிடென்ஸ் வேணும். அவங்க வீட்டுல திருப்பி கொடுத்ததெல்லாம் இப்போ இருக்காம்மா. அது இருந்தா அதையும் எடுத்துக்கோங்க”

“இல்லைடி, அவங்க வீட்டுல கொடுத்த உடனேயே நம்ம பொண்ணா இப்படின்னு ஆத்திரத்துல அவளை அடிக்கத்தான் தோணிச்சு. உங்கப்பாதான் அதை எல்லாம் வாங்கி வச்சாரு. இப்போ போய் அதைக் கேட்டேன்னு வைய்யி. கண்டிப்பா அவருக்கு சந்தேகம் வந்திடும். அப்பறம் முதலுக்கே மோசமாப் போய்டும்”

“நீங்க சொல்றதும் சரிதான்ம்மா. நாம இந்த மாதிரி அவங்களுக்கு உதவப் போறோம்ன்னு அப்பாக்குத் தெரியாமப் பார்த்துக்கறது ரொம்ப முக்கியம். ஆனாலும் உங்களுக்கு குண்டு தைரியம்மா. அப்பாவும், அக்காவும் வீட்டுக்குள்ள இருக்கும்போதே இப்படி பிளான் போடறீங்க. அவங்க கேட்டா என்ன ஆகறது”

“அதெல்லாம் கேக்காது. விட்ட வக்கீல் நோட்டீஸ்க்கு அவங்க பதில் என்னவா இருக்கும், அவங்க அதுக்கு பதில் சொன்னாங்கன்னா அடுத்து எந்த வகைல அவங்களை மிரட்டலாம் அப்படின்னு ரெண்டு பேரும் இப்போ பிளான் போட்டுட்டு இருப்பாங்க. ரெண்டாவது நாம இப்படி எல்லாம் யோசிச்சு அவங்களுக்கு எதிரா முடிவு எடுப்போம்ன்னு நினைக்கவே மாட்டாங்க”, இருவரும் பேசியபடியே மறுநாளைக்கு தேவையான அனைத்தையும் எடுத்து வைத்தார்கள்.

வர்களின் நல்ல நேரமாக விமலாவும், அவள் அப்பாவும் காலையிலேயே கிளம்பி வெளியில் சென்று விட, இருவரும் முடிவு எடுத்தபடி முதலில் விமலாவின் மாமா வீட்டிற்கு சென்று அனைத்துப் பொருட்களையும் வைத்து விட்டு, இவர்கள் திடுதிப்பென்று சாமான், செட்டுக்களுடன் வந்ததால் அதிர்ந்து கேள்வி கேட்ட அவர்களிடம் வந்து விளக்கம் கூறுவதாகக் கூறிவிட்டு ஸ்ரீதர் வீட்டை வந்தடைந்தார்கள்.

அவர்கள் ஸ்ரீதர் வீட்டை அடையும்பொழுது மதிய நேரம், ஸ்ரீதரின் தாயாரும், தந்தையுமே அப்பொழுது வீட்டில் இருந்தார்கள். அழைப்பு மணியின் சத்தத்தைக் கேட்ட ஸ்ரீதரின் தந்தை இன்று என்ன குண்டு வரப்போகிறதோ என்ற பயத்துடனேயே வந்து கதவைத் திறக்க, அங்கு நின்றிருந்த விமலாவின் அன்னையையும், தங்கையையும் பார்த்து அதிர்ந்து நின்றார்.

தொடரும்

Episode # 17

Episode # 19

{kunena_discuss:857} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.