(Reading time: 10 - 20 minutes)

ப்போதும் ப்ரத்யா “நான் கேட்கவில்லை வித்யா. எனக்கு பஸ்ஸில் செல்வது பழக்கமே. கொஞ்சம் டயர்டாக இருப்பதை பார்த்து உன் அண்ணன் சொல்கிறார். நான் அவரிடம் வேண்டாம் என்று சொல்லி விடுகிறேன். “

அதற்கும் “ஒஹ் ..நானும், அம்மாவும் கெட்ட பெயர் வாங்க வேண்டும் என்று இதை சொல்ல போகிறீர்களா?” என்று வித்யா பேசவும்,

“அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன். இதற்கு மேல் பேச எனக்கு நேரமில்லை. நான் evening ஒரு reception செல்கிறேன். அங்கே சாப்பிட்டு விட்டுதான் வருவேன். கிளம்புகிறேன்” என்று சென்று விட்டாள்.

வித்யாவும், அவள் அம்மாவும் ப்ரத்யா பாதி பேச்சில் சென்று விட்டாள் என்று வசை பாடிக் கொண்டிருந்தனர்.

உடனே ஆதியிடம் பேச வேண்டும் என்று எண்ணியவள், இருக்கும் இடத்தை எண்ணி அமைதியாகி விட்டாள்.

அவள் முகம் பார்த்த பிரியா

“என்ன ஆச்சு ப்ரத்யா? ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்று கேட்க,

அவளிடம் சொல்ல எண்ணியவள், ஏற்கனவே அவளுக்கு கொஞ்சம் தெரியும் என்றாலும், இதையும் சொன்னால், அவள் அவர்கள் இருவர் மேலும் கோபப்படக் கூடும் .. என்று பேசாதிருந்து விட்டாள். என்னதான் பெஸ்ட் பிரண்ட்ஸ் என்றாலும், தன் மாமியார், வித்யாவை பற்றி குறை கூறினால், அவள் தன் கணவனையும் தவறாக எண்ணக் கூடும் என்று தோன்றியது.

பெற்றோர் செய்து வாய்த்த திருமணம் என்றாலும், ஆதியின் குணமோ, அக்கறையோ இல்லை மஞ்சள் கயிறின் மகிமை என்பார்களே .. அதுவோ ஏதோ ஒன்று.. அவள் மனம் ஆதியிடம் சரணடைந்து விட்டது. அதனால் ஆதிக்கு எந்த விஷயத்திலும் முக்கியமாக தன்னால் அவமானம் ஏற்படக் கூடாது என்று விரும்பியது.

அதனால்தான் வீட்டில் நடந்த விஷயங்களை தன் தோழியிடம் மறைத்து விட்டாள். இன்னும் சொல்ல போனால் தன் பெற்றோரிடம் கூட அவள் எதுவும் சொல்வதில்லை. இதனால் அவளுக்கு ஏற்படப் போகும் பாதிப்பை பற்றி அவள் அறியவில்லை.

பிரியா பதிலுக்கு காத்திருப்பதை உணர்ந்து ,

“ஒண்ணுமில்லமா... வெயிலில் போய் வந்தது.. தலை வலிக்கிறது.. “என்றாள்.

“சரி.. சாப்டியா? “ அவள் இல்லை என தலையசைக்கவும், அவளை திட்டி சாப்பிட அனுப்பினாள். அவள் அக்கறையில் மனம் கனிந்தவளாக சாப்பிட்டு வந்தாள்.

அன்று இரவு அந்த reception சென்று வீட்டிற்கு வந்த போது, அவள் வீட்டினர் லைட் எல்லாம் அணைத்து விட்டு படுத்து விட்டனர். இத்தனைக்கும் வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண் இருக்கும் இடத்தில், அவர்களுக்கு தொந்தரவாக இருக்க கூடாது என்று எண்ணி ஒன்பது மணிக்கு முன்னால் வந்து விட்டாள்.

அவளுக்கு கதவை திறந்த மாமியார், அவள் நுழையும் போதே , “வீட்டில் இருப்பவர்கள் நிலைமை தெரியாது. அசதியில் வித்யா தூங்க போய் விட்டாள். இப்போ calling bell சத்தத்தில் முழித்து விட போகிறாள். போ.. சத்தம் செய்யாமல் இரு.” என்று விட்டு உள்ளே சென்று விட்டார்.

ஒஹ்.. இது தான் மாமியார் உடைத்தால் மண் குடம்.. மருமகள் உடைத்தால் பொன் குடமோ .. என்று எண்ணி சிரித்தாள்.

ழக்கம் போல் இரவில் பேசிய ஆதி,

“என்னடா ... இன்று reception எப்படி இருந்தது.?” முதல் நாள் அவள் சொல்லியிருந்ததால் அவன் கேட்டான்.

“ஹ்ம்ம். நல்லா நடந்தது..” என்று பதில் சொல்லவும், அவளின் கலகலப்பான பேச்சை எதிர்பார்த்தவன், அவள் அமைதியாக இருக்கவும்,

“என்னடா. . செல்லம்.. இன்று அமைதியா இருக்க? “

“ஹ்ம்ம். இன்று மதியம் அத்தைக்கு பேசினீங்களா?”

“ஆமாம்.. எப்போதும் பேசுவதுதானே.”

“இல்லை. ஸ்கூட்டி வாங்குவது பற்றி பேசினீங்களா?”

“ஆமா. ஏன் எதுவும் சொன்னாங்களா?”

“பச்ச்.. நான் தான் சொன்னேன் இல்ல.. இப்போ வேண்டாம். பார்க்கலாம் என்று. அதுக்குள்ள ஏன் கேட்டீங்க.. ? அவங்க அது அனாவசிய செலவு தானேன்னு சொல்றாங்க. அதுவும் கரெக்ட் தானே.”

“அத பத்தி நான் பேசிக்கிறேன். நீ பேசாமல் இரு.”

“வேண்டாம் ஆதிப்பா.. அவங்கள மீறி செய்ய வேண்டாம்.”

“ஏய்.. நான் உன்ன அங்க என் பொண்டடியாதான் விட்டு வந்துருக்கேன். வேலைகாரியா இல்ல.. புரியுதா?”

“இப்போ என்ன அவசரம் அதுக்கு?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.