(Reading time: 10 - 20 minutes)

நான் உன்ன பார்க்கும் போது எனக்கு உன்னோட களைப்பு தெரியுது. இது வேற ஏதாவது கோளாறுலே விட்டுட கூடாது. அதோட பண விஷயம் என்னோட பொறுப்பு. “

“ஆனால் அவங்களுக்கு இது அவசியமில்லன்னு தோணுதே? நீங்க  கார் கூட வாங்காம இருக்கீங்க.? “

“நான் கார் வாங்கலை என்றால் அதுக்கு காரணம் நிறைய. எனக்கு ஆபீஸ் போய் வர கேப் இருக்கு. வித்யா படிக்க சென்று விடுவாள். அது முடிந்ததும் திருமணம். நம்ம மெட்ராஸ் டிராபிக்கில் போய் வர பைக் சவுகரியம் என்றுதான் கார் வாங்கவில்லை. நம் திருமணம் அவசரமாக நடை பெற்றது, மேலும் நானும் வெளிநாடு சென்று விடுவேன் என்பதால், கார் இப்போ வாங்குவதை விட, நான் திரும்பிய பிறகு வாங்கலாம் என்று நினைத்தேன். அதில் என்ன பிரச்சினை? “

“இல்லை. வித்யா டெலிவரி சமயத்தில் தேவைபடாதா? ஸ்கூட்டி வாங்குவதற்கு பதில் கார் வாங்கலாமே?

“லூசாடி நீ.. உனக்கு வண்டி வாங்குவதற்கும், கார் வாங்கினால் உள்ள செலவுக்கும் எவ்வளவு வித்தியாசம் என்று தெரியாதா? அதோடு அதற்கு டிரைவர்க்கு என்ன ஏற்பாடு செய்வது? இதெல்லாம் நீ யோசிக்காமல் இருக்க மாட்டாய். இப்போ வித்யா எதாவது சொன்னாளா?”

“பச்ச்.” என்று சொல்லவும்,

“நான் அவளிடம் நாளைக்கு பேசுகிறேன்” என்றான் ஆதி.

“ஐயோ .. தயவு செய்து அதை மட்டும் செய்யாதீங்க. ஏற்கனவே நான் கேட்டுதான் நீங்க செய்யறீங்கன்னு நினைக்கிறாங்க. இதுலே இது வேறா?”

“சரி. அப்படினா நீ போய் வண்டி விலை எல்லாம் விசாரிச்சு சொல்லு.”

“நான்தான் வேண்டாம்னு சொல்றேன்லே.. விட்டுடுங்க. “

“நான் சொல்றத விட அவங்க சொல்றதுதான் உனக்கு பெருசா தோணுதா? நான் நீ வசதியா இருக்கணும்னு நினைக்கிறது உனக்கு முக்கியமில்லையா?”

“ஏன் பா புரிஞ்சிக்க மாட்டேன்குறீங்க? நான் அவங்களோட தானே இருந்தாகணும். அவங்களை கோப படுத்திட்டு எப்படி அவங்க முகம் பார்க்குறது?”

“சோ.. இப்போ உனக்கு வண்டி வேண்டாம். அதானே. எனக்கு எவ்ளோ கில்டியா இருக்கு தெரியுமா? நீயும் ஆசா பாசங்கள் நிறைந்த பொண்ணுதானே. இப்படி உன்னை விட்டுட்டு இருக்கறது தப்புன்னு சங்கடமா இருக்கு. இதுலே நீ மற்றவர்களால் கஷ்டப்படும் போது ரொம்ப வருத்தமா இருக்கு. என்னமோ பண்ணு.. “ என்றவன் லைன் கட் பண்ணிட்டான்.

வீடியோ சாட் செய்த பிறகு கொஞ்ச நேரம் whats up ‘ல் பேசுவது வழக்கம். குட் நைட், பாய் மட்டுமே ஒரு நாலைந்து தடவை சொல்வார்கள்.. அப்புறம் என்ற வார்த்தை ஒரு ஐந்து முறை. இப்படி பேசி விட்டு, அதற்கு பின்னும் தங்கள் மன நிலையை தெரிய படுத்தும் விதமாக பாடல் அனுப்பு விட்டு தூங்குவான்.

அன்றைக்கு ஆதிக்கு இருந்த மன வருத்தத்திலும், கோபத்திலும், ஆதி எதுவும் செய்யாமல் படுத்து விட்டான்.

ஆதி வருத்தமாக பேசியது கஷ்டமாக இருந்தது பிரயுவிற்கு.. சரி அவன் மீண்டும் பேசும் போது சரி பண்ணலாம் என்று எண்ணியிருந்தாள். அவன் பேசவில்லை என்று அவள் message அனுப்பி பார்த்தாள். அதற்கும் பதில் அனுப்பவில்லை என்றவுடன் கண்ணீரோடு உறங்கி விட்டாள்.

றுநாள் காலையில் கூப்பிடுவான் என்று எண்ணியவள், மதியம் மட்டுமில்லாமல் இரவும் கூப்பிடவில்லை. அவள் இரண்டு மூன்று முறை message அனுப்பியவள் அதற்கும் ஒன்றும் reply செய்யவில்லை என்றவுடன் அவளுக்கும் கோபம் வந்து அவனிடம் அதன் பின் பேசவில்லை. கிட்டத்தட்ட இருவரும் ஒரு வாரம் வரை பேசவில்லை.

இங்கேயோ வீட்டில் அவள் மாமியாரும், வித்யாவும் சேர்ந்து “நீதான் நாங்கள் பேசினதை சொல்லி அவன் இப்போ எங்களோடு பேசுவதில்லை .. இப்போ திருப்தியா?” என்று அவளை சொல்லால் வதைக்க ஆரம்பித்தனர்.

பிரத்யாவிற்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை. அவன் தன்னோடு மட்டுமில்லாமல் வீட்டிற்கும் பேசவில்லை என்றவுடன் பயம் பிடித்துக் கொண்டது. அவள் கவலையோடு அவன் அலுவலகத்திற்கு இ-மெயில் அனுப்பி விசாரித்த போது அவன் ஆபீஸ் வந்து கொண்டிருப்பதாக தகவல் வந்தது,

பிரத்யாவிற்கு மேலும் கோபம் அதிகரித்தது. ஏன் ஒரு வார்த்தை தினமும் நன்றாக இருக்கிறேன் என்று சொல்ல முடியாதா? என்று வெறுப்படைந்தாள். அட்லீஸ்ட் தன் வீட்டிற்காவது பேசியிருக்கலாமே என்று யோசித்தாள்.

இந்த கோபமும், வருத்தமும் கொட்ட முடியமால் தவித்தவள், தன் மன அழுத்தம் தாங்காமல் மயக்கம் வந்தது. ஆனால் அவள் வேலை செய்யும் ஹாஸ்பிடலில் வைத்து வந்ததால், உடனே பார்த்து தெளிய வைத்தார்கள். டாக்டர்ஸ் மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள ஆலோசனை சொன்னார்கள். இந்த விஷயம் ப்ரியாவிற்கு கூட தெரியாது. எல்லோரிடமும் சாப்பிடாததால் வந்த மயக்கம் என்று கூறிவிட்டாள்.

ஒரு வாரம் கழித்து ஆதி போன் செய்தான். அவள் எடுக்க வில்லை. கிட்ட தட்ட பத்து முறை அழைத்தவன், அவள் எடுக்கவில்லை என்றவுடன் ஹாஸ்பிடல் லைன் வந்தான்.

தவிர்க்க முடியாமல் அழைப்பை எடுத்து “ஹலோ” என்றாள்.

தொடரும்

Episode # 05

Episode # 07

{kunena_discuss:948}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.