(Reading time: 11 - 21 minutes)

07. அன்பே உந்தன் சஞ்சாரமே - தேவி

Anbe Undhan Sanjaarame

தி பிரயுவின் போனில் அழைத்த போது எடுக்காத ப்ரயு, ஹாஸ்பிடல் எண்ணில் அழைக்கவும் வேறு வழியில்லாமல் எடுத்து பேசினாள்.

“ப்ரயு... ப்ளீஸ் கட் பண்ணாத.. உன் போன் எடுத்து என்கிட்டே பேசு.. ஹாஸ்பிடல் போனில் ரொம்ப நேரம் பேச முடியாது. ப்ளீஸ் டா” என்று கெஞ்சவும், சரி என்று வைத்தாள்.

அவள் வைக்கவும், அவளின் மொபைலுக்கு அழைத்தான். அவள் எடுத்து, எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கவும்,

“ப்ரயு .. கோபப்படாதே .. நான் உன்கிட்ட பேசாம இருந்தது தப்புதான்.. ஆனால் அதுக்கு காரணம் இருக்கு. என்னாலே சாட் வர முடியாது.. நைட் உன்கிட்ட போன்லே பேசுறேன். ப்ளீஸ் போன் அட்டென்ட் பண்ணு..” என்றான்.

அவள் பதில் பேசாமல் இருக்கவும், “ப்ரயு .. ப்ளீஸ் பேசுடா... போன் அட்டென்ட் பண்றியா “ என மீண்டும் ஒருமுறை கெஞ்சவும் .. சரி என்று பதில் மட்டும் சொன்னாள்.

“பாய் டா..” என்று வைத்து விட்டான்.

போன் கட் செய்தவன் தன் நண்பன் பிரபுவிற்கு கால் செய்தான்.. பிரபுவும் ஆதியும் நெருங்கிய நண்பர்கள்.. இருவரும் ஒன்றாக படித்து, ஒரே நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள்.

ஆதியும், பிரபுவும் சேர்ந்துதான் அந்த onsite வேலைக்கு அடிப்படை வேலைகளை பார்த்தார்கள். ஆதியின் திருமணத்தின் போது அந்த அடிப்படை வேலைகளுக்காக இப்போது ஆதி சென்றிருக்கும் இடத்திற்கு சென்றிருந்தான்..

 “ஹலோ ... பிரபு “

“ஹே.. ஆதி சொல்லுடா... இப்போ எப்படி இருக்க.. ? “

“ஹ்ம்ம். பெட்டெர் டா... “

“என்னடா.. சோகமா இருக்க ?”

“இல்லடா.. ப்ரயு ரொம்ப கோபமா இருக்கா போல.. போன் அட்டென்ட் பண்ணாமல் கட் பண்றா ... ஹாஸ்பிடல் போன் அடித்து அவகிட்ட பேசியிருக்கேன்.. நைட் கண்டிப்பா போன் அட்டென்ட் பண்ணுனு.. அவ கோபத்தை எப்படி சமாளிக்கிறதுனு தெரியல ..”

“ஏண்டா.. நான் அன்னிக்கே சொன்னேன் ...வீட்டிலே பேசிடுன்னு.. நீ கேட்டியா ?”

“டேய்..நீ வேற .. நான் தான் என் நிலைமை சொன்னேன் லே... “

“அப்போ அனுபவி .. இன்னிக்கு நீ நைட் பேசினதுக்கு அப்புறம் இன்னும் கோபம் ஜாஸ்தி ஆக போகுது பார்த்துக்கோ ..”

“சரி ... அத நான் பார்த்துக்கிறேன்... இப்போ உன்கிட்ட நான் ஓகேன்னு சொல்லத்தான் பேசினேன்... & தேங்க்ஸ் டா... நீ நைட் பேசு..”

பிரபுவும் பை சொல்லி விட்டு வைத்தான்.

பிரத்யுவிற்கு யோசனை... ஆதியின் மேல் எவ்ளோ கோபம் இருந்தது. அவன் பேசினவுடனே.. இறங்கி விட்டேனே. அவன் பேசாமல், reply பண்ணாமல் இருந்தது சரியா.. என்றெல்லாம் மனதில் எண்ணங்கள் எங்கோ ஓடியது. அடக்கி வேலை முடித்தவள் அன்று இரவு வீட்டிற்கு சென்றாள்.

இரவு முதலில் தன் அன்னைக்கு அழைத்தவன், அவர் எடுத்தவுடனே

“ஆதி மனசுலே என்னடா நினைச்சுகிட்டு இருக்க.. ? உன் மனைவிக்கு சப்போர்ட் பண்ணலேன்னு .. இப்படி போன் பண்ணாமல் இருப்பியா? இது வரைக்கும் என்னிக்காவது இப்படி நடந்திருக்கியா ? எல்லாம் அவள் சொல்லி குடுத்து செய்யறியா ? நீ அவளுக்கு என்ன வேண்டும் என்றாலும் வாங்கி கொடு.. எங்கிட்ட எதுவும் கேட்காத ..” என்று பொரிந்து விட்டார். ஆதியை பேசவே விடவில்லை.. அவர் நிறுத்த மாட்டார் என்றவுடன்

“அம்மா .. என்று சத்தமாக அழைத்தவன் அவர் நிறுத்தவும் “கொஞ்சம் நான் சொல்றத கேட்கறீங்களா ..? எனக்கு இங்கே கொஞ்சம் உடம்பு சரியில்ல.. அதனால் பேசல. நான் உங்ககிட்ட சொன்னால் நீங்க கவலைபடுவீங்கனு சொல்லலே.. அதோட இதுவரைக்கும் இப்படி இருந்தேனான்னு கேட்கற நீங்க, இது வரைக்கும் நான் சொல்லி ஏதாவது மறுத்து பேசியிருக்கீங்களா ? இப்போ நான் எது செய்தாலும் அதை ஏன் பிரயுவோட சம்பந்தப் படுத்தறீங்க ...  உங்க கிட்ட நான் இத எதிர்பார்க்கல “ என்று அவன் நீளமாக பேசி முடிக்கவும், அவன் அன்னைக்கு பதில் வரவில்லை.

கொஞ்சம் கழித்து “என்னவோ சொல்லு.. அப்புறம் .. “

“வித்யா, நீங்க நல்லாருக்கீங்களா ? செக் up போயிட்டு வந்தீங்களா?’

“ஹ்ம்ம்.. எல்லாம் நார்மல் தான்.. அப்புறம் இந்த வார கடைசிலே அவள அவங்க வீட்டுலே கொண்டு விடனும்.. வெறுங்கையோட அனுப்ப முடியது. அவளுக்கும், மாப்பிள்ளைக்கும் டிரஸ் எடுத்துட்டு , கொஞ்சம் பலகாரம் செஞ்சு கொடுத்து அனுப்பனும்.”

“சரி.. நீங்க வேணுங்கறத எடுத்துக்கோங்க... வேற எதுவும் இல்லை லே.. “ என்று கேட்டு வைக்க போனவன்,

“ஆதி “ என்ற தன் அம்மாவின் அழைப்பில், மீண்டும்

“சொல்லுங்கம்மா “ என்றான்

“இல்லை. உடம்பு சரியில்லைனு சொன்னியே.. என்னாச்சுடா ? “

“ஒண்ணுமில்லமா .. கிளைமேட் மாறினதுலே கொஞ்சம் காய்ச்சல் .. வேற ஒன்னும் இல்லை.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.