(Reading time: 11 - 21 minutes)

துக்கு ஏண்டா இத்தனை நாள் பேசாம இருந்த ?”

“இல்லமா.. இங்கே என்னை கவனிச்சிக்க யாரும் இல்லலயா.. அதுனாலே ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகிட்டேன்.. அங்க போன்லாம் பேச கூடாது.. அதோட .. சொன்னா நீங்க கவலைப்பட போறீங்கன்னு தான் சொல்லலே.”

“இப்போ எப்படி இருக்கடா.. ?”

“நல்லா இருக்கேன் மா .. வீட்டுக்கு வந்துட்டேன் .. இன்னும் ரெண்டு நாள் கழிச்சு வேலைக்கு போக ஆரம்பிச்சுடுவேன் “

“சரி டா.. உடம்ப பார்த்துக்கோ.. சத்தானதா சாப்பிடு.. ரொம்ப கவலையா இருக்குடா... எதுனாலும் பேசாமல் இருக்காதா... சரியா ?”

“சரிம்மா... நான் பார்த்துகறேன் .. நீங்க கவலைபடாதீங்க. பாய் மா..” என்று வைத்தான் .

பிரயுவின் மாமியார் பேசியது அவள் காதிலும் விழுந்தது. அவன் அழைக்கும் போது எடுக்க மனமில்லை.. இருந்தாலும் இதனால் எந்த லாபமும் இல்லை என்று எண்ணியவளாக எடுத்தாள்.

“பிரயும்மா .. “

“ஹ்ம்ம் ..”

“சாரி டா .. உனக்கு போன் பண்ணாம விட்டதுக்கு “

“என் மேல என்ன கோபம்.? நான் பேசினதிலே என்ன தப்புன்னு தெரியல ?” என்று அவள் கூறும் போதே அவள் குரல் கலங்கவும், ஆதிக்கு துடித்தது.

“ஹேய்.. உன்கிட்ட கோபமெல்லாம் சத்தியமா கிடையாதுடா... அன்னிக்கு எனக்கு கில்டி பீலிங்க்ஸ் தான்.. வேற ஒண்ணுமில்ல “

“அப்போ ஏன் பேசல ? messageக்கு reply பண்ணல..”

“அது.. நான் சொல்றது கேட்டு டென்ஷன் ஆகாத.. அன்னிக்கு மறுநாள் எனக்கு சின்ன accident ஆயிடுச்சு.. ஹாஸ்பிடல் அட்மிட் ஆயிட்டேன்... அங்கே போன் யூஸ் பண்ண விடல.. அதான் பேசல “

“hospital அட்மிட் ஆயிருந்தீங்களா ? ஆனால் உங்க ஆபீஸ் க்கு மெயில் அனுப்பி கேட்டேனே... அவங்க ஆபீஸ் வந்ததா சொன்னாங்களே ...”

“ஆமாம்.. கம்பெனி மெயில் ஐடி .. என் செகரட்டரி தான் ஓபன் பண்ணுவாங்க... நான் தான் அப்படி reply கொடுக்க சொன்னென்..”

“ஏன்.. வீட்டுக்கு சொல்லலே .. உங்களுக்கு ஏதோ ஒன்னுனா எங்களுக்கு எப்படி தெரியும்...? ஏன் இப்படி பண்றீங்க ?” என்று கிட்டத்தட்ட அழ ஆரம்பித்து விட்டாள்.

“ஹே.. குட்டிமா .. ப்ளீஸ் அழாதடா ... நீங்க எல்லோரும் பயப்படுவீங்கன்னுதான் சொல்லலே.. எனக்கு ஒன்னும் இல்லடா.. “

“அம்மா கிட்ட ஜுரம்ன்னுதானே சொன்னீங்க.. ஆனால் இப்போ accident ன்னு சொல்றீங்க..”

“accidentன்னு  சொன்னால் அம்மா ரொம்ப பயப்படுவாங்கன்னு சொல்லலே.. ஜுரம்னா.. எல்லாருக்கும் வரதுன்னு கொஞ்சம் easy எடுத்துப்பங்கன்னு அப்படி சொன்னேன். ஆனால் உன்கிட்ட பொய் சொல்ல விரும்பல. “

“பெரிய அடியா.. ஒன்னும் பயமில்லியே.. நான் வேணும்னா அங்கே வரவா ?”

“சின்ன பிராக்ச்சர் தான்.. கையில்தான் ... பயப்பட ஒண்ணுமில்ல.. இன்னிக்கு கட்டு பிரிசிட்டாங்க.. கொஞ்சம் வெயிட் மட்டும் தூக்காமல் பார்த்துக்க சொன்னங்க.. கைய ஸ்ட்ரெயின் செய்ய வேண்டாம்னு தான் சாட் பண்ணல.. ஒரு பத்து நாள் கழிச்சு சாட்டில் பேசலாம் ..”

போனில் பேசினால் பைசா அதிகம் என்பதோடு, வீடியோ சாட் செய்தால் ஒருவர் மற்றவர் முகம் பார்த்து பேசலாமே என்பதால்தான் அவர்கள் போனில் குறைவாக பேசுவது. இப்போ IMO போன்ற app மூலம் வீடியோ போன் பேசலாம் என்றாலும் என்னவோ சிஸ்டம் முன் உட்கார்ந்து செய்வது போல் அது easy ஆக இருப்பதில்லை.

கொஞ்சம் வருத்தம் இருந்தாலும் ப்ரயு  “சரி உடம்ப பார்த்துக்கோங்க... anti biatic டேபிலேட் கொடுதுருக்கங்களா.. சாப்பாடு எப்படி சாப்பிடுறீங்க? எந்த  கையில் அடிபட்டிருக்கு ?”

“லக்கிலி இடது கையில்தான் அடி பட்டிருக்கு. டேபிலேட் போட்டுட்டேன்.. சாப்பாடு இங்கே என்னோட கொலீக் ஒருத்தர் கொண்டு தறாங்க.. அது எல்லாம் ஓகே.”

“நான் விசா ட்ரை பண்ணவா?”

“முதலில் அப்படிதான் நினைச்சேன்.. ஆனால் இப்போ உனக்கு விசா ப்ராசெஸ் பண்ண என்னால முடியாது. அதோட .. இப்போ நீ வந்தா வித்யா டெலிவரி முடியற வரைக்கும் அம்மா தனியா இருக்கணும். இப்போ தான் வீட்டில் நீ நிறைய ப்ரோப்லேம் face பண்ணிருக்க. அதனால இப்போ நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன். வித்யா டெலிவரி முடிஞ்சு உன்னை என்னோட கூப்பிட்டுக்கிறேன்”

பிரயுவிற்கு வருத்தமாக இருந்தது. ஆதிக்கு accident என்றவுடன் அவள் மனது பதற ஆரம்பித்து விட்டது. அவன் சொல்வது நியாயம் தான் என்றாலும் அவள் மனது கேட்கவில்லை. ஆனால் அவளால் சரி என்றும் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.