(Reading time: 8 - 16 minutes)

06. கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது... - தங்கமணி சுவாமினாதன் 

mannan

பாம்பிலிருந்து வெளிவந்த அந்த ராஜகுமாரன்போல் இருந்த இளைஞன் தன் கதையைச் சொல்லத் தொடங்கினான்.

அழகும் வீரமும் பொருந்தி மன்னர்களுக்கெல்லாம் மன்னர்போல் விளங்குபவரே...

வணக்கதிற்குரியவரே கேளும் என் கதையை...

து மகுட நாடு.அதன் மன்னர் மகுடபதி.திக்கெட்டும் பரவியிருந்தது அவர் புகழ்.அவரின் ஆட்சியில் வளமும்,அறமும் செழித்திருந்தது.மக்கள் மன்னரின் நல்லாட்சியில் மிகவும் மகிழ்ச்சியோடு வாழந்தார்கள்.மன்னரும் நாட்டை செங்கோல் வழுவாது ஆண்டுவந்தார் . எத்தனை நல்லவராக இருந்தபோதிலும் மன்னர்க்கு தீராத மன வேதனையொன்று இருந்தது.அவ்வேதனை அவரின் மகன் இளவரசன் கீர்த்திவர்மனாலேயே உண்டானது.

இளவரசன் கீர்த்திவர்மன் மன்மதனை ஒத்த அழகன். தான் மன்னனின் மகன் மன்னர்க்குப்பின் நாட்டை ஆளப் போகிறவன் என்ற செருக்கு கொண்டவனாய் பெரியவர்களை மதிக்காது இளவரசன் என்ற திமிரோடு இருந்தான்.அது மட்டுமல்லாது வேறொரு கூடாத பழக்கமும் அவனுக்கு இருந்தது.ஆம் அவன் மகா மோசமான பெண் பித்தன்.கொஞ்சம் அழகான பெண் அவன் கண்களில் பட்டுவிட்டால் போதும் அவளை அடைந்தே தீருவான்.

திருமணம் ஆன பெண் ஆகாத பெண் என்பதெல்லாம் அவனுக்குக் கிடையாது.எந்த பெண்ணும் அழகாய் இருந்துவிடக் கூடாது.இப்படிப் பல பெண்களின் வாழ்க்கை அவனால் நாசமானது.அவன் இளவரசன் என்பதால் அவனை யாராலும் எதிர்க்க முடியவில்லை.பெண்கள் அவன் முன்னால் வரவே அஞ்சினார்கள்.தறிகெட்டுப் போய்த் திரிந்தான் கீர்த்திவர்மன்.மன்னன் மகுடபதி மகனின் இந்த அடாவடி குணத்தைக் கண்டு மிகவும் வருந்தினான்.எவ்வளவோ அறிவுரை கூறியும் கீர்த்தி வர்மன் திருந்தவில்லை.

மன்னர்க்கு இதுவே பெருக்கவலையாயிற்று.திருமணம் செய்து வைத்தால் திருந்துவான் என எண்ணி செய்து வைத்தும் பயனில்லை.அவன் திருந்தவே இல்லை.

இந் நிலையில் மகுட நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது.மழை இன்றி விளைச்சல் இல்லாமல போயிற்று.உணவின்றியும் தண்ணீரின்றியும் மக்களும் கால் நடைகளும் மற்ற அனைத்து ஜீவராசிகளும் துன்பப் படலாயினர்.குற்றங்கள் பெருக ஆரம்பித்தது.மன்னர் பெரும் கவலை கொண்டார்.

அரண்மனை ஜோதிடர்கள் இவ்வாறான பஞ்சத்திற்குக் காரணம் என்ன?அதனைப் போக்க என்ன செய்ய வேண்டுமென ஆராய முற்பட்டார்கள்.பெரும் பூஜைகளும்,யாகங்களும் செய்யப்பட வேண்டுமென ஜோதிடர்கள் அரசனிடன் எடுத்துச் சொல்ல மன்னனும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தான்.ஐம்பத்தாறு தேசங்களையும் சேர்ந்த வேத விற்பன்னர்களும் ரிஷிகளும் அந்தணர்களும் வரவழைக்கப்பட்டனர்.

அவர்களெல்லாம் நல்ல முறையில் மரியாதை செய்யப்பட்டு வசதியாய் தங்கவைக்கப் பட்டனர்.

அஸ்வமேத யாகத்திற்கு ஒப்பான பெரும் யாகங்கள் தொடங்கப்பட்டன.தினம் தினம் யாகங்கள் நடத்தப்பட்டதால் ஹோமங்களிலிருந்து கிளம்பும் புனிதப் புகை ஒரு வித நெய் மணத்தோடும் சமித்து மற்றும் மற்ற மூலிகைகளின் மணத்தோடும் நாட்டையே சூழ்ந்து புனிதமான சூழ்னிலையை ஏற்படுத்தியது.மக்கள் அனைவரும் தங்களின் மனம் தூய்மை அடைவதைப்போன்ற உணர்வைப் பெற்றனர். ஒருவரைத் தவிர.அது இளவரசன்கீர்த்திவர்மன்.

யாகத்தில் வேதங்களையும் மந்திரங்களையும் சொல்லி அவற்றைச் செய்வனே நடத்த அழைக்கப்பட்டிருந்த ரிஷிகளும் அந்தணர்களும் விற்பன்னர்களும் யாகத்தில் தம்மோடு கலந்து கொள்ள அவரவர்கள் தங்களின் மனைவியையும் அழைத்து வந்திருந்தனர்.

அப் பெண்கள் யாகம் நடக்குமிடம் வந்து கலந்து கொள்ளும் போது இளவரசன் கீர்த்திவர்மனும் அங்கு வந்து விடுவான்.அப்பெண்களில் அழகான பெண் யாரும் கண்ணில் பட்டால் போதும் அப்பெண்ணை எப்படித் தன் வழிக்குக் கொண்டுவருவது என்று சிந்திக்கத் தொடங்கிவிடுவான்.

அப்படித்தான் அவனின் கண்களில் பட்டாள் அப்சரஸ் போன்ற அழகி ஒருத்தி.அவள் ரிஷி ஒருவரின் மனைவி.அவளைப் பார்த்ததுமே தேணுண்ட வண்டானான் கீர்த்திவர்மன்.அவளின் அழகு அவனை வெறி கொள்ளச் செய்தது.எப்படியும் அவளை அந்த அழகியை அடைந்தே தீருவது என்று தீர்மானித்தான் அவன்.அதற்கான தருணத்தை வாய்ப்பை எதிர்பார்த்திருந்தான்.

அவனின் நல்ல காலமோ?கெட்ட காலமோ?அப்பெண்ணின் கணவர் ஒரு மிக வயதான கிழ ரிஷி என்பதும்  அவள் வாழ்வில் அவரால் சுகம் ஏதும் அனுபவித்திராதவள் என்பதும் இளவரசனின் அடிவருடிகளால் அல்லக் கைகளால் எடுபிடிகளால் அறிந்து வந்து அவனுக்குத் தெரிவிக்கப் பட்டபோது அவன் தனது எண்ணம் ஈடேருவது கடினமில்லை என்று கருதினான்.மிக கவனமாகக் காய் நகர்த்தினான்.அவனின் எண்ணம் ஈடேறும் நாளும் கனிந்தது.பாவம் அந்த ரிஷியின் இளம் மனைவி இவனின் நயவஞ்சகப் பேச்சில் மயங்கி தவறு செய்யத் துணிந்தாள்.

அவர்கள் இருவரும் ஒரு நாள் கொஞ்சம் நெருக்கமாக இருந்தபோது அங்கு வந்து விட்ட அந்த வயதான  ரிஷி பெருஞ்சினம் கொண்டு இளவரசன் கீர்த்திவர்மனை மிகச் சிறுபாம்பாக மாற வேண்டுமென்றும் தனக்கு துரோகம் செய்த தன் மனைவி ஒரு அரசனுக்கு மகளாய்ப் பிறந்து தினம் தினம் திருமணமாகி எந்தக் கணவனோடும் கலக்காமல் ஆண் கலப்பின்றி அல்லலுற வேண்டுமென்றும்.அப்படி அவள் மன்னன் ஒருவனுக்கு மகளாய்ப் பிறந்ததும் பாம்பாய் மாறிய கீர்த்திவர்மன்  அவளின் செவியில் நுழைந்து அங்கேயே இருக்க வேண்டுமென்றும் தினம் ஒரு திருமணம் நடக்கும் அவளுக்கு முதலிரவு நடக்கும் சமயம் அவளின் கணவன் அவளை தொட முயலும்போது அவளின் செவியிலிருந்து பாம்பாகிய அவன் வெளிவந்து அவள் கணவனைக் கொத்தி விஷத்தைப் பாய்ச்சிக் கொல்லவேண்டும் என்றும்.அவளுடனேயே பாம்பாக மாரி அவளின் செவியில் இருக்கும் அவனாலும் அவளை அடைய முடியாது என்றும் கடும் சாபம் தந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.