(Reading time: 24 - 48 minutes)

12. காதல் பின்னது உலகு - மனோஹரி

ன் எதிரில் நின்றிருந்தவள் முகத்தையே பார்த்திருந்தானே அபயன். பவிஷ்யாவின் முகமே சொல்லவில்லையா அவள் காதல் நதி பாய் ஸ்தலமாகி உணர்வளவில் இவனில் கரைந்து கொண்டிருக்கிறாள் என…

இவனும் தன் மனதை அந்த நொடி அபயன் நீரா நினைவிலிருந்து விலக்கி தன்னவளிடம் கொண்டு வந்தான். இந்தப் பொழுதும் இந்த நொடியும் இவர்களுக்கானது….

“பவிப் பொண்னுக்கு இப்ப கோபமெல்லாம் போச்சுதாமா?” அபயனின் கேள்வியில்

Kadhal pinathu ulagu

தன் பார்வைக் கோட்டைவிட சற்று உயராத்தில் இருந்த அவன் முகத்தை ஒரு நொடி விழி உயர்த்தி  மொத்தமாய்ப் பார்த்த அவள், சட்டென தலை குனிந்து கொண்டாள். மெல்லமாய் ஆமோதிப்பாய் தலையை அசைத்து வைக்கவும் செய்தாள்.

“சரி அப்ப  நீ கொண்டல்புரம் வர நான் சீக்கிரம் வழி செய்றேன்….” அவன் அடுத்து என்ன என்பதைப் பேச,  இவளுக்குள் இப்பொழுது இருக்கும் நிலையை தாண்டியும் இன்னுமாய் வெட்கம் தாக்க முடியும் என புரிய முடிந்தது.

குப்பென்று உச்சந்தலைவரை உயர பாய்ந்த ரத்த ஓட்டமும், அங்கிருந்து உள்ளங்கால் வரை கட்டிப் போட்ட கரென்ட் ஷாக்கும்…… ‘இவன் ஊருக்கு போறதா? கல்யாணமா? !!!! இப்பவேவா!!!!’ என ஆரம்பித்து லூசு ‘அப்றம் கடைசி வரை லவ் பண்ணிட்டேவா இருக்கப் போற….’ என ஆயிரம் வகை எண்ண ஓட்டங்களும் இவளை பந்தாடி பதம் பார்க்க…..

அவனோ சட்டென சிரித்தான்…..

“கல்யாணத்தைப் பத்தி பேசல பவிமா…. நீ அங்க ஹாஸ்பிட்டல்ல வர்க் பண்ண அரேஞ்ச் பண்றேன்னு சொன்னேன்…. “ இதை அவளுக்கு விளக்கம் கொடுக்கும் தொனியில் சொன்னவன்……”ஆனாலும் கல்யாணம்னதும் நீ இவ்ளவு டிஸ்டர்ப் ஆவியா? அதைப் பார்க்கப்ப எனக்கு இப்பவே கல்யாணம் செய்துக்கனும் போல இருக்கே….” இதை இவளை சிணுங்க வைக்கும் சீண்டல் தொனியில் சொல்லி

“ஆனா பவிமா நம்ம வெட்டிங் அதி மேரேஜுக்கு பிறகு இருக்கனும்னு நினைக்கிறேன்பா…… இல்லைனா குறஞ்சபட்சம் அவன் மேரேஜும் நம்ம மேரேஜும் ஒரே நாள்ளன்னா கூட ஓகே…..யவிய அம்மா ஹெல்த் இப்டி ஒரு மேரேஜ்க்கு கம்பல் செய்துட்டு…..இதுல நாமளும் அதிக்கு முன்ன மேரேஜ் செய்துகிட்டா நல்லா இருக்காதுன்னு எனக்கு படுது….. உனக்கு எப்டிடா தோணுது?” அவளுக்கு இது சரியாக புரிய வேண்டுமே என்ற ஒருவித தவிப்போடு அவன் பேசுவது பவிஷ்யாவுக்குப் புரிகிறது தானே…. உன்னைவிட என் அண்ணன்தான் எனக்கு முக்கியம்னு யோசிச்சுடாத என்ற உள்ளர்த்தம் அதில் ஏராளமாய் வெளிப்பட்டது

கல்யாணம் செய்யப் போறவனை 100% புரிஞ்சுகிட்டுதான் செய்யனும் என்ற எண்ணங்கள் தீண்டாத பெண் மனம் அவளது….. அரேஞ்ச்ட் மேரேஜ் மட்டும் தான் திருமணம் மற்றதுக்கு ஓடிப் போறதுன்னு தான் பேர் அவள் அறிந்த உற்றம் சுற்றத்தில்…..ஆக பெண் பார்க்கும் படலத்தில் பத்து நொடிப் பார்வையில் வாழ்க்கையை ஒருவரோடு ஒருவர் இணைத்துக் கொள்ள முடிவெடுப்பதை இயல்பாய் எண்ணி இருப்பவள் அவள்.

அதனால் இது அபயனோடு வெறும் மூன்றாம் சந்திப்புதான் என்ற போதும் திருமணம் குறித்து யோசிப்பது அவளுக்கு தவறாக படவில்லை….

அதோடு அபயனின் மொத்த குடும்பத்தை பத்தியும் அதாவது அவனோட குடும்பத்துக்காரங்கன்னு சொல்லுவாங்களே……அவனோட ஊரோட 90% கூட்டம்….அவங்களை பத்தி பொதுவா இங்க ஒரு பேச்சு உண்டு….இவளோட அப்பாவே அதை சொல்லி இவள் கேள்விப்பட்டதுண்டு……

அந்த குடும்பத்துக்காரங்களுக்கு மாவறன் குடும்பம்னு ஒரு பேர் உண்டு….. அவங்க வீட்டு பையன்கள் எல்லோருக்கும் அது சர்நேம் மாதிரி சேர்ந்து இருக்கும்….  மாவறன்ட்ட மக்க எவனை நம்பியும் பொண்ணு கொடுக்கலாம்… மாவறன் வீட்டுக்கு வாக்கபட்டு போன பொண்ணு கண்ணீர்விட்டதா சரித்திரமே கிடையாதுன்னு சொல்லிப்பாங்க….

அதோடு ‘மில்காரங்க குடும்பத்துல பொண்ணு கொடுக்கானாம் ஜெயநாதன்’ என அப்பா நிலு மேரேஜைப் பத்தி சொன்ன விதத்திலேயே அபயன் குடும்பத்தை அப்பா எவ்ளவு பெரிய இடமா நினைக்கிறாங்க எனவும் இவளுக்கு தெரிகிறது தானே…

அபயன் பெற்றோர்  வந்து இவளை பெண் கேட்கும் போது, இவளோட அப்பாவோட சம்மதம் கிடைப்பது ஒன்றும்  கஷ்டமானதாய் இராது…..

அதோடு அண்ணன் திருமணம் முடியாமல் இருக்க, தம்பி முந்தி மணமுடிப்பது தம்பி வகையில் எவ்வளவு தவிப்பானதாய் இருக்கும் என்பதும் இவளுக்கு புரிகிறதுதான்….. நிச்சயமாய் அதி அத்தான் மேரேஜுக்கு பிறகு தான் இவங்க மேரேஜ் நடக்கனும்……அது தான் சரி…..

ஆனால் இவள் அப்பா இவள் கோர்ஸ் முடிஞ்சு வந்ததும் வரன் பார்க்கனும்னு சொல்லிட்டு இருந்தாங்களே…இப்பவே பார்க்க ஆரம்பிச்சாச்சோ என்னவோ? அவங்களை எப்படி வெயிட் பண்ண சொல்ல? என்ன சொல்லி சமாளிக்க?

அதை அபயனிடம் சொல்ல நினைத்து அவன் முகம் பார்த்தால்….அவன் இவர்கள் திருமணத்தைப் பத்தி இவ்ளவு எளிதாக பேசிவிட்டான்……ஆனால் இவளுக்கு ‘நானே எப்டி என் கல்யாணத்தைப் பத்தி பேச….அதுவும் இவன்ட்டயே ‘ என ஏதோ ஒன்று தயங்கி தடைபோடுகிறது…. அதோடு இவள் சொல்லப்போகும் விஷயம் அதி அத்தான் மேரேஜுக்கு முன்னமே நம்ம மேரேஜ் நடக்கனும்னு சொல்ற அர்த்தத்திலும் வரும்தானே……அதை அபயன் எப்படி எடுத்துப்பான்?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.