(Reading time: 24 - 48 minutes)

வள் சொல்ல சொல்ல அப்படியே குளிர்ந்து போனார் சுசிலா. கண்டிப்பாக போற வீட்டில் தன் மகளிற்கு அன்பிற்கு பஞ்சமிருக்காது….. மாப்ள பார்த்துப்பார்…

நிலவினிக்கோ….இந்த ட்ராமாக்கொன்னும் கொறச்சலில்லை எனும்படியாய் கொதிப்பை தந்தது அதே செய்தி….

“ஏய் நிலு….எந்திரி நீ….டைம் ஆகுது கிளம்ப ஆரம்பி…..கேட்டல்ல அவங்க கிளம்ப போறாங்களாம்…. இந்தா இருக்க கொண்டல்புரம்…இப்ப வந்துடுவாங்க….அது மாதிரிதான் எப்ப உனக்கு என்னைப் பார்க்கனும்னு இருந்தாலும் மாப்ளைட்ட சொல்லு அடுத்த அரை மணி நேரத்துல கூட்டிட்டு வந்துடுவார்…..நானும் நினச்சப்பலாம் அங்க வந்துடுவேன்…” அம்மா சொல்லிக் கொண்டே அவளை கிளப்ப…..வேறு வழி இன்றி தயாராக தொடங்கினாள் நிலவினி…

பாதி புடவை வான் நீலமும் மீதி இளம் பிங்குமாய் அதற்கு பார்டராய் ஓடும் மென் ஆரஞ்சுமாய் இருந்த அடர் சரிகை சாமுத்ரிகா பட்டைக் கட்டிக்கொண்டு முழு மேக்கப்பும் முடிந்து நிலவினி நிமிரும் போது பவிஷ்யா மொபைலில் மீண்டும் அழைப்பு….

“ஹேய் பவிப் பொண்ணு யவி சர்ச்சுக்கு வந்தாச்சு….அம்மா அண்ட் லேடீஸ் அண்ணி வீட்டுக்கு வந்துட்டு இருக்காங்க…..உனக்கு மட்டும் கூடுதல் இன்ஃபோ கூட்டிட்டு வர்றது நான்….உன்னை சைட் அடிக்கத்தான் வரேன்…..சான்ஸ யூஸ் செய்துக்கோ….” யார்னு சொல்லத் தேவையில்லை…அபயன்தான்….

அவசர அவசரமாக அவளுக்காக கொடுக்கப் பட்டிருந்த அறைக்கு ஓடினாள்….. தன்னை முற்றிலுமாக அங்கிருந்த கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள்… டார்க் வயலட்டும் ஹாட்   பிங்குமான லைட் வெயிட் சில்க் சாரியில் இருந்தவள் வைத்திருந்த ஒற்றை சுட்டியை சரி செய்து கொண்டாள்….. அங்கிருந்த பேப்பரில் சிறு சிறு துண்டுகளாக மூன்று துண்டுகள் கிழித்து எடுத்து ஐ லவ் யூவை எழுதி சின்னதாய் சுருட்டி தன் விரல்  மோதிரத்தில் உள்பக்கமாக சொருகிக் கொண்டாள்.

இதற்குள் வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம்…..கட கடவென மாடி இறங்கி ஓடினாள்….. “வாங்க…வாங்க” வரவேற்றுக் கொண்டிருந்தார் சுசிலா….மற்ற சில பெண்கள் அவர் பின்னால்…..அவர்களோடு போய் நின்றாள் இவளும்….

வீட்டிற்குள் நுழைந்ததெல்லாம் பெண்கள் தான்……இவன் எங்க? வர்றேன்னு சொன்னானே…!!!

அத்தனை பெண்களும் ஆளுக்கொரு தாம்பளம் ஏந்தி இருக்க…..

“முதல்ல பழக்குலைதான் உள்ள கொண்டு போனும்….” என்றபடி யாரும் உள்ளே  வராது நிற்க….இப்போது வந்தான் அபயன்… இரு கைகளாலும் ஒரு பெரிய முழு வாழைதாரை தூக்கி இருந்தான்…..

அவன் முதலில் நுழைய…..அவனைத் தொடர்ந்து அத்தனை பேரும்…. முன்னால் வந்தவன் பின்னால் நின்றிருந்த இவளைக் கடக்கும் போது…..”இதை எங்க வைக்கனும்……?  கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன்…” என்றபடி  முன் செல்ல அவனையும் முந்தி சென்று பக்கவாட்டு அறையை அவனுக்கு காண்பித்தாள்….. ஆக இப்படி அவள் அவனை பின் தொடர மொத்த கூட்டமும் மாடியை நோக்கிப் போனது பெண்ணழைக்க…

வாசலில் நின்ற இவளை தாண்டி அறைக்குள் அவன் நுழைகையில்…. “ஏன் இப்டி டென்ஷன் பண்றீங்க?” கிசு கிசு குரலில் சிணுங்கினாள் பவி….

“ஷ்…யாரும் பார்க்கப் போறாங்க…” அவளை விட இன்னுமாய் சிறு குரலில் சொன்னவன் அறைக்குள் வாழை குலையை வைத்து விட்டு கடகடவென ஹாலுக்குப் போய்விட்டான்…..

‘இப்ப நான் என்ன செய்றதாம்?’

மாடி ஏறி ஓடி நிலவினி அறைக்கு சென்றாள் பவிஷ்யா….வந்தவர்கள் நிலவினிக்கு கல்யாண புடவை மற்றும் அவளுக்கென கொண்டு வந்திருந்தவைகளை கொடுக்க அவள் உடை மாற்றக் கிளம்பிப் போக…..வந்திருந்த அனைவருக்கும் காஃபி பரிமாறப் பட்டது.

சட்டென தோன்ற ஒரு ஒரு ட்ரேயில் சில காஃபி கப்பை  எடுத்துக் கொண்டு கீழே இறங்கினாள் பவி…..ஹாலில் சில வயதான பெண்களும் ஒரு சோஃபாவில் அபயனும் அமர்ந்திருக்க, அனைவருக்கும் காஃபி பரிமாற என முதலில் அபயனிடம் தொடங்கினாள்…. தன் முன் நீட்டப் பட்ட காஃபியைப் பார்த்தான்…. ஐ லவ் யூ என்ற குட்டி காகிதத்தை மிதக்க விட்டிருந்தது அது. சிறு புன்னகையுடன் காஃபியை எடுத்துக் கொண்டான்….பாராட்டுதலாய் சிறு தலையாட்டல் அவனிடம்….

‘ஹப்பா இன்னும் ரெண்டே ரெண்டு…’ இப்படி ஓடியது பவிஷ்யாவின் மனது….

நிலவினி இப்போது அவளது மஞ்சள் டீல் ப்ளூ வஸ்த்ர கலா பட்டில் தயாராகி வர…..அடுத்து நிலவினி, பவிஷ்யா, அபயனுக்கு அக்கா முறை வரும் இன்னும் ஒரு பெண் என ஒரு காரில் ஏற….அபயன் தான் கூட்டி வந்த மற்றவர்களுடன் தன் காரில் இவர்களது காரை பின் தொடர்ந்தான்….

நிலவினிக்கு சர்ச் வாசலை அடையவும் இதோ இதோ என அந்த நேரம் வந்தேவிட்டதே என தோன்ற…..தலையை குனிந்து கொண்டாள்…..யாரைப் பார்க்கவும் தோன்றவில்லை….. அவளது அப்பா உடன் வர….சில பெண்கள் பின்னால் வர இவளைக் கூட்டிப் போய் யவ்வன் அருகில் உட்கார வைக்கிறார்கள்… உட்காரும் நேரம் அருகில் இருந்த அவனது தோள் இவளது பார்வையில் படுகிறது….

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.