(Reading time: 24 - 48 minutes)

வள் கெஞ்சிய விதத்தில் அவள் மனதின் தன்மை இவனுள் இதம் சேர்க்கிறது….அதோடு ஒரு வகையில் ரசிக்கவும் மறுவகையில் சீண்டவும் தோன்றுகிறதுதான்…… ஆனால் இதுக்கு மேல இங்க நிக்றது நல்லதுக்கு இல்லை…

“சரிங்க யவியோட சிஸ்டர்……அங்க உங்க அண்ணா அவரோட ஆளைப் பார்க்க முடியாம அவங்கட்ட பேச முடியாம பரிதாபமா நின்னுகிட்டு இருக்கார்….போய் அவருக்காக இந்த காமிரால போத் ஸ்டில்ஸ் வீடியோ ரெண்டும் எடுத்துட்டு வந்து தாங்க நீங்க…..அப்டியே என் ஆளையும் சேர்த்து கவர் பண்ணி தருவீங்களாம்…” இலகுவாகவே அவளை வழி அனுப்ப முனைந்தான்.

இவன் கையிலிருந்த காமிராவை அவளும் வாங்கிக் கொண்டாள். பின் விடை பெறும் முகமாக தலை ஆட்டியவளிடம் “பவிப்பொண்ணு உன்னை இந்த ட்ரெஸ்ல தனியா ஒரு ஃபுல்சைஸ் ஸ்டில்ம் எடுத்து தா…..நம்ம பொறுத்தவரை இன்னிக்கு டே ரொம்ப ஸ்பெஷல் இல்லையா…..இந்த டேவோட நியாபகமா பின்னால நம்ம பெட் ரூம்ல அந்த ஸ்டில்லை நான் என்லார்ஜ் செய்து வச்சுபேன்…”

அவன் சொல்ல சொல்ல அந்த பின்னாள் காட்சி கண்ணில் விரிய மகா மகிழ்ச்சியும் கிளர்ச்சியும், கூடவே ஒரு வித வெட்கமும், ஏனோ இப்டி ஆசைய வளக்கமே நடக்காம போய்ட்டா என்ற ஒரு பயமும் வருகிறது இவளுக்கு….அதையும் தாண்டி வருகிறது யவி அண்ணாட்ட காமிக்க போற காமிரால இவளா? என்ற பதற்றம்.

“யவி அண்ணாட்ட காமிக்க போற காமிராலயா?” கேட்டாள்.

“அதெல்லாம் நான் என்னோட சிஸ்டம்ல டவுன்லோட் பண்ணிட்டு அவனுக்கு கொடுக்க வேண்டியத மட்டும் தான் கொடுப்பேன்….அண்ணிய விடியோ எடுக்றப்ப யவிக்கான்னு அவங்கட்ட சொல்லிட்டு எடுக்காத….அப்பதான் ரியலா இருக்கும்…..யவிக்கும் நேர்ல பார்த்த மாதிரி இருக்கும்….” அவன் சொல்ல சொல்ல தலையை ஆட்டிக் கொண்டே கிளம்பிவிட்டாள் பவிஷ்யா…. வீட்டின் பின் வாசலை அடையப்போன நேரம் தான் மெல்ல நியாபகம் வருகிறது தன்யா….

அவசர அவசரமாக அவனிடமாக ஓடினாள்…..  அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனால் அவள் செயலுக்கு காரணம் யூகிக்க முடியவில்லை…

“என்னாச்சு பவிமா?”

“உங்களுக்கு தன்யான்னு யாரையும் தெரியுமா?” இளைக்க இளைக்க இவள் கேட்க….

எதுக்கு இப்டி இவ்ளவு அவசரமா வந்து கேட்கிறா இவ என புரியாமல் “எனக்கு தெரிஞ்சு என் ஃப்ரெண்ட்ஸ் சர்கிள்ள தன்யான்ற பேர்ல யாருமே இல்லையேபா” என்றான் யோசித்தபடியே....

இப்பொழுது எதிரில் நின்றவள் முறைத்துக் கொண்டிருந்தாள்…. “ஓ இவ்ளவு யோசிக்கிற அளவுக்கு சாருக்கு அவ்ளவு பெரிய ஃப்ரெண்ட்ஸ் சர்கிளோ பொண்ணுங்க கூட….” அவளில், அவள் விழியில், உடல் மொழியில், உதடுகளின் துடிப்பில், அத்தனையிலுமாக வழிந்த அந்த பொசசிவ்னெஸ்….

‘அழகுடி நீ அம்சகுமாரி …இதுக்கெல்லாம் சேர்த்து பின்னாடி அனுபவிப்ப…” மானசீகமாய் தன்னவளைப் செல்லமாய் மிரட்டினான்.

“அம்மா தாயே முக்கியமான ஒரு விஷயத்தை நீ தெரிஞ்சிக்கனும்…..பொண்ணுங்க எல்லோருக்கும் நான் அபை அண்ணாதான்…..”

ஹான்…!!

“ஆமா ஸ்கூலிங் இங்க தான் செய்தேன்….க்ளாஸ்மேட்ஸ் கேர்ள்ஸ்ல பாதிக்கு மேல எங்க ஊர் பொண்ணுங்க…..உறவு முறையில நான் அண்ணா…..அவங்க அப்டி கூப்ட….அதப் பாத்து மத்த எல்லாரும் கூப்ட….. நான் அண்ணா ஆஃப் ஆல் கேள்ஸ் ஆல்வேஸ்னு ஆகிட்டேன்… அடுத்து BVsc படிச்சது சென்னைல….அங்கயும் எனக்கு ரெண்டு கசின் சிஸ்டர்ஸ் க்ளாஸ் மேட்ஸ்…..அஸ் யூஸ்வல் சின்ன வயசு பழக்கபடி இவங்க அண்ணானு கூப்ட…..அங்கயும் அண்ணா பொஷிஷன் ……. என்னைப் பார்த்து உங்களைத் தவிர எல்லோரும் எனக்கு அண்ணானு சொன்ன ஒரே பொண்ணு நீதான்…..போதுமா விளக்கம்…”

புல்ஃபார்ம் புன்னகை வந்திருந்தது அவளிடம்…. ஈ….

“சரி இப்ப சொல்லு ஏதோ ஒரு பொண்ணைப் பத்தி விசாரிச்சியே ஏன்?”

நடந்ததை சுருக்கமாக சொன்னாள் இவள்.

அவன் முகத்தில் யோசனைக் கோடு…..”இல்ல பவிமா சான்ஸே இல்லை….எங்க வீட்ல அப்டி என் மேரேஜ் விஷயத்தை இனிஷியேட்டே பண்ணலை அது எனக்கு நல்லா தெரியும்…. ஸ்டில் அப்டி எதுனாலும் என் விருப்பத்தை கேட்காம எதுவும் நடக்காது….நீ தேவையில்லாம குழப்பிக்காத….சந்தோஷமா இரு…..இப்ப கேமிரா குடுக்க வர்றப்ப ரெஜியையும் இன்னும் ரெண்டு மூனு பேரையும் சேர்த்து கூட்டிட்டு வா…..நான் ஹால்ல நிக்றேன்….. கேமிராவை ஒரு ப்ளாஸ்டிக் கவர்ல போட்டு கொண்டுவா….ஏதோ மாப்ள வீட்டுக்கு கொடுத்துவிட வேண்டியதை கொடுக்கன்ற மாதிரி தெரியும்…என்ட்ட எதுவும் பேசாத…..நாளைக்கு மேரேஜ்ல பார்ப்போம்..பைடா….”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.