(Reading time: 24 - 48 minutes)

வ்வளவுதான் அடுத்து யவ்வனை அவ்வளவு கூட அவள் பார்க்கவில்லை….திருமண நிகழ்ச்சி முடிந்து இப்போது ரிஷப்ஷன். அது நடை பெறுவது அருகிலிருக்கும் மண்டபத்தில்….அங்கு சென்று புடவை மாற்றி இவள் தயாரான பின் ரிஷப்ஷன் தொடங்கும்…..அது முடிந்த பின் தான் இவளுக்கு சாப்பாடு…..

அம்மா என்னதான் இந்த இவன் சொன்னான்னு சாப்பிட வைத்து அனுப்பி இருந்தாலும் இப்பவே பசிக்குது போல இருக்கு….

மண்டபம் செல்லவென பொண்ணும் மாப்பிள்ளையும் மட்டுமாக காரில் செல்ல வேண்டும்….. தம்பதியராய் முதல் பயணம்…. அந்த ஃபோன் காலுக்குப் பின் அவளுடன் கிடைக்கும் சிறு தனிமை யவ்வனுக்கு…..ட்ரைவர் இருந்தாலும் சில விஷயம் பேசலாமே…..இனிமே இவங்க பேசிக்க யார்ட்டயும் பெர்மிஷன் கேட்க வேண்டாமே…..

அருகில் இருந்தவளை திரும்பிப் பார்த்தான் யவ்வன்…..அவள் தனக்கு முன்னிருக்கும் சீட்டின் மீது பார்வையை நிறுத்தி இருந்தாள்….மனதளவில் எங்கு இருக்கிறாள் என தெரியவில்லை…

“வினிமா…” அவனது குரல் அவன் செய்த காயத்திற்கே இதம் சேர்க்கும் அளவிற்கு மென்மையாய் தொடுகிறது இவளை….ட்ரைவர் இருக்கப்ப இவளால அவனை கத்த முடியாது…ஆக மௌனமாகவே இருந்தாள் இவள்….

அருகிலிருந்த அவள் கையின் மீது தன் கையை வைத்தான் இப்போது அவன்…சட்டென எடுத்து தன் கையை தன் மடிக்குள் வைத்து மூடிக் கொண்டாள் நிலு…

“பசிக்குதா வினிமா….?” இவள் முகம் பார்த்து அவனுக்கு இது தான் புரியுதாமா…? கொதிக்குதே கோபம்….அது புரியலையாமா….? பதிலுக்காக இவள் முகத்தை பார்த்திருந்தவன்….சற்று நேர விரயத்திற்குப் பின்….தன் தம்பியை மொபைலில் அழைத்தான்…. “அபை….ரிஷப்ஷன் போறதுக்கு முன்ன வினி சாப்டுற மாதிரி எதாவது அவ ரூம்க்கு அனுப்பி வைக்க வழி பாரேன்…”

அதற்குப் பின் அவன் பார்வை அவள் மீதே இருந்தாலும் அங்கு மொத்தமாய் நிலவியது மௌனம்…..

நிலு வந்து மாற்ற வேண்டிய புடவையை பிரித்து அதிலிருந்த ஸ்டிக்கர் இன்ன பிறவைகளை நீக்கி, தேவையான நகைகளையும் தயாராக எடுத்து வைத்து கொண்டிருந்தாள் பவிஷ்யா, மண்டபத்தில் நிலுவுக்கென ஒதுக்கி இருந்த ஒரு மாடி அறையில்…..

நிலவினி வீட்டில் பவிஷ்யா மீது முழு நம்பிக்கை உள்ளதால் நகையையும் அவள் கையில் கொடுத்து வைத்திருந்தனர்…..அவளோ பாதுகாப்பிற்காக அறையை உள்ளே பூட்டி இருந்தாள். கதவு தட்டப் படும் சத்தம்….

“யாரு…?”

“நான்தாங்க…..மாப்ளையோட தம்பி…..இங்க அண்ணிக்குன்னு இதெல்லாம் உள்ள கொண்டு வந்து வைக்க சொன்னான் யவி அண்ணா…” வேற யாரு அபயன் தான்…

இப்பொழுது கதவை திறந்து கொண்டு கைகளை மட்டுமாக நீட்டினாள் பவிஷ்யா…. “குடுங்க நான் கொடுத்தர்றேன்” அப்பொழுதுதான் அவளுக்கு அந்த ஐடியா வருகிறது….. தன் முன் நீட்டப்பட்ட தட்டிலிருந்தவைகளைப் பார்த்தாள்….

ஜூஸ்….ப்ளெய்ன் கேக்…….பிஸ்கெட் பாக்கெட்….வாழைப் பழம்….. அவசரமாக அதை கைகளில் எடுத்தவள்…..தன் கையிலிருந்த நெக்‌ஸ்ட் ஐ லவ் யூவை அந்த தட்டின் மீது வைத்து…..”எடுத்துக்கோங்க…..உங்களுக்குத்தான் “ என்றாள்  

ஆக வெற்றிகரமா செகண்ட் டைமும் சக்சஸ்…..

அடுத்து ரிஷப்ஷன் கோலாகலமாக துவங்க, வாழ்த்தியவர்கள் உணவு உண்ண செல்ல…..மண மக்களோ எல்லாம் முடிந்து பந்தியில் சென்று அமர்ந்த போது நல்ல வேளை…. இன்னைக்கு இவன் இல்லைனா சமாளிச்சிறுக்க மாட்டேன்…..என அருகிலிருந்த யவியைப் பார்த்து தோன்றியது நிலவினிக்கு……

தொடரும்!

Episode # 11

Episode # 13

{kunena_discuss:929}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.