(Reading time: 23 - 46 minutes)

13. காதல் பின்னது உலகு - மனோஹரி

ன்னதான் இந்த யவ்வன் சொன்னான் என அம்மா சாப்பாடு கொடுத்திருந்தாலும்…..காலை 5 மணிக்கு என்ன சாப்பிட்டுவிட முடியுமாம்? அதுவும் அவள் இருந்த மூடுக்கும்….செய்து வைத்திருந்த அலங்காரத்திற்கும்….ஊட்டியது அம்மா என்பதால் மட்டுமே மறுக்காமல் சாப்பாடை நிலவினி வாயில் வாங்கிக் கொண்டதே….அடுத்து எப்போது இந்த வாய்ப்பு கிடைக்கும் என்ற பயம்….

ஆக திருமண வைபவம் போய்க் கொண்டிருக்கும் போதே அவளுக்கு லேசாக பசிக்கத் தொடங்கிவிட்டது. விழாவும் அவள் நினைத்ததை விட வெகு நேரமாக நீண்டது. ரெண்டு மூனு பாட்டு….ஜெபம்….வோ ஷேரிங்… குட்டி மெசேஜ்…..ரிஜிஸ்டரேஷன்…. இதுக்கு எவ்ளவு நேரமாகிடப் போகுதாம்? எனதான் அவள் நினைத்தது

ஆனால் ஆச்சுது அது பாட்டுக்கு நேரம்… வோ ஷேரிங் முடிய…..மோதிரம் மாற்றி….அதன் பின் தாலி….பின் ரெஜிஸ்ட்ரேஷன்… சாட்சி கையெழுத்து போடுற ரெண்டு பேர்ல ஒருத்தராவது ரொம்ப சின்ன வயசுகாரங்களா இருக்கனும்னு அந்த நேரத்துல  சொல்ல….யவ்வனுக்கு அருகில் நின்ற அபயன் போடுவது என்றால்…இவளுக்கு அதற்கும் ஆள் தேடி…… இதற்குள் ரிஷப்ஷனை கவனிக்க சென்றுவிட்ட அக்கா ஹஸ்பண்டை தேடி…..பின் எல்லோரும் ஏக மனதாய் பவிஷ்யாவைப் போடச் சொல்லி என ஏதேதோ காரணங்களால் நேரம் நீண்டு கொண்டே போய்…. காரில் யவ்வனுடன் இவள் ஏறி அமரும் போது வயிற்றிலிருந்த பசி முகத்தில் தெரிய தொடங்கிவிட்டது  போலும்.

Kadhal pinathu ulagu

அடுத்து இவள் ரிஷப்ஷனுக்காக கிளம்ப சென்ற அறையில்  ஸ்நாக்‌ஸை பார்த்ததும் ‘ஆமா நீ வாங்கி கொடுத்து நான் சாப்டவா?’ என மானசீகமாக யவ்வனுடன் இவள் ஈகோ வரிந்து கட்டிக் கொண்டு வம்புச் சண்டைக்குப் போனாலும்…பசித்திருந்த வயிறோ…..’நிலு நீ இதுல உன் கோபத்தைக் காட்டாத……இனி எப்பவாவது அம்மா வீட்டுக்கு வர்ற நேரம் தவிர மத்தபடி எப்பவும் அவன் வாங்கித் தந்துதான் சாப்ட வேண்டி இருக்கும்….சோ நாம பழி வாங்குறத வேற மாதிரி வச்சுகலாம்….’ என பதறிப்போய் பகுத்தறிவோடு தடுத்தது….

 அடுத்து இவள் அங்கிருந்தவைகளில் சிலவற்றை சாப்பிட்டு….இதற்கிடையில் அபயன் கொண்டு வந்து கொடுத்த போர்ன்விட்டாவை பவியும் இவளுமாக குடித்து, பின் ரிஷப்ஷன் புடவை அதற்கேற்ற நகை என மாறி அறையை விட்டு வெளியே வரும் போது மணி 9 ஆகி இருந்தது.

அடுத்து ரிஷப்ஷன் என் இவர்கள் இருவரையும் மேடையில் நிற்க வைக்க….யார் யாரோ தெரிந்த முகம் தெரியதவர் என….எப்படியும் 2000 பேருக்கு மேல் மேடை ஏறி வாழ்த்தி இருப்பர்….

அவங்களுக்கென்ன விஷ் பண்ணி கிஃப்ட் கொடுத்து ஒரு ஃபோட்டோவும் எடுத்துட்டு நேரே சாப்ட போய்ட்டாங்க….இவளுக்கு???

காலில் போட்டிருந்த புது ஹை ஹீல்ஸ்…..அது குதிங்காலை மட்டுமாய் பதம் பார்க்கவில்லை….அதோடு சேர்த்து…..செருப்பிலிருந்த ஏதோ ஒரு எலாஸ்டிக் இறுக்கி பிடித்திருந்ததில் ஒரு நேரத்திற்கு மேல் கால் மரத்துப் போக வேற ஆரம்பித்தது….. மேடையில் நின்று கொண்டு அதுவும் மாலையும் கழுத்துமாய்….இடுப்பை பிடிக்கும் ஒட்டியாணமுமாய் எப்படி குனிந்து பார்க்கவாம்……?

ஒரு ஒரு மணி நேரம் சமாளித்திருப்பாள்…..அடுத்து அதற்கு மேல் தாங்க முடியும் என்று தோன்றவில்லை…..கால் அதுவாக மடங்கி விழுந்துவிட்டால்…? பின்னால் நின்றிருக்கும் பவிஷ்யாவிடம் சொல்லி என்ன செய்யலாம் என கேட்கலாம் எனப் பார்த்தால் தலைப்பின்னலில் வைத்திருந்த சடைநாகத்தோடு மாலை எப்படியோ சிக்கி கழுத்தை திருப்பாதே என சத்யா க்ரகம் செய்தது……

இப்பொழுது வாழ்த்துபவர்களைப்  பார்த்து புன்னகைப்பதே பெரிய காரியமாய் இருந்தது. அருகில் நின்றவன் எப்படி கவனித்தானோ?  “தாகமா இருந்தா எதாவது குடிக்கிறியா வினி?” என்றான்.

அவனிடம் பேச பிடிக்கவில்லைதான்….அதுவும் உதவி கேட்க சுத்தமாகவே பிடிக்கவில்லைதான்…. ஆனால் வாய் அதுவாக “கால்….” என்கிறது…..அவனுக்கு என்ன புரிந்ததோ? பின்னால் நின்ற பவிஷ்யாவை உதவிக்கு அழைத்தான் “உள்ள கூப்டுட்டுப் போய் என்னன்னு பாருங்க” என்க இவன்,

 பவிக்கு மட்டுமில்லை வினிக்குமே தயக்கம்….. அத்தனை பேர் காத்திருக்க பொண்ணை இப்டி உள்ள அனுப்பிட்டா எப்டியாம்?

“ஃப்யூ மினிட்ஸ் போய்ட்டு வர்றதுல ஒன்னும் ஆகிடாது….தனியா போக ஒரு மாதிரி இருந்தா சொல்லு நானும் வர்றேன்” என்றான் அவன் இப்போது.

‘ஐயையோ இவனோடயா? ‘ அவ்ளவுதான் அடுத்த நிமிடம் அருகிலிருந்த மணப் பெண் அறை நோக்கி இவள் பவியின் கையை இறுக்கி பிடித்தபடி நடக்க தொடங்கிவிட்டாள்….. உள்ள போய் சேரில்  அமர்ந்து காலிலிருந்த செருப்பை கழற்றி சில பல நிமிடங்களுக்குப் பின்தான் கால் ஓரளவுக்கு இயல்புக்கு வந்தது….

இங்கேயே உட்கார்ந்து கொள்ளலாம் போலதான் இருக்கிறது…..ஆனால் போக வேண்டுமே…..ஆக செருப்பை அங்கேயே விட்டுவிட்டு….கிளம்பி மேடைக்குப் போனாள்.

அடுத்து கொஞ்ச நேரத்தில் இருவருக்குமாக குடிக்க எதாவது எடுத்து வரச் சொன்னான் யவ்வன் தன் தம்பியிடம்….. ஸ்பரைட் வந்தது…. பின் ஒரு கட்டத்தில் ஒரு வழியா எல்லோரும் வாழ்த்தி முடியவும் “போட்டோ ஷெஷன் என ஆரம்பித்தார்கள் போட்டோ க்ராஃபர்ஸ்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.