(Reading time: 23 - 46 minutes)

வள் வீட்டிலிருந்து, அவன் வீட்டிலிருந்து என ஃபோட்டோஸ்…வீடியோஸ்….அதோட லைட்ஸ் என இப்பொழுதே கண் கரித்துக் கொண்டிருக்கிறது… கால் வேறு நிலு நிலு நின்னது போதும் நிலு…ப்ளீஸ் ப்ளீஸ் உட்காறேன்….என்கிறது….இதில் இன்னுமா?!!!

 இவள் முகம் அதுவாக சுருங்கி சுண்ட…. அவன் ஆணித்தரமாக மறுத்துவிட்டான்….”சாப்ட பிறகுதான் எதுனாலும்…”

ஒருவழியாய் இவர்களை சாப்பிடக் கூட்டிக் கொண்டு போனார்கள்….

அங்கு போய் உட்காரும் போது நிச்சயமாய் முழுமையாய் களைத்திருந்தாள் நிலவினி…..’இப்பவே இப்டி இருக்கே இதுல இவன் மட்டும் இல்லைனா நான் எப்டி சமாளிச்சிறுப்பேன் ?’ என்றிருந்தது அவளுக்கு அப்போது….

அடுத்து சாப்பாடு முடியவும் சின்னதாய் ஃபோட்டோ செஷன்….

போட்டோ செஷன் என்பதால் அங்கு இவளுக்கு வேலை இல்லை என பவிஷ்யா நிலவினிக்கு வந்திருந்த பரிசுகளை பத்திரமாக இவள் பொறுப்பிலிருந்த அறைக்கு மாற்றிக் கொண்டிருந்தாள். அந்த அறை மண்டபத்தின் மாடியில் இருந்தது.

இவள் மாடிக்கும் கீழுமாக ஓடிக் கொண்டிருக்க இடையில் அபயன் இவள் கண்ணில் படுகிறான். இவளிடம் அவன் நின்று வாய் திறந்தெல்லாம் எதுவும் சொல்லவில்லை…போகிற போக்கில் தன் வாட்ச் டயலை மட்டும் ஒரு தட்டு தட்டிக் காண்பித்துவிட்டுப் போய்விட்டான்….அப்பொழுதுதான் இவள் கண்ணில் படுகிறது விடை பெறும் அனைவருக்கும் நிலவினி வீட்டார் தாம்பூலப் பை கொடுத்துக் கொண்டிருப்பது.

‘ஓ மாப்ளை வீட்டுக்கு கிளம்பப் போறாங்க….. அவன் சொன்ன டைம் முடியுது…..இவள் இன்னும் மூனாவது ஐ லவ் யூ சொல்லலையே….என்ன செய்ய?’

பார்வை நின்றிருந்த தாம்பூலப் பையே அடுத்த ஐடியா தர…..அவசர அவசரமாக போய் அடுக்கி வைத்திருந்த பைகளில் ஒன்றை எடுத்து வந்து, இவள் கையிலிருந்த அந்த காகித சுருளை அவன் பார்வைக்கு பட வேண்டும் என்பதற்காக நன்றாக விரித்து , பைக்குள் போட்டுக் கொண்டு…. மண்டபத்தின்  முன்வாசலுக்கு விரைகிறாள்.

அதன் வழியாகத் தான் அனைவரும் விடை பெற்று கிளம்பிக் கொண்டிருக்கின்றனர். அங்கு வைத்து தான் பையை விடை பெறுவோர்க்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்…இவள் அங்கு வைத்து கொடுத்தால் தான் இயல்பாய் தெரியும்…..

போய் அங்கிருந்த வரவேற்பு மேஜை அருகில் நின்று கொண்டாள்……அபயனுக்கான பையை இடது  கையில் வைத்துக் கொண்டு வலது கையால் அங்கு அடுக்கி இருந்த பைகளை கிளம்பிச் செல்லும் ஒவ்வொருவருக்காய் கொடுக்கத் தொடங்கினாள்.

அவளை தூரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்த அபயனுக்கு இது தெளிவாகவே புரிகின்றது….உதடுக்குள் மறைத்த சிரிப்புடன் அவளையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன்……விடை பெறும் வண்ணம் அவளை நோக்கிச் செல்கிறான்.

இப்பொழுது அவன் வருவதை அவளும் பார்த்துவிட்டாள். அவன் மிக அருகில் வந்துவிட இட கையில் இருந்த இந்த பையை வலக் கைக்கு மாற்றி அதை அவனை நோக்கி நீட்ட தொடங்க…..இடப்புறமாய் வந்து கொண்டிருந்த இவன் மீதே கண் வைத்துக் கொண்டு இவள் இதை செய்ய….”நன்றிமா” என்ற ஒரு முதிர் வயது ஆண் குரலோடு பை இவள் கையிலிருந்து விடைபெறுகிறது….

பதறிப் போய் இவள் தன் முன் நின்றவரை அப்போதுதான் கவனித்தாள்…. பொற்பரன் - அபயனின் அப்பா!!!!

சர்வமும் ஆடிப் போனது இவளுக்குள்….சட்டென மூச்சு நின்று முகம் வெளிறி…..அந்த தன் நிலையை வெளியே காட்டிவிடக் கூடாதே என பதறி…..

அபயனுக்கு நொடியில் நிலைமை புரிகிறதுதான்….. அப்பா கைக்கு உள்ளிருக்கும் காகிதம் கிடைத்து விஷயம் தெரிந்தாலும் இவனுக்கு பாதிப்பு என பெரிய அளவில் இருக்காதுதான்….அப்பா காதல் திருமணத்திற்கு எதிரானவர் அல்ல….முற்போக்கு வாதி…பரந்த சிந்தனை உடையவர்…..  “ இதுதான் உனக்கானவன்னு தெரியுதா…. பொண்ணுட்ட போய் நிக்க கூடாது….பொண்ணோட அப்பாட்ட போய் பொண்ணு கேட்கனும்….உடனே கல்யாணத்தைப் பண்ணனும்….அந்த தைரியமும்…தயார் நிலையும் இல்லாதவனுக்கு காதலே வரக் கூடாது… ” என்பார்….

இப்பொழுது இந்த நிலையில் விஷயம் தெரிந்தால் இவன் முறையாய் பெண் கேட்பதுக்கு ஏற்பாடு செய்யாமல் இப்படி விளையாடிக் கொண்டிருப்பதுக்கு இவனுக்கு ஏகத்துக்கு திட்டு கிடைத்தாலும்….மற்றபடி உடனடியாக திருமண ஏற்பாட்டுக்குத்தான் இறங்குவாரே தவிர கண்டிப்பாய் எதிரிடையாய் எதுவும் செய்யமாட்டார்தான்.

இவனுக்குமே அப்பா சொல்வதுதான் சரி என்று தோன்றும்….ஆனால் இவனிடம் முகம் தூக்கிக் கொண்டிருப்பவளை அவள் வீட்டில் போய் நேரடியாக எப்படி பெண் கேட்பதாம்….? அவளே விஷயம் புரியாமல் மறுத்துவிட்டால்?? அதுதான் இவன் அவளிடம் விளக்கம் சொல்லி சம்மதம் கேட்க வந்த முதல் காரணம்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.