(Reading time: 23 - 46 minutes)

தே நேரம் ”சரி அவங்க ரெண்டு பேரும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்…ரொம்ப நேரம் நின்னுட்டே இருந்திருக்காங்க…..நாம கீழ போகலாம்” என இவளது அக்கா சொல்ல….

‘யோவ் அக்கா இது உனக்கே ஓவரா இல்லை…பட்ட பகல்ல இப்டி ஓபனா பாம் போட்டு ஒரு ஃப்ராடுட்ட என்ன படு ஜென்ட்லா மாட்டிவிட்டு போற’ என அலறுகிறது இவள் மைன்ட் வாய்ஸ்…. ஆனா இதை எப்படி வெளிய சொல்ல?

‘அம்மா நீங்களாவது எதாவது சொல்லி என்னையும் கூட்டிட்டுப் போய்டுங்கமா?’ வாயை திறக்காமல் அம்மாவைப் பார்க்கிறாள்….

அம்மா இவளைப் பார்த்து சின்ன புன்னகையுடன் தலையாட்டிவிட்டு இறங்கிப் போக….. இவள் பேந்த பேந்த விழிக்க…..பவி ரெஜியெல்லாம் இவள் அங்கு இல்லவே இல்லை என்பது போல் திரும்பாமல்… பார்க்காமல் போக…

‘ஐயையோஓஓ’ அடி முடியெல்லாம் அலறுகிறது இவளுக்கு…. அவனோ இவளை கடந்து சென்று இவர்கள் வீட்டிற்குள் நுழையும் தலை வாசலை மூடி உள்ளே தாழிட்டான்….

‘கடவுளே காப்பாத்து…!!!!!’ நைட்டை சமாளிக்கிறதுக்கு இவள் எதேதோ யோசித்தாள் தான்……பட் இப்படி பகல்ல மாட்டுவான்னு நினைக்கலையே….

இப்பொழுது இவளிடமாக வர தொடங்கினான் அவன்.

“இங்க  பாருங்க வினிமா எனிமான்னு எதாவது சொல்லிட்டு மேல கைய வச்சீங்க அப்றம் …” இவள் கத்த தொடங்க….அவனோ இவளை சட்டை செய்யாது அங்கிருந்த ஒரு அறைக்குள் சென்று மறைந்தான்…

இவள் மூடுக்கு இவட்ட பேசி அவ இன்னுமாய் கத்தி ….அதுவும் என்ன தொடாத அது இதுன்னு கத்தி…. இங்க அது யார் காதுலயாவது விழுந்து….எதுக்கு இப்ப இது தேவையில்லாத களேபரம் என்பது அவனுக்கு…. இப்டி சத்தமில்லாம அடுத்த ரூமுக்குப் போய்ட்டா எப்டியும் அவ பயப்படுற மாதிரி நான் நடந்துக்கப் போறதுல்லன்னு அவளுக்கு புரியும் தானே…

 இவளோ ஸ்தம்பித்துப் போய் நின்றாள் ….. ‘எவ்ளவு திண்ணக்கம் இருந்தா இவளை இப்டி கண்டுக்காம போவான் இவன்?’

“இன்னும் ஒரு மணி நேரம் நம்மள இங்க யாரும் டிஸ்டர்ப் செய்ய மாட்டாங்க……இவ்ளவு நேரம் நின்னதுக்கு பக்கத்து ரூம் பெட்ல படுத்து ரெஸ்ட் எடு….பெட்டரா ஃபீல் பண்ணுவ…ஈவ்னிங் இங்க  ஒரு ரிஷப்ஷன் இருக்குது” அடுத்த அறையிலிருந்து அவன் சொல்வது காதில் விழுகிறது இவளுக்கு….

‘வெளிய வச்சு வினிமா கண்ணம்மான்னு தாஜா பண்ணிட்டு இப்டி தனியா வந்ததும் தள்ளிப் போடி தக்காளி செடின்ற ரேஞ்சுக்கு பேசிக்கிட்டு இருக்கான்…’ கோபம் இன்னுமாய் ஏறுகிறது இவளுக்கு…

ஆனாலும் ஈவ்னிங் இன்னொரு ரிஷப்ஷன் என்ற வார்த்தையில் ஓடிப் போய் அடுத்த அறை பெட்டில் தஞ்சம்….படுக்கவும் பாடாய் படுத்துகிறது பட்டை ஒட்டியாணம்….. எழுந்து நின்று எப்படி அவிழ்க்க முனைந்தாலும் அசைய மறுக்கிறது அது…..இவள் மும்முரமாய் அதோடு போராடிக் கொண்டிருக்க….

“ஜல்ஜல்ஜல்ஜல்……ஜல் ஜல்….ஜல்ஜல்ஜல்….”

வெளியே கீழே எல்லாம் கல்யாண வீட்டிற்கான கச கச சத்தம் போய்க் கொண்டிருந்தாலும் இங்கு அப்டி ஒன்றும் சத்தமில்லை…..அமைதியாகத்தான் இருக்கிறது….அதில் இந்த ஜல் ஜல் மிக தெளிவாகவே கேட்கிறது….

தரைப் பகுதில் இருந்து கேட்டால் இவளுக்கு வித்யாசமாக தோன்றி இருக்காதாய் இருக்கும்…..ஆனால் இது கேட்கிற இடம் இவள் தலைக்கு மேல….

முதல் முறை இவள் அசட்டை செய்ய முனைந்தாலும்…..அடுத்த “ஜல்ஜல்…ஜல்ஜல்..ஜல்ஜல்…” என்ற ரிதமடிக் ஜல்ஜல்லில்….வயிற்றில் சிலீர் என பிறந்த பயம்….ஸ்பைனல் கார்ட் உடம்பில் எங்கு இருக்கிறது என தெளிவாக காட்டுகிறது அதில் ஓடி….

‘பேய்க்கு கால் இருக்காதுன்னு சொல்லுவாங்கல்ல…அதான் அந்தரத்துல ஆடுதா?’ இந்த நினவில் இவள் இதற்குள் கிடு கிடு….

அடுத்த “ஜல்ஜல்ஜல்….”

இப்பொழுது முழு உடலும் சூடாகி…கையெல்லாம் குளிர்ந்து…… ‘பகல்ல பேய்லாம் வராது….நைட் தான வரும்னு சொல்லுவாங்க…அதோட கால் இல்லாத பேய் எப்டி கொலுசு போடுமாம்??’ இவள் தன்னைத்தானே தைரியப் படுத்திக்க முனைந்தால்…

எப்பொழுதோ படித்த ஒரு எகிப்திய மம்மி கதை ஞாபகம் வருகிறது….அதுல ஒரு மம்மியோட கால்கள் மட்டும் ஒரு ஆர்கியாலஜிஸ்ட்ட  இருக்கும்….அது எழுந்து இப்டித்தான் அந்தரத்துல நடந்து போகும் தன் உடம்பை தேடி....

நினைப்பே மனக்கண்ணில் தலைக்கு மேல் இரண்டு கால்கள்….அதுவும் பெரிய பெரிய கொலுசு போட்ட கால்களை காண்பிக்க…..

அதே நேரம்…..”ஸ்………ஸ்……..” எங்கோ ஏதோ இழுபடுவது போன்ற சத்தம்….

’அந்த கால் போய் தன் உடம்பை இழுத்துட்டு வருது போல…’ அவ்வளவுதான் அவ்வளவேதான் அவளால் நினைக்க முடிந்தது…..

நிமிர்ந்தாவது பார்ப்பதாவது அடித்து பிடித்து அடுத்த அறைக்கு ஓடினாள் இவள்….. சாத்தியிருந்த கதவை தடார் என தள்ளி….

மதிய நேரம் என்பதால் இருந்த சூடுக்கு…..போட்டிருந்த கோட்டை கழற்றிவிட்டு…..ஏசியை ஆன் செய்துவிட்டு….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.