(Reading time: 23 - 46 minutes)

யார் எப்ப இவன் வீட்டுக்கு வந்தாலும்….எந்த காரணத்துக்காகவும் வீட்டாள்களை தவிர, அதாவது இந்த அண்ணன் தம்பிங்க மூனு பேரை தவிர, யாரும் மாடி ஏறும் வழக்கம் இங்க கிடையாது…..அதோட மேல இருந்து யவியும் கீழ வந்தாச்சு…..அண்ணி மட்டும் தான்….கண்டிப்பா கதவை பூட்டிட்டு கிளம்பிட்டு இருப்பாங்க…..இவ போய் அவங்க போர்ஷன் கதவை தட்டுறதுக்கு முன்னால இவன் நிறுத்திட்டான்னா….அவட்ட பேச ரெண்டு நிமிஷம் கிடச்சாலும் போதும்….சட்டுன்னு விஷயத்தை சொல்லிட்டு வந்துடலாம்……என்பது அவன் ப்ளான்.

அதன் படி இவன் அவள் கதவைத் தட்டும் முன் அவளை நிறுத்தியும் விட்டான்…

“சாரி பவிப் பொண்னு….இன்னைக்கு பிறகு, இனி அவ்ளவா பார்க்க முடியாது…. பேசுனாதான ப்ரச்சனை…சின்னதா விளையாண்டு பார்ப்போம்னு நினைச்சது…..மனசு கஷ்ட படுற மாதிரி இப்டி  ஆகிட்டு…..நான் சொன்ன மாதிரி இனி எல்லா வகையிலும் விலகியே இருப்போம்….ரொம்ப எமர்ஜென்சினா மட்டும் கால் பண்ணு….நான் முடிஞ்ச வரை சீக்கிரமா உங்க வீட்டுக்கு பொண்னு கேட்டு வர்றேன்….சாரிடா…..கிளம்புறப்ப முகத்த உம்முன்னு வச்சுட்டு கிளம்பாத ப்ளீஸ்” நேரடியாக அவன் சொல்ல வேண்டியதை சொல்ல…. பவிஷ்யா முகத்தில் புன்னகை…

“புரிஞ்சுகிட்டதுக்கு தேங்க்ஸ் அபை… அப்ப நான் கிளம்புறேன்” சிரிப்போடு இப்போது அவள் கண்ணில் நீரும் இடம் பிடிக்க…

அவளை சிரிக்க வைக்க எண்ணியவன் “இப்டிலாம் அழுது தப்பிச்சுடலாம்னு நினைக்காத….ரெண்டு டைம் தான் ஐ லவ் யூ சொல்லியிருக்க….மூனாவது தடவை என்ட்ட தரலை நீ….ஆனாலும் அது என் கைக்கு வந்துட்டதால பனிஷ்மென்ட்டை சின்னதா மாத்திட்டேன்…எல்லோர் முன்னாலயும் நீ சொல்ல வேண்டாம்….பட் இங்க இப்ப என் முன்னால மட்டும் சொல்லிட்டு போ…”

‘ஹான்……..ஐ லவ் யூ இவன் முகத்தைப் பார்த்தா?’ அவசர அவசரமாக இடவலமாக தலையாட்டினாள் இவள்….

“அதெல்லாம் கிடையாது டைம் ஆகுது…யாரும் வர்றதுக்குள்ள சொல்லிட்டுப் போ…”

“அபை ப்ளீஸ்….” இவள் சிணுங்கலாய் கெஞ்ச…

“சரி இதையாவது வாசிச்சு காமிச்சுட்டுப் போ….” பாக்கெட்டிலிருந்து அந்த பேப்பரை அவளிடமாக எடுத்து நீட்டினான்…..

ரஷ்யனில் எழுதி இருந்ததை  பார்க்கவும் மீண்டுமாக சிணுங்கினாள்…”போங்க அபை…நான் நிலுவ கூப்ட போறேன்…”

அவன் இவளை பார்த்தபடி அப்படியே நின்றான்…..இந்த பார்வையை எப்படி மீறுவதாம்?

கையிலிருந்த பேப்பரைப் பாராமல் அவன் கண்ணைப் பார்த்துச் சொன்னாள்…..”ய ல்யூப்ல்யூ டெப்யா” அவள் சொன்னதைக் கேட்டு அவன் கண்ணில் தொடங்கி முகமெங்கும் காதல் புன்னகை பரவ தொடங்க அதே நொடி…படீரென அடித்துக் கொண்டு திறக்கிறது அருகிலிருந்த கதவு…

“ஏய் பவி முதல்ல நீ இங்க இருந்து கிளம்பு” என்பதை உறுமலாக சொல்லியபடி கொதித்துக் கொண்டிருந்தாள் நிலவினி…..

தொடரும்!

Episode # 12

Episode # 14

{kunena_discuss:929}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.