(Reading time: 24 - 48 minutes)

க அடுத்த சில நிமிடங்களில் சில போட்டோக்களையும் எடுத்து …. அபயன் சொன்னது போல் கேமிராவை கூட்டமாக சென்று அவனிடம் ஒப்படைத்தாள் பவிஷ்யா…

அபயன் அஃபீஷியல் பேச்சுடன் விடை பெற்று செல்ல…. அவன் கிளம்பவும் கேட்டாளே தன்யா ஒரு கேள்வி….இது யாருப்பா? என

அவ்வளவுதான் எல்லோரும் மொத்தமாய் காண்டாகிப் பார்க்க…. அப்றம் அலசி ஆராய்ந்ததில் புரிந்தது என்னவென்றால் கொண்டலூர்ன்ற பக்கத்து ஊர்ல ஒரு மூனு அண்ணன் தம்பி இருக்கிற வீட்டில் கடைகுட்டி பையனுக்கும் தன்யாவுக்கும் திருமணம் நிச்சயமாகும் நிலை இருக்கிறது…அதை அவளது மாமா பொண்ணு கன்னா பின்னானு மாத்தி புரிஞ்சு….இவ்ளவு நேரம் இப்டி கதை சொல்லி நம்ம பவியை கடியாக்கி இருக்கா….

தன்யா வந்த பிறகு நிலுவின் ஆல்பம் எதையும் பார்க்கவில்லை என்பதால் அபை பத்தி எந்த பேச்சும் வந்திருக்கவில்லை…

பவிக்கு நடந்தது புரிய தன்னை நினைத்தே அவளுக்கு சிரிப்பாக வருகிறது….அதோடு படு நிம்மதியாகவும் இருக்கிறது…. இதை நாளை நிச்சயம் அபயன்ட்ட சொல்லனும்….மனதிற்குள் முடிவு செய்து கொண்டாள்……நாளை கல்யாணம்…..அவன்ட்ட பேச சான்ஸ் கிடைக்குமா?

காலையில் 7 மணிக்குள் கல்யாணம்….அடுத்துதான் ப்ரேக்பாஸ்ட் கூட…. ஆக நிலவினியை தயாராக சொல்லி அவள் அம்மா எழுப்பும் போது மணி நான்கு. குளித்து வந்தவள் முடியின் ஈரம் போக இன்று தலை துவட்டியது அம்மா. சேரில் இவள் நடுநாயகமாக ஒரு பாசிபச்சையும் மஞ்சளுமான சல்வார் அணிந்து உட்கார்ந்திருக்க அம்மா இவளுக்கு தலை துவட்டி விட்டுக் கொண்டிருந்தார்.

இவள் கால் நகத்திற்கு தரையில் அமர்ந்து நெயில் பாலிஷ் பூசிக் கொண்டிருந்தாள் பவிஷ்யா….. மற்ற நட்புகளும் சொந்தங்களும் கிளம்பிக் கொண்டிருந்தனர்….இன்னும் இங்கு யாரும் வரவில்லை…..

அம்மாவும் பவிஷ்யாவும்……இவள் வாழ்க்கையின் மிக முக்கிய இரு பெண்கள்…. இனி இவங்க இவளுக்கு இருப்பாங்களா?....வந்த நினைவில் மனம் பிசைய

சட்டென எதிரில் நின்ற தன் அம்மாவின் இடுப்பைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள் நிலவினி…. “அம்மா எனக்கு என்னமோ மாதிரி இருக்குமா…..உங்க எல்லோரையும் விட்டுட்டு அங்க போய் நான் எப்டிமா தனியா இருப்பேன்….? ”

அவ்வளவுதான் அந்த சூழலில் எந்த தாய்க்குதான் கண்ணீர் வராமல் போகும்…? சுசிலாவுக்கும் கண்கள் குளமாகிக் கொண்டு வர….பவிஷ்யாவிற்கு என்ன சொல்ல செய்ய என யோசிக்க முடியாத நிலை…

அதே நேரம் மொபைலின் ரிங் டோன் சத்தம்…. அருகிலிருந்த டேபிளில் வைத்திருந்த பவிஷ்யாவின் மொபைல் தான்….

இவள் இணைப்பை எடுக்க ….”ஹலோ பவிப் பொண்ணு…” என்று வருடியது அபயனின் குரல்.

‘ஓ மை காட்….போன்ல பேச வேண்டாம்னு நேத்து தானே சொல்லிட்டுப் போனான் இவன்…..இப்ப இவங்க முன்னால…….நான் வாய திறக்காட்டாலும் என் முகமே மாட்டிவிட்டுடுமே……’

“பயப்படாத பவிக் குட்டி….. நாங்க இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவோம்…..ஆனாலும் எப்டி பார்த்தலும் வெட்டிங் முடிஞ்சு சாப்ட போக டைம் ஆகும் தான் போல….. வெட்டிங்கு பிறகு தான் சாப்டனும்னு வெயிட் பண்ண வைக்காம அண்ணிய  சாப்ட வச்சே வெடிங்க்கு கூட்டிட்டு வரனுமாம் இது யவியோட மெசேஜ்….. அதை சொல்லதான் மாப்ள வீட்ல இருந்து கூப்டாங்கன்னு சொல்லு……அண்ணி நம்பர் ரீச்ல இல்லை….அதான் இப்டினும் சொல்லிடு…..யார் பேசுனானு யாரும் குடைய மாட்டாங்க பார்…. அண்ணா அண்ணிய ஓட்றதுலயே எல்லோர் கவனமும் போய்டும்…. அடுத்து இப்ப உனக்கான பனிஷ்மென்ட்…”

கேட்டிருந்தவளுக்கு முகத்தை எப்படி வைத்துக் கொள்ளவென்றே தெரியவில்லை…..இதில் பனிஷ்மென்ட்டா என எப்படி கேட்க? அவன் தொடர்ந்தான்.

“ விடியோ பார்த்தேன்….என்னதான் என் அண்ணினாலும் அவங்க உன்னைப் பார்த்து ஐ லவ் யூ சொல்லிருக்காங்க….நீ பதிலுக்கு சிரிச்சுறுக்க…..இத்தனைக்கும் நான் இன்னும் உன்னைப் பார்த்து இதெல்லாம் சொல்லலை…….”

‘ஹான் நீ இன்னும் ஐ லவ் யூ வேற சொல்லனுமா?’

“அதனால இன்னைக்கு நான் தூத்துகுடில இருக்ற டைம்குள்ள எனக்கு நீ த்ரீ டைம்ஸ் ஐ லவ் யூன்னு சீக்ரட்டா சொல்லலையோ…. “

‘ஓ மை காட்….. இவன் என்ன இப்டி வம்பு இழுக்கான்….?’

“சொல்லலைனா நீ அண்ணிய கொண்டு வந்துவிட நம்ம வீட்டுக்கு வருவல்ல….அப்ப ஓபனா எல்லார் முன்னாலயும் நான் உன்ன சொல்ல வைப்பேன்….” 

‘மிரண்டுதான் போனாள் பெண்….என்ன இவன் எதுல விளையாடுறதுன்னே இல்லாம….’

இணைப்பை துண்டித்திருந்தான் அபயன் இப்போது.

இன்னும் நிலவினி தன் அம்மாவைக் கட்டிக் கொண்டுதான் இருந்தாள்.

“ஆன்டி….மாப்ள வீட்ல இருந்து இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவாங்களாம்….என்ன இருந்தாலும் கல்யாணம் முடிஞ்சு சாப்ட போக டைம் ஆகிடும் அதனால நிலு சாப்டுட்டு சர்ச்சுக்கு வரட்டும்ங்க்றது யவி அண்ணா அபிப்ராயம்…..நிலு போன் வேற வர்க் பண்ணலை போல…..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.