(Reading time: 25 - 50 minutes)

11. காதல் பின்னது உலகு - மனோஹரி

வ்வனின் திருமணம் இவர்களது வீட்டு முதல் கல்யாணம். அபயன் பிஸியோ பிஸி…. திருமணத்திற்கான இவர்கள் புற ஏற்பாடு அனைத்தும் அதிக்கும் அபயனுக்குமுடையதுதான். யவ்வனிடம் அவனுக்கு பிடித்த விஷயங்கள்….எது எப்படி இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டாலும்…..மற்றபடி அனைத்து விஷயங்களையும் திட்டமிட்டு, செயல்படுத்தி, நின்று கவனித்து என எல்லாம் இந்த தமையன்களின் வேலை தான்.

“தாலி வாங்குறது உன் பொறுப்பு யவி…..முடிஞ்சா அம்மாவையும் கூட்டிட்டுப் போய் வாங்கு…..அம்மாவுக்கு வர ஹெல்த் ஒத்துவரலைனா அம்மாவ கட்டாய படுத்தாத….அண்ணிட்ட அவங்களுக்கு இதுல எதுவும் எக்‌ஸ்பெக்டேஷன் இருக்கான்னு கேட்டுக்கோ? சிலருக்கு செயின் நீளமா போட பிடிக்கும்…சிலர் குட்டையா இருக்கனும்னு நினைப்பாங்க….சிலர் பருமனா போடுவாங்க….முடிஞ்சவரை அதை அவாய்ட் பண்னு…..ஏன்னா பார்க்கும் யாருக்குனாலும் அது கண்ண உறுத்தும்….சேஃப்டி கிடையாது…..அதுமாதிரி நம்ம ஊர் முறுக்கு செயின் வாங்காத….பார்த்து பார்த்து எனக்கே போரடிக்கு….பாவம் அண்ணி அவங்க அத தினமும் போடனும்……இருந்தாலும் அண்ணி என்ன கேட்காங்களோ அதை செய்து கொடுத்துடு…. அதோட கண்டிப்பா வேற ஜ்வெல் எதாவது அவங்களுக்கு கிஃப்ட் பண்றதுக்காக வாங்கிடு….” இப்படி ஐடியா குடுத்து அண்ணனை துரத்தும் எக்‌ஸ்ட்ரா வேலையும் அபயன் பார்த்தான்.

“டேய் ஒரு செயின்ல இவ்ளவு விஷயம் இருக்கா….ஆனா எனக்கு ஒரு டவ்ட்டுடா…..நீ எதுவும் சீக்ரெட்டா கல்யாணம் செய்துட்டியா என்ன…? இவ்ளவு டீடெய்ல் தெரிஞ்சு வச்சிருக்க…..? அண்ணங்க நாங்க கல்யாணம் ஆகாம இருக்கப்ப எப்படி ஓபனா கல்யாணம் செய்றதுன்னு ஏதாவது செஞ்சு வச்சிருக்கியோன்னு தோணுது….அப்டி எதுவும் இருந்தா இப்பவே சொல்லிடு…..உடனே ஒழுங்கான மேரேஜுக்கு நானும் அதியும் அரேஞ்ச் பண்ணிடுறோம்…சரிதான அதி…?” வாரினான் யவி….இது முழு கிண்டல் என தெரியும்……அருகிலிருந்த அதியும் சிரித்தான்.

Kadhal pinathu ulagu

“ஏன் சொல்ல மாட்ட….? செல்வாவோட அண்ணா மேரேஜுக்கு அவன் கூட எல்லாத்துக்கும் நான் தான அலஞ்சேன் அப்பதான் இதெல்லாம் தெரியும்….எனக்கு நீங்க ரெண்டு பேரு இருக்கீங்க ….நான் ஏன் சீக்ரெட்டா கல்யாணம் செய்யப் போறேன்….? பொண்ண தூக்கிட்டு வந்து கல்யாணம் செய்தா கூட ஊர் பார்க்க ஓபனா தான் செய்வேன்….அடிதடினு வந்தா கூட அதான் நீங்க இருக்கீங்கல்ல….பார்த்துக்க மாட்டீங்க?” அபயன் ஆப்டாய் பிட் போட்டு வைத்தான்.

“அடப்பாவி அடிவாங்க இப்பவே ஆள ரெடி பண்ணுட்டுதான் பொண்ணே பார்ப்ப போல…” என யவி பதில் சொல்ல அதியோ ஒரு புன்னகை மட்டுமாக கொண்டு அபயனைப் பார்த்தான். இது முழுக்க முழுக்க கேலிப் பேச்சு தானா என்று கேள்வி கேட்டது அவன் மனது.

“ அதி அண்ணி நம்ம வீட்டுக்கு வந்ததும் நான் அவங்களுக்கு வெல்கம் கிஃப்ட் பண்ணப் போறேன்….நீயும் எதாவது செய்…அப்பதான் நல்லா இருக்கும்…உனக்கு எதாவது ஐடியா இருந்தா சொல்லு…இல்லைனா அதையும் நானே பார்த்துகிறேன்….. அம்மா அண்ணிக்கு பேங்கிள்ஸ் கொடுக்க போறாங்களாம்…. A,R  ஜ்வெல்லரி கேட்டலாக் காமிச்சேன்….செலக்ட் செய்து கொடுத்திருக்காங்க….ஸ்டாக் இருக்காம் அங்க ஷோரூம்லயும் கேட்டுடேன்….நாளைக்கு தூத்துக்குடி போறேன்….அப்டியே வாங்கிட்டு வந்துடுவேன்…..அப்பா ஃபிலிப் யான்சி புக் கொடுக்க போறாங்க….நீயும் சீக்ரமா டிசைட் பண்ணு…. அப்றம் ஃபர்ஸ்ட் ஃப்ளோர அம்மா யவிக்கும் அண்ணிக்குமா ஏத்தமாதிரி மாத்தி கொடுக்க சொல்லிருக்காங்க….உன் ரூமை நானே செகண்ட் ஃப்ளோருக்கு மாத்திடவா இல்லை நீயும் ஷிஃப்ட் பண்றப்ப கூட இருக்கனும்னு நினைக்கியா….?” அபயன் அடுத்த கேள்விக்கு போக அதியின் மனதும் அப்போதைக்கு அங்கு போயிற்று.

“ஏன்டா எல்லாத்தையும் இழுத்துப் போட்டு நீயே செய்யனும்னு நினைக்கிற….நான் ஒன்னும் அப்டிலாம் டைம் இல்லாம இல்லை….நாம் ரெண்டு பேருமா சேர்ந்தே செய்வோம்…. யவி ரூம்ஸ்க்கு கலர் தீம்லாம் வினிட்டயும் கேட்டுக்கோ….. முடிஞ்சா அவங்க வீட்டு கலர் பேட்டனை ஃபாலோ பண்ணு…..அவங்க வீட்டை விட்டு வந்த மாதிரி ரொம்ப ஃபீல் ஆகாம இருக்கும்…..ஆனா எதுனாலும் கேட்டு செய்…” அண்ணனின் சொல்லில் தலையை ஆட்டி வைத்தான் யவி…..இதையெல்லாம் அவனுக்கும் வினிட்ட கேட்டு செய்ய ஆசைதான்…..ஆனால் அதுக்கு அவளும் ஒத்துழைக்கனுமே…. இருந்தாலும் அவ வீட்டு பேட்டனை ஃபாலோ பண்ணலாம்ன்றது நல்ல ஐடியா தான்….என்று நினைத்தது யவியின் மனம்.

அபயன் உள்ளமோ இப்படி ஐடியாவெல்லாம் கொடுக்கும் அளவுக்கு அதி இயால்பாகிக் கொண்டிருக்கிறானே….இது நல்ல முன்னேற்றம் என சிந்தித்து  மகிழ்ந்தது.

“எனக்காக இப்டி ஃப்ளோர் மாறுறது உங்களுக்கு கஷ்டமா இல்லையா…?” இது இப்போதைய யவியின் கவலை…

“ஏய்… இதென்ன பேச்சு இந்த நேரத்துல…முன்னாலயே இதெல்லாம் முடிவு செய்தது தான….உங்களுக்கும் ஃப்ரீயா இருக்கும்….நாங்களும் கேஷுவலா மூவ் பண்ண வசதியா இருக்கும்….” இது அதி.

“ஆமா யாருக்கு கரடியாக ஆசையிருக்காம்…..?” இது அபயன். “அதோட யோசிச்சுப்பார்க்கப்ப….. இந்த ப்ளான் படி அதிக்கு மேரேஜானதும் நான் தேர்ட் ஃப்ளோர் போய்டுவேன்…… அப்போ அதுக்கு மேல உள்ள மொத்த மொட்டை மாடியும் எனக்கே எனக்குன்னு ஆகிடும்….தென் என் கேர்ள் வரவும் நாங்க மொட்டை மாடி முழுக்க ஓடி ஓடி……பௌர்ணமி அப்பலாம் செம ஜாலியா இருக்கும்…..உங்களுக்குத்தான் அந்த லக் இல்லை” அபயன் யவியை இப்படி தேற்ற….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.