(Reading time: 25 - 50 minutes)

“இல்ல அவங்க அண்ணாவுக்கு இப்ப பொண்ணு பார்க்கலையாம்…..இந்த கல்யாணம் முடிஞ்சதும் மூணாவது பையனுக்குத்தான் பொண்ணு பார்க்கிறதா அவங்க வீட்ல சொல்லிருக்காங்களாம்…..எங்க அத்த பொண்ணு ஒருத்தி சென்னைல இருக்கான்னு சொன்னேன்ல….தான்யா ன்னு…..அவளத்தான் பேசிகிட்டு இருக்காங்க…..அவ சிட்டி கேர்ள்னாலும்….இவரு போட்டோவப் பார்க்கவும் சரின்னு சொல்லிட்டா போல….நிலு மேரேஜுக்கு அவ இங்க வர்றா…..சீக்கிரம் நிலுவுக்கு துணையா அவ வீடுக்கும் போய்டுவா எங்க தான்யா” என்பது வரையிலான நெஞ்சை கிழிக்கும் உரையாடல் வரை காதில் விழ……

இவள் உயிர் ஒடிங்கிப் போயிருந்த நேரத்தில் “ஹாய் நிலவினி “ என்ற படி அங்கு வந்தே நின்றாள் அந்த தான்யா…..

அடுத்தென்ன அவள் இயல்பாக பேசிக் கொண்டிருந்தாலும் இவளுக்குள் தட்டாமாலை சுற்றுகிறது நினைவலைகள்….

இவள் நிலவினிக்கு ஃப்ரெண்ட் என்றால் அந்த தான்யா தூரத்து வகையில் உறவு போல…..என்னமோ எல்லாமே பரி போவது போல் ஒரு உணர்வு இவளுள்…..

இவளின் நான் என்ற எல்லை சுருங்கி மூச்சுவிட இடமில்லாமல் இடஞ்சலாய் இருப்பது போல் அடைத்துக் கொண்டு வருகிறது….

அந்த தான்யாவின் அ முதல்  ஃ வரை அத்தனையும் தப்பு தப்பாகவே தெரிகிறது இவளுக்கு….அவ சிரிக்கிறது நல்லா இல்லை….அவ பேசுறது சரி இல்லை…..அவ குணம் சுத்தமா பிடிக்கலை….. அவ நிக்றது தப்பு…..அவ ஒரு மக்கு…..

இதில் ரெஜினா வேற….”இவல்லாம் ஒரு மூஞ்சி….. இவட்டல்லாம் போய் அபை அண்ணா மாட்டவா” என்க

எல்லாருக்கும் ஆமா எல்லாருக்கும் தெள்ளத்தெளிவா தெரியுது இந்த தான்யா அவனுக்கு மேட்ச் இல்லைனு….இது ஏன் தெரிய வேண்டியவங்களுக்கு தெரியலை என  எக்குதப்பாய் எகிறி குதிக்கிறது இவள் மனம்.

எப்படி தாங்குவாள் இதை? எத்தனை நேரம் அனுபவிப்பாள் இந்த கொடும் வதை? நாளை வரை கூட பொறுக்க முடியாது…… இன்றே இப்போதே அவன் குரலையாவது கேட்டாக வேண்டும்….. அவனோடு பேசியாக வேண்டும்…. இழுத்தெறிகிறது இவன் புறமாக இந்த உந்துதல்….

அப்பொழுதுதான்.. அந்த நேரம் தான்… இந்த ஆரம் பத்தி பேச்சு வருகிறது…… ஆக அதைக் காரணம் காட்டி அபயனை அழைத்து அவன் குரலையாவது கேட்பது என்ற முடிவுக்கு வந்திருந்தவள் அழைக்க…..

மீனுக்கு தூண்டில் போட்டால் முழு மச்ச இனமும் வந்து மாட்டியது போல்….. அவன் வாய் சொல்லும் ஒற்றை  வார்த்தை காதில் கேட்க எண்ணி நின்றால் எதிரில் அவனே வந்து நிற்கிறான்….. அதுவும் காதல் காதல் என கண் முழுவதும் காட்டியபடி….

இதில் இவள் கண்ணோடு கண் பார்த்து “அதுக்கு ஏன் நம்பர்க்கு ஏன் கூப்ட?” என முழு காதலை சுமந்த முகத்தோடு அவன் கேட்க என்ன சொல்வாளாம் இவள்…..

அவன் முகம் பார்க்க முடியாமல் சட்டென விலகி ஓடினாள் இவள்….. ஓட்டம் என்ன ஓட்டம்? ஓட்டமாய் ஒன்றிரண்டு வேக எட்டுக்கள்….அதற்குள் அவனோ

 “பவிப் பொண்ணு உன் கையப்பிடிச்சு நான் உன்னை இங்க இழுக்க வேண்டாம்னா நீயா நின்னுடு….” இவள் கைவரை அவன் கை நீட்டி இருந்தாலும் இவள் கையைப் பிடிக்காமல் அவன் சொல்ல….

அடுத்து எங்க ஓடவாம்…???

அப்படியே நின்று போனாள் அவனுக்கு முதுகு காட்டி…..

“இப்ப என் பக்கம் திரும்பலைனா நான் தான் உன்னை இந்தப் பக்கமா பிடிச்சு திருப்ப வேண்டி இருக்கும்….” அவன் சொல்லி முடிக்கும் முன்னும் அவன் புறம் திரும்பி இருந்தாள்.

இவளை பார்வையால் பருகிக் கொண்டிருந்தவன் முன் குனிந்த தலை நிமிராமல் கூம்பி நிற்கும் தாமரை மொக்காய் அவள்.

“பவிமா…” கெஞ்சலும் கொஞ்சலும் கூடவே கொட்டி ஓடும் காதலுமாய் அவன் கூப்பிட்ட விதத்தில் அவள் கண்கள் அதுவாக நிமிர்ந்து அவன் விழியோடு கலக்க….

“அன்னைக்கு குர்க்‌ஸ்ல வச்சு உன்ட்ட சொல்லாம கொள்ளாம விட்டுட்டுப் போய்ட்டேன்னு தான உனக்கு என் மேல வருத்தம்…. அதுக்கு காரணம் இருக்குடா….”

ஏன் என்று தெரியவில்லை…..அன்றைய நினைவில் இப்பொழுது இவனைப் பார்த்திருக்கும் இவள் கண்களில் சேருகிறது ஈரம்… என்ன என்கிற மௌன கேள்வியின் சஞ்சாரம் விழி ஓரம்.

“நீரதா தெரியுமா?” அவனது இந்த கேள்வியில் ஏற தொடங்கும் அதிர்ச்சி……”அவளுக்காகத்தான் நான் அன்னைக்கு அங்க வந்தேன்” என்ற அவன் வெளிப்படுத்தலில் முழுமை பெற்றிருந்தது.

அவள் விழி மொழி அறியாதவனா அவன்?

“நீ நினைக்கிற மாதிரி இல்லை….அது அதி அண்ணா….”

நின்று போயிருந்த மூச்சு இப்பொழுது தான் ஏதோ கொஞ்சம் இலகுவாகிறது……ஆனாலும் ஆயிரம் டன் பாரம் இதயம் வசம்…

“அதான் அவங்க மேரேஜ் வேண்டாம்னுட்டு…..?” இவள் கேள்வியாய் பார்க்க

அவன் பார்வையில் வலி சுமக்க சொல்கிறான் ஒரு ஆம் என்ற ஆமோதிப்பை கண் அசைவினாலே….

பின் தலை அசைத்து தன்னை சமன் செய்து கொண்டவன்….. “அந்த சூழ்நிலையில…..அதியையும் பார்த்து…..உனக்கு புரியுதுதானே…..என்னால வேற எதையும் கவனிக்க முடியலை….ஆனா அதுக்கு பிறகு என்னால முடிஞ்ச வரை உன்னை தேடி இருக்கேன்…..ப்ளீஸ் நம்பு….”

என்ன இருந்தாலும் இந்த மனம் சுயநல கலம் தான்…..இவனது இந்த வார்த்தைகளில் நீரா அதிபன் என அனைத்தும் மறந்து போக….சட்டென சடுதியில் புத்துயிராய் புது ஜனனம் கண்டாள் அவள்….காதல் ஜனனம்.

தொடரும்!

Episode # 10

Episode # 12

{kunena_discuss:929}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.