10. காதல் பின்னது உலகு - மனோஹரி
“ரெஜினாவும் பவிஷ்யாவும் இங்க வர கிளம்பிட்டாங்களாம்…..” என தன் தம்பியின் மொபைல் அழைப்பை அட்டென் செய்த பின்பு யவ்வன் வினியிடமாக சொல்ல அப்பொழுதுதான் தன் வாட்ச்சைப் பார்த்தாள் நிலவினி.
மணி 4. அசந்து போனாள் அவள். கிட்டதட்ட ரெண்டரை மணி நேரமாக யவ்வனுடன் இருந்திருக்கிறாள் இவள். ஆனால் ஏதோ வந்து ரெண்டு நிமிடம்தான் ஆனது போல் உணர்வு. அவளை நினைத்து அவளுக்கே ஆச்சர்யமாய் இருக்கிறது…..
நான்கு மணி என்றதும் ஒருபக்கம் ‘ஐயோ டைம் ஆகிட்டு….வீட்டுக்கு போகனும்…’ என உள்ளே ஒரு அலாரம் ஓடினாலும்….’ஐயோ டைம் ஆகிட்டா…..இவனை விட்டு போகனுமே’ என்ற ஒருவித தவிப்பும் அனுமதியின்றி அவள் உணர்வில் உதயமாகிறது அந்நேரமே…. அதை அடக்க வேண்டுமா அப்படியே விட்டுவிடலாமா என மூளை யோசித்து முடிக்கும் முன்னாக கூட அந்த தவிப்பை அப்படியே கண்களில் ஏந்தி எதிரிலிருப்பவனை இவளை மீறி பார்த்து வைத்தாள்.
அவனும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். இதழில் புன்னகை இல்லாவிட்டால் கூட அவன் முகம் முழுவதும் அது கொட்டிக் கிடக்கும் எப்போதும் என்பதை இவ்ளவு நேரத்தில் அவள் புரிந்து வைத்திருந்தாள். அப்படி ஒரு பாவத்துடன்தான் இப்பொழுதும் அவன் இவளைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
ஆனால் இவள் விழியில் தவிப்பை பார்த்ததும் இன்னுமாய் ஒரு கனிவும் கூடுகிறது அவன் முகத்தில்.
“உனக்கு ஓகேனா…. வீட்ல இருந்து வெட்டிங் சாரி எடுக்க வர்றப்ப நானும் வரேன் வினி “ யவ்வன் அப்படி அந்த நேரம் கேட்டபோதுதான் ‘ நீ ஏன் இங்க வந்த?’னு அவன் இன்னும் கேட்கவில்லை என்பதே இவளுக்கு உறைக்கிறது. ஆக அவள் வந்த காரணமும் அவனுக்கு புரிந்திருக்கிறது…..இப்பொழுது இவள் இருக்கும் மனநிலையும் அவனுக்கு புரிகிறது என்றுதானே அர்த்தம்….
‘நாம மேரேஜ் பண்ணிக்க உனக்கு சம்மதம் தானே?’ என்பது தானே இப்போதைய இவன் கேள்வியின் உள்ளர்த்தம். சில்லென்று உள்ளிறங்கும் ஒரு பனி நதியில் சூடாகிறது சின்னவள் கன்னங்கள்.
‘அச்சோ எல்லாத்தையும் இப்படியா முகத்துல காமிச்சு வைப்பேன்….இப்டி நேருக்கு நேரா கேட்கானே….நான் என்னன்னு பதில் சொல்ல?’ முன்பு அவனை சந்தித்த எப்போதையும் விட இப்போது இவளுக்குள் வெட்க தளைகள். விடை சொல்ல முடியாதபடி அதனால் தடைகள்.
செய்யாத செம்மையில் முகம் சிவக்க, வர வேண்டிய குரல் ஒன்றும் வராமல் போக, அதாக அவள் கண்கள் அவனை தவிர்க்க, இன்ப நதி ப்ராவகத்தில் இடைப்பட்டு அத்தனை இம்சைகளையும் அளவின்றி அவள் அனுபவித்த அந்நேரம்….வெளியே புல்லட் வந்து நிற்கும் சத்தம்.
‘ஓ பவியும் ரெஜியும் வந்தாச்சு போல…..’ அவசரமாக எழுந்து யவ்வனது அலுவலக அறையிலிருந்து வெளியே வருகிகிறாள் நிலவினி.
அவனது கேள்விக்கு வாய் திறந்து பதில் சொல்ல முடியும் என்று இவளுக்கு தோன்றவில்லை….. அதோடு பவியும் ரெஜியும்வேறு வந்தாச்சு….இன்னுமாய் இங்க இருந்து இவன்ட்ட இப்படி பேசிகிட்டு இருக்க முடியாது… அவங்கட்ட போய்டலாம்…..எல்லாத்தையும் புரிஞ்சவன்…..இந்த பதிலை புரியாமலா போய்டுவான்..??
தன் எதிரில் இருந்தவள் சட்டென எழுந்து வெளியே செல்லவும்……அவள் யாரை நினைத்துப் போகிறாள் என புரிய…. “வினிமா இப்ப வந்திருக்கது அபை……பவிஷ்யாவும் ரெஜினாவும் கார்ல வர்றாங்கன்னு சொன்னான்…..” என்று அவளுக்கு விளக்கம் சொல்லியபடி அவளை தொடர்ந்து வந்தான் யவ்வன்.
அவனது அந்த விளக்கத்தைக் கேட்டு ஆஃபீஸை விட்டு அதற்குள் வெளியே திறந்தவெளிக்கு வந்திருந்தவள் அப்படியே அசையாமல் நின்று போனாள். அபயனை எப்படி எதிர் கொள்வதாம்? இதென்ன ஏடாகூடமான சிச்சுவேஷன்? எச்சில் விழுங்கினாள். என்ன நினைப்பான்? ஐயோ என்னல்லாம் நினைக்க முடியும்? அவன் எதைவும் தப்பா நினைக்க மாட்டான்னு யவி சொல்லிருக்காங்கதான்…….அப்படி தப்பாகவே நினைக்காட்டாலும்…..இருந்தாலும்……படு தர்ம சங்கடமாய் உணர்ந்தாள் நிலவினி….. பவியோ ரெஜியோ யாராவது ஒருத்தர் கூட இருந்திருந்தா கூட இவ்ளவா தோணாதே….
இதற்குள் இவள் பார்வைக்கு படும் இடத்தில் ஒரு இளைஞன்…. பெண் பார்க்க வந்த அன்று இவள் நிமிர்ந்து பார்ப்பதைப் பார்த்து தேங்க்ஸ் அண்ணி என்றபடி காஃபியை வாங்கியவன்…. இவள் அடுத்து எதையும் நினைக்கும் முன்பாக கூட
“இன்னைக்கு கார்ல போய்ட்டுவாங்க அண்ணி…..நாளைக்கு ஆனீஸ்ல வந்து புல்லட்டை விட்டுர்றேன்….அங்க வந்து அதை பிக் அப் செய்துகோங்க…” என்றபடி அவன் வெகு இயல்பாக ஏதோ இவளோடு ஆரம்பத்திலிருந்தே பழகியவன் போல், எந்த பார்மாலிடி, கிண்டல் அல்லது ஒதுக்கம் இன்றி இவளுடன் பேச ஆரம்பித்தான்.
அந்த நொடி நிலவினி அவனை தன் வீட்டினர் போல்….தன் வயது ஒத்த ஒரு நண்பனைப் போல்….அபயனை உணரத் தொடங்கினாள்…..
சின்ன புன்னகையுடன் இவள் தலையை அசைக்கும் போதே யவ்வன் இவளுக்கு அருகில் அப்போதுதான் வந்து சேர்ந்திருந்தவன்…. “உங்க வீட்ல இப்டி புல்லைட்டை இங்கவிட்டுட்டுப் போனா எதுவும் இஷ்யூ ஆகுமா வினி….?” என அடுத்த கேள்வி கேட்க