(Reading time: 27 - 54 minutes)

க இப்பொழுதும் இவனோடு தனிமையில் இருந்த இன்நொடி வரை அவள் பயத்தை மறந்து, அவளுக்குள் இவன் மீதிருக்கும் காதல் உணர்வில் இருந்திருக்கலாம்….இப்பொழுது ஃப்ரெண்ட்ஸை பார்க்கவும் அவளது அந்த பயம்…..அது என்ன பயமோ….அது  ஞாபகம் வந்து மீண்டும் கல்யாணம் வேண்டாம் என்ற மனநிலைக்கு ஒருவேளை…..ஆம் ஒருவேளை…..தாவி இருக்கலாம் என ஒரு புரிதல் அவனில்.

என்ன இருந்தாலும் அவள் இங்கு வந்தது நிச்சயமாய் இவனைப் பார்த்து காதல் பட  இல்லை…..இந்த வெட்டிங் வேண்டாம்னு சொல்லத்தான் வந்திருப்பா….வந்த இடத்தில் இவனைக் கண்டதும் உள்ளே இருக்கும் காதல் வெளி வந்து இத்தனை நேரம் இன்முகம்…..இப்போ ஒருவேளை…..ஆம் ஒருவேளை…. பயம் வந்து பதுங்குகிறாள் போலும் அவள்…..

யவ்வனின் இந்த நினைவில் முழு தவறிருந்தது என்று சொல்வதற்கு இல்லைதான்…உண்மையில் இதுவரை பயம் மறந்துதான் நிலவினி இவனிடம் இப்படி நடந்து கொண்டதும்…. ஆனால் இன்னும் கூட அவளுக்கு அவள் பயம் ஞாபகம் வந்திருக்கவில்லை அதுதான் வித்யாசம்….

“அவ ஒரு பயந்தாங்கொள்ளினா…. நீ ஒரு குழப்பவாதி….அவ நினைக்கிறத சொல்ல பயந்து ஓடுறா… அதுக்கு ஏன் இந்த லுக்விடுற நீ….” ரெஜினாவுக்கு பவிஷ்யா சொல்ல வந்த எதுவும் புரியவில்லை எனினும்….அவள் உள்ளதை உள்ளபடி சொன்னாள்….

அவள் குரலில் தான் இயல்புக்கு வந்த பவிஷ்யா இப்போது யவ்வனிடம் எதையும் பேசும் சூழல் இல்லை என்பதால் அவனது மொபைல் நம்பரை கேட்கலாம் என யோசித்து….

“அது அண்ணா…” என தொடங்கிய நேரம் அங்கு வந்து சேர்ந்தான் அபயன்…. வந்தவன் அவளை முழுதாய் முறைத்துக் கொண்டு வந்தான்…. பின்னே அவனது அண்ணனை இவளும் அண்ணானு சொன்னா என்ன அர்த்தம்….?

ஹாஸ்பிட்டல்ல வச்சு பேசாம தலைய குனிஞ்சவதான் இப்பவரை அவனை நிமிர்ந்து பார்க்கலை….ஒரு வார்த்தை பேசலை…..இதில் இங்க வந்து இப்டி ஒரு அண்ணா….

பவிஷ்யாவுக்கு அபயனின் முறைப்பின் காரணம் முழுதாக புரிகிறதுதான்…..அப்படியே வாய் மூடி தலை குனிந்து கொண்டாள் எதுவும் பேசாமல்…பேச முடியாமல்….அவளைப் பொறுத்தவரை என்றோ மனதில் பதிந்து போன விஷயம் நிலவினியின் கணவர் அவளது வருங்கால அண்ணன் என…ஆக அதை மாற்றிக் கொள்ள மனமில்லை….

அதோடு அபயன் வெறும் கானல் நீர் தான் …கை சேர முடியாத கனவு…..தப்பி தவறி ஆயிரத்தில் ஒரு வாய்ப்பாக கை சேர்ந்தாலும்….அவன்தான் இவள் என்ற அந்த ஒருமை நிலையில்… அவன் பெற்றோர் இவளுக்கும் பெற்றோர் என்றாகும் வகையில்….அவன் அண்ணன்ங்கள் இவளுக்கும் அண்ணன்ங்கள்தானே மனதளவில்….அதை வாய் மொழியில் சொல்லி கூப்பிட்டால் என்னவாம் என்ற உணர்வு…..

ஆக எதுவும் சொல்லாமல் நிலவினியை கண்களால் தேடுவது போல் அபயனின் பார்வையை தவிர்த்தாள் பவிஷ்யா.

அதோடு அதற்கு மேல் யவ்வனிடமும் மொபைல் நம்பர் கேட்க முடியவில்லை அவளால். அபயனுக்கு இப்போது நிலவினியிடம் கேட்டு வாங்காமல் இவள் ஏன் யவ்வனிடம் கேட்கிறாள் அவனது எண்ணை என்ற கேள்வி வருமல்லவா?

ஆக யவ்வனின் மனதில் விதைத்த அந்த ‘ஒருவேளை’ நினைவை தெளிவு படுத்தாமலே வீட்டிற்கு கிளம்பினாள் பவிஷ்யா.

அபயன் காரின் ட்ரைவர் சீட்டில் அமர, பின் சீட்டில் பவிஷ்யாவும் ரெஜினாவும் ஏறியாகிவிட்டது…. நிலவினி இன்னும் வெளியில்…. யவ்வனிடம் விடைப் பெற்றுக் கொண்டிருந்தாள் அவள்.

வினி மனதிற்குள் ஒரு பிரிவாற்றாமை…..சிறு தவிப்பு……கூடவே கோடி அளவு சந்தோஷம்….மனதில் பயம் எதுவுமின்றி ஒரே மனதாய்……இவனோடுதான் வாழ்வு என்று வந்திருந்த நினைவு காரணம்…..

கூடவே ஒரு குறுகுறுப்பு…..”வெட்டிங் சேரி எடுக்க சீக்கிரம் வாங்க…” என சொல்லிவிட்டு காருக்குள் ஏறிக் கொண்டால் அடுத்து அவனால் இன்னுமாய் இவள் வெட்க வேள்வியில் விழ வேண்டாமே….

தன் மனதை யவ்வனிடம் சொல்லாமல் கிளம்பவும் தவிப்பாய் இருக்கிறது….சொல்லிவிடவும் தயக்கம் தயக்கமாய் வருக்கிறது….

எதிரில் நின்ற யவ்வன்  கண்ணை நேரடியாகப் பார்த்தவள் பின் குனிந்து அருகில் நின்று வாலாட்டிக் கொண்டிருக்கும் ரோவரின் மீது வைத்தாள்…..பேசாமல் வீட்ல போய் மொபைல்ல மெசேஜ் அனுப்ப வேண்டியதுதான் ‘சேரி எடுக்க சீக்கிரம் வாங்கன்னு…’ அது ஈசி….ஒருவழியாக இவள் முடிவுக்கு வர

“கிளம்புறேன் ரோவர் பாய்….டேக் கேர்…”

பின் மீண்டுமாக நிமிர்ந்து யவ்வனிடம்…. “அப்ப நாங்க கிளம்புறோம் யவ்வன்…” சொல்லிய படி தலையசைத்து இவள் விடை பெற முயற்சிக்க

யவ்வனோ “சேரி எடுக்க நான் வரனுமா  வேண்டாமான்னு நீ இன்னும் சொல்லலையே?” என்ற கேள்வியை நேரடியாக கேட்டுவைத்தான். அவனுக்கு அந்த ஒருவேளை குழப்பம் தீர தெளிந்தால் சந்தோஷமாக இருக்குமே என்ற நிலை….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.