(Reading time: 27 - 54 minutes)

வள் மனம் அந்த வினாவுக்கு விடைதேடி போக….. அபயன் வருகிறானே என சற்று முன் இவள் அனுபவித்த தர்மசங்கடம் தடமின்றி ஞாபகத்திலிருந்து மறைந்து போனது.

“இல்ல….அப்டில்லாம் எதுவும் ஆகாது…..ஆனா எங்களை ஆனீஸ்ல ட்ராப் பண்ணிடுங்க…அங்கருந்து ஆட்டோ வரச் சொல்லி போய்ப்போம்…” ‘இவங்க வீட்டு கார்ல போனா வீட்ல போய் என்ன விளக்கம் சொல்லவாம்?” நிலவினி யவ்வனுக்கு பதில் சொல்ல

“ஓகே அண்ணி….டன்….பைதவே ட்ராப் பண்ண நம்ம ட்ரைவர் யாரும் வேண்டாம்னு யோசிச்சேன்… இப்ப ஆனீஸ்லதான்னா……நீங்க மூனு பேர்ல யாராவது ட்ரைவ் பண்ணுவீங்கன்னா நீங்களே கார எடுத்துட்டுப் போங்க……பின்னால வந்து நான் காரை எடுத்துப்பேன்…..இல்லை நான் ட்ரைவ் பண்ணிட்டு வரனும்னாலும் ஓகே….”  அபயன் விளக்க, யார் கண்ணிலும் படாமல் இவள்  திரும்பிச் செல்வதற்கான அனைத்தையும் அபயன் யோசித்திருக்கிறான் என புரிகிறது இவளுக்கு.

புல்லட்னா ஊர்காரங்க அத்தனை பேர் கண்ணிலும் விழும், இவங்க வீட்டு ட்ரைவர் வழியா விஷயம் வெளிய போகலாம்…..நாளை அந்த ட்ரைவரைப் பார்க்கும் போது எப்படியும் இவளுக்கு கஷ்டமாக இருக்கும், கார்ல கூட இவங்க மூனு பேருமா போய்ட்டாங்கன்னா எதுவும் இயல்பு மீறி தெரியாதேன்னு யோசிக்கிறான்….

ஆனால் இதை நேரடியாக வார்த்தையில் சொல்லாமல், ஏன் கேலி கிண்டலாக கூட சொல்லிக் காண்பிக்காமல் அவன் நடந்து கொள்ளும் விதம்….எனக்கு சொந்தமா தம்பி இருந்திருந்தா இப்படித்தான் இருந்திருக்கனும்….என்று எண்ணத்தை கொண்டு வந்து தருகிறதுதான் இவளுள்.

இப்பொழுது காரின் சத்தம். “அவங்க வந்துட்டாங்க போல……யவி அண்ணிய ரோவர் ஷெட் பக்கமா கூட்டிட்டுப் போ…. அண்ணி அந்த ரோவர் கூட நல்லா ஃப்ரெண்டாகிக்கோங்க…..யவிய தம்ப் கண்ட்ரோல்ல வச்சிருக்க அது பக்கா ஷார்ட் கட்…..நீங்க சொல்லிட்டீங்கன்னா டைம் ஆனதும் அதுவே அவனை இங்க இருந்து துரத்திடும்…..அவ்ளவு ஷார்ப்  அது…..கார் உள்ள வரும்….” அபயன் சொல்லிக் கொண்டே கேட் நோக்கிப் போக…..நிலவினி யவ்வனுடன் நடக்க தொடங்கி இருந்தாள் அவன் செல்லும் திசையில்…..

காரை ஓட்டி வர்ற ட்ரைவர் இவளைப் பார்க்காம இருக்க இந்த வாக் போல…… ஆனால் ரோவரை திரும்பியும் பார்க்கனுமா??? ஆனாலும் நாய் என்றதும் நடுங்கும் இவளது இயல்பான அளவு பயம் இவளுக்குள் இப்பொழுது வரவில்லை….காரணம் இணயாய் நடந்து வரும் இவனா?

வர்களைப் பார்க்கவும் மீண்டுமாய் துள்ளியபடி ஓடி வந்த ரோவர் இப்பொழுது யவ்வனின் காலில் தன் உடலை உரசிக் கொண்டு, வளைத்து வளைத்து வாலாட்டியபடி….வாஞ்சையாய் இவளை ஒரு லுக் விட்டது. “மோஸ்ட் ப்ரெஷியஷ் ஜந்து ஆஃப் மை முதலாளி…..நானும் உனக்கு ஃப்ரெண்டாகத்தான் ஆசைப்படுறேன்….”  

அது தங்களை நோக்கி வருவதைப் பார்க்கவும் யவ்வனுக்கு இன்னுமாய் அருகில் சென்று சற்று பம்மிய நிலவினிக்கு இப்பொழுது அந்த அளவு கூட தயக்கம் வரவில்லை…

“ஹாய் ரோவர் பாய்….” இவள் தான்….

‘ஹை அக்கா என்ட்ட பேசிட்டாங்க… என்ட்ட பேசிட்டாங்க….’  செம குஷியாகிப் போனது ரோவர்….

இப்பொழுது தரையில் ஒரு உருளல் உருண்டு எழுந்தது அது….

“அவன் ரொம்ப ஹேப்பியாகிட்டான்…..உன்னை விளையாட கூப்டுறான்…” ரோவரின் செயலுக்கு விளக்கம் சொல்லியபடி கால் மடித்து தரையில் படாமல் அதன் அருகில் உட்கார்ந்தான் யவ்வன்.

அவனை பின்பற்றி இவளும் அதே போல் உட்கார…. இப்பொழுது தன் கை நீட்டி ரோவரின் தலையை தடவினான்  யவ்வன். “நீயும் இப்டி பண்ணு வினிமா….ரோவர் உன்ட்ட நல்லா சேர்ந்துப்பான்…”

சற்று பயமாக இருந்தாலும் ஏனோ யவ்வன் சொன்னதை முயற்சி செய்து பார்க்க முடியாத அளவுக்கு அது பெரும் பயமாக இல்லை….இப்பொழுது ரோவரைப் பார்த்தாள்.

வெகு சுக சஞ்சாரத்தில், கண்ணை திறந்து திறந்து மூடி, யவ்வன் தடவ தன் தலையைக் கொடுத்துக் கொண்டிருந்தது அது….

 கீழ் உதட்டை சின்னதாய் கடித்தபடி இப்பொழுது இவளும் கை நீட்டி அந்த ரோவரின் தலையை நீவினாள். முதலில் பட்டும் படாமலும்….பின் சற்றே சற்று அழுத்தமாக

அதே கண் மூடல்…அதே சுக சஞ்சாரம் ரோவரிடம்….. இவள் போதும் என கையை எடுத்துக் கொள்ள சட்டென  இதுவரை தடவிக் கொடுத்த பகுதிக்கு அடுத்த பகுதியை திருப்பிக் காட்டுகிறது ரோவர்… ‘அக்கா இங்க இங்க….’

“அவன் இப்டித்தான் நீயா நிறுத்துற வரை கேட்டுகிட்டே இருப்பான்… நீ எந்திரிச்சுக்கோ உனக்கு கால் வலிக்கப் போகுது வினிமா..” யவ்வனின் சொல்லில் இவள் எழுந்து கொள்ள

துள்ளி ஓடிப் பொனது ரோவர் இப்போது….இவளை திரும்பி திரும்பி பார்த்தபடி….

“ரோவர் உன்னை விடுறதா இல்லை போல….பால் விளையாட கூப்டுறான்…” யவ்வன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு குட்டி பந்தை எங்கிருந்தோ வாயில் கவ்வியபடி ஓடி வந்து அதை இவள் முன்பாக போடுகிறது ரோவர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.