இவன் பண்ணையில் உற்பத்தி ஆகும் இறால் பெரும்பாலும் வெளி நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப் படுபவை….அதற்காக அவை தூத்துக்குடி துறைமுகம் செல்லும்…. அப்படி கிளம்பும் லாரிகளின் நம்பர்ப்ளேட்டுகளை ஒரு சான்றுக்காக ஆட்டோமெடிக்காக ஃபோட்டோ எடுத்து வைக்கும் படிக்கு அந்த இடத்தில் காமிரா வைக்கப் பட்டிருக்கிறது…..
மூவ்மென்டில் இருந்தாலும் கூட நம்பர் தெளிவாக தெரியும்படியாக ஹை டெஃப்னிஷன் ட்ராஃபிக் கேமிராதான் அங்கு இருப்பது….. .. அதுவும் கன்டெய்னர் லாரிகளின் நம்பர் பிளேட் தரைக்கு சற்று மேல்தான் இருக்கும் என்பதால் காமிரா அந்த இடத்தை நோக்கியே பொறுத்தப் பட்டிருக்கிறது….
நிலவினி மேலிருந்து விழுந்த அதிர்ச்சியில் காமிராவின் சென்சார் ஆக்டிவேட்டாக….அது நடந்தவைகளை போட்டோ எடுத்து வைத்திருக்கிறது….. யவ்வன் நிலவினி மேலிருந்து கீழே விழும்போதே இதை ஓரளவு ஊகித்திருந்தான்தான்.
ஆக அவள் சென்றதும், அதை மற்ற ஊழியர்கள் பார்ப்பதற்கு முன் எடுத்துப் பார்க்க, அவனது வினியின் காதல் பொங்கும் முகம் இவனைப் பார்த்தபடி க்ளோசப் ஷாட்டில் இரண்டு போட்டோ….
இரண்டிலும் தெள்ளத்தெளிவாக தெரிவது வினிக்கு இவன் மீதிருக்கும் காதல்….
அதை அப்படியே நிலவினிக்கு அனுப்பி இருந்தான் அவன். தன்னிடம் இருந்ததை டெலிட் செய்து நீக்கியும் போட்டிருந்தான்.
இதைப் பாரு வினி…உலகத்துல கண்ணுள்ள யாரு இந்த ஃபோட்டோஸைப் பார்த்தாலும் நீ என்னை….. நம்ம கல்யாணத்தை விரும்புறன்னு அவங்களுக்கு புரியும்…அப்படி தெளிவா உன் முகத்தில தெரியுது உன் காதல்…..ஆனா உனக்கு மட்டும் இதுல எப்பவும் குழப்பம்….இதைப் பார்த்துட்டு நீயே புரிஞ்சுக்கோ நீ என்னை எவ்ளவு விரும்புறன்னு…..பைதவே இதோட எந்த காபியும் என்ட்ட கிடையாது……எல்லாத்தையும் டெலிட் செய்துட்டேன்….நாம மேரேஜை நடக்க விட போறன்னா இதை நமக்கே நமக்காக பத்ரமா வை…..இல்லை இதுக்கும் மேலயும் இன்னும் உன் பயத்துக்குள்ளயே உழன்டு இந்த கல்யாணத்தை நிறுத்தப் போறன்னா….இதை நீயே டெலிட் செய்துடு….
இதுதான் அவன் அனுப்பிய மெயிலின் சாரம்சம்……முழுதாக படித்திருந்தால் நிலவினிக்கு இது புரிந்திருக்கும்….
ஏற்கனவே யவ்வன் இவள் எதிர் பார்த்த நேரத்தில் அழைக்காமல் லேட்டாக அழைத்தது….கொண்டல்புரத்திலிருந்து கிளம்பும் போது யவ்வனிடம் இவள் பேசாமல் கிளம்பினாள் அல்லவா…அந்த ஞாபகத்தில் இவளிடம் கலகலப்பாக பேசாமல் அவன் அமைதியாக பேசியது…..அவள் மூட் அவுட்டாக இருக்கும் நேரத்தில் இவன் எடுத்தவுடன் கலகலக்க கூடாதே…..
இதெல்லாம் அவனது கலகலப்பும்… பாச பரிவுமான வழக்கமான பேச்சை எதிர்பார்த்திருந்த நிலவினிக்கு அவன் அவள் மீது நல்ல மூடில் இல்லை என்ற எண்ணத்தோடு மெயிலை திறக்க செய்ய….அதே மூடில் அவள் இப்படிப் பட்ட போட்டோவைப் பார்க்க…..கதை இப்படியாய் திரும்பிப் போனது..
முதலில் அவளது சம்மத மெசேஜைப் பார்க்கவும் யவ்வனுக்கு தனக்கு இறகு முளைத்துவிட்டதோ என்று சந்தேகம் வரும் அளவுக்கு சந்தோஷமாக இருந்தாலும்….அடுத்து அவன் அழைக்கும் போது அவளது மொபைல் ஃஸ்விட்ச் ஆஃப் என்பது சற்று உறுத்தியது என்றாலும்….அவள் அவன் முகம் காண முடியாமல் சிவந்த வினாடிகள் ஞாபகம் வர…..அதே போல் இப்போதும் அவனிடம் பேச முடியாதவாறு வெட்க சிறைக்குள் வீழ்ந்தாளோ என எண்ணினான்….
ஆனால் அன்றும் அடுத்து வந்த நாட்களும் அதே கதியில் செல்ல….அவளுக்கு அவன் அனுப்பிய மெயில்களும் பதிலற்றுப் போக என்ன செய்யவென்று அவனுக்கு புரியவில்லை….எப்படியும் அவனால் திருமணத்தை நிறுத்தவெல்லாம் இயலாது….அதோடு இப்பொழுது அவளும் அவனிடம் சம்மதம் தான் சொல்லி வைத்திருக்கிறாள்…..ஆக காத்திருந்தான் பொறுமையாக….
இதற்கிடையில் நிலவினியின் அக்காவின் முயற்சியில் இருபக்க பெரியவர்கள் விருப்பபடி திருமண தேதி வேறு 20 நாட்களில் என முடிவானது. அக்காவும் ஊருக்குப் போகும் முன் திருமணம் நடந்த படி இருக்குமே….
ஊர் வழக்கம் தடுத்ததால் இவனால் கிளம்பி அவள் வீட்டில் போய் நிற்க முடியவில்லை…. இருந்தாலும் அடுத்த நாளே பத்திரிக்கை அடித்து வர வைத்து, அதைக் கொடுக்க என அதியுடன் இவனும் அவளது வீட்டிற்கு போய் நின்றான்தான்…..அவள் கண்ணில் படவே இல்லை…..
உண்மையில் நிலவினிக்கு அன்றுதான் காய்ச்சல் ஒருவாறு சரியாகி இருந்தது…..ஆனால் அவன் வீட்டிற்கு வருகிறான் என தெரியவும்…..படுக்கையில் போய் கண் மூடி விழுந்தவள் எழும்பவே இல்லை…..அவன் பார்வையில் போய் நிற்கவே கொதிக்கிறதே இவளுக்கு…
“அவளுக்கு ஃபீவர் இப்பதான் சரியாச்சு…..அதான் டயார்டா இருக்கு போல…..இப்டி அன்டைம்ல தூங்குறா…..” என்ற விளக்கம் தான் கிடைத்தது யவ்வனுக்கு….