(Reading time: 27 - 54 minutes)

வன் அப்படி வெளிப்படையாக கேட்ட பிறகு எப்படி பதில் சொல்லாமல் போகவாம்….? நிலவினி அவனுக்கு பதில் சொல்லிவிடலாம் என்று நினைத்த நேரம்…. காரிலிருந்து காற்றுவாக்கில் வந்து விழுகிறது ரெஜியின் குரல்

“நாளைக்கு நிலு வீட்ல அரிசி கூட்டம் போட சரோஜா ஆன்டி வராங்களாம்…. சான்ஸே இல்ல…செம டைப்ல அவங்க…..உனக்கு தெரியுமா…. நீராவுக்கு மேரேஜானது கூட இங்க பக்கத்துல ஏதோ ஊர்தானாம்….”

அவ்வளவுதான்….அவ்வளவேதான்….சிவந்திருந்த நிலவினியின் முகம் ‘ம்’ எனும்முன் வெளிறி….இப்போது இவன்…யவ்வனின் பார்வைக்குள் இருக்கும் போதே பய நீலம் கொள்கிறது.

மறந்து போன பயங்கள் மெல்ல ஞாபகம் வர ……கூடவே இத்தனைக்கும் பிறகும், இத்தனையாய் இவனை விரும்பிய பிறகும், இவன்தான் என்னவன்….இவனோடுதான் என் வாழ்வு என்று எண்ணிவிட்ட பிறகும்….இத்தனையாய் அந்த விருப்பத்தை அவனிடம் காட்டிவிட்ட பிறகும்…இத்தனையாய் அவன் மனதில் கனவு விதைகளை தூவிய பிறகும்….இவனை எப்படி வேண்டாம் என்று சொல்கிறதாம்….? என்ற ஒரு அழுத்தமான கேள்வி அவளை பயம் பக்கம் சாயாமல் பாய்ந்து பிடிக்க….விக்கித்து நின்றாள் அவள்.

எது எப்படியோ இதற்கு மேல் இந்த திருமணத்தை நிறுத்த எப்படி கூடும் இவளால்? எப்படி இவனை வேண்டாமென்று சொல்வாள் இவள்…?

அப்படியே கதவு திறந்திருந்த காருக்குள் ஏறி அமர்ந்து அவள் கதவை மூடிக் கொள்ள….இதற்கு மேல் இந்த சூழ்நிலையில் அவளிடம் எது பேசுவதும் சரிவராது என நினைத்த யவ்வன் “உன் மொபைல் நம்பராவது கொடு வினி……நான் கால் பண்றேன்… “ என்றான் குனிந்து காருக்குள் இருந்தவளைப் பார்த்து…

அவள் எதுவும் சொல்லும் முன் கூட….”யவி அண்ணா இவ்ளவு நேரம் இது கூடவா கேட்காம இருந்தீங்க……” என ரெஜி ஆரம்பிக்க….

“இதெல்லாம் தேவைனு இப்பவாவது நியாபகம் வந்துச்சே….” என்று அபயன் தன் அண்ணனைக் கலாய்ப்பது போல பவிஷ்யாவை ரியர்வியூவில் பார்க்க…. அவளுக்கு இன்னும் அப்படி எதுவும் ஞாபகம் வரலையாம்…அதை சொல்றாராம் சார்…..இவன் நம்பரை கேட்டு வாங்கினவ…..அவளைப் பத்தி எதுவுமே சொல்லாமல் கிளம்பிட்டால்ல….….

ரெஜி கையில் தான் இப்பொழுது மூன்று தோழிகளின் மொபைலும்...ஆக “அண்ணா உங்க மொபைல் நம்பர் சொல்லுங்க…..நான் நிலு நம்பர்ல இருந்து மிஸ்கால் கொடுக்கேன் “ என அவள் உரிமையாய் சொல்ல…

அபயனோ “அப்படியே மூனு பேர் நம்பர்ல இருந்தும் என் நம்பர்க்கும் ஒரு கால் கொடுத்து வைங்க…..சேஃபா வீடு போய் சேர்ந்தீங்களான்னு தெரியனும்” என தனக்கானதை கேட்டு வாங்கினான்.

ஆக இரண்டு அண்ணன்மார் கேட்டதையும் அன்பு தங்கையாக ரெஜி நிறைவேற்றி வைக்க….நிலவினி ஒன்றும் சொல்லாமல் அமைதியாய்…..பவிஷ்யாவோ எதுவும் சொல்ல முடியாமல் அவள் நிலையில்….

அதோடு நிற்காமல்….. “ யவி அண்ணா அன்னைக்கு  உங்க மேரேஜ் ஃபிக்‌ஸானப்ப உங்க சைட்லயும் ஃபோட்டோஸ் எடுத்தீங்கள்ள, அதை நிலு ஐடிக்கு அனுப்பி வைங்களேன்…..நாங்களும் பார்த்துப்போம்ல” என்ற ரிக்வெஸ்டோடு யவ்வனின் எண்ணுக்கு நிலவினியின் மெயில் ஐடியை மெசேஜாக வேறு அனுப்பி வைத்தாள்.

அடுத்து அபயன் காரைக் கிளப்ப.. விழியிலிருந்து விலகிப் போகிறவன் மீதே பார்வையை வைத்தபடி…. வாய் திறந்து எதுவும் சொல்லாமல் வந்தாள் அவன் வினி.

ஆன்னீஸ் வரும் வரை அடுத்துப் பேசிக் கொண்டது அபயனும் நிலவினியும் அஃப்கோர்ஸ் ரெஜினாவும் தான்…. பவிஷ்யா விழி நிமிர்த்தி ரியர் வியூ கண்ணாடியைக் கூடப் பார்க்கவில்லை…

க இப்படியாய் கொண்டல்புரம் ட்ரிப் ஒரு முடிவுக்கு வர…. அன்று இரவு நிலவினி தன் மொபைலை கையில் வத்து முறைத்து முறைத்துப் பார்த்தபடி தன் படுக்கையில் உருண்டு கொண்டிருந்தாள்….

‘பெருசா பேசுவேன்னு சொல்லி நம்பர் வாங்கினான்…..இன்னும் ஒன்னையும் காணோம்….அவனுக்கே கூப்ட ஒரு மாதிரியா இருக்காம்…பின்ன நான் எப்டி கால் பண்ண…? என்னன்னு பேச?

மனதிலிருக்கும் பயத்தையும் அவனிடம் இப்பவே பேசிட்டா என்ன? என்ற அளவிற்கு இவள் எண்ணத் தொடங்கி இருக்க….. அப்பொழுது கால் செய்தான் யவ்வன்.

அவன் எண்ணை திரையில் பார்க்கவும் எழும்பி ஏறிய ஹார்மோன்கள் ஆதிக்கத்தில் திணறிப் போய் இவள் சற்று தாமதமாகத்தான் இணைப்பை ஏற்றாள் இவள்.

“சாரி வினிமா….ஈவ்னிங் தான் இங்க வொர்க் அதிகம்…..லோடிங் ஷிப்பிங்லாம் அந்த டைம் தான் இருக்கும்…. அதான் லேட்…” என அவன் ஸ்டார்டிங்கிலேயே சரண்டர் ஆக….எடுத்தவுடன் அவன் நீ ஏன் அப்படி பயந்த என்ன ப்ரச்சனை  என ஆரம்பிக்காதது நிலவினிக்கு ஒரு வகையில் பிடித்ததுதான்.

அவனிடம் விஷயத்தை பேச வார்த்தை தேடிக் கொண்டிருந்தாள் இவள். அதே நேரம் அவனோ சில இயல்பான விசாரிப்புகளுக்கு பின்….”நான் உன் மெயில் ஐடிக்கு ஃப்யூ ஃபோட்டோஸ் அனுப்பிருக்கேன் பாரு….அடுத்து பேசுறேன்….” என்று இணைப்பை துண்டித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.