(Reading time: 25 - 50 minutes)

வனை மீறி பெருமூச்சுதான் வருகிறது….அவள் சந்தோஷமாக இருக்கிறாள் என்று நம்புவதற்கில்லை…..ஆனால் எத்தனை சந்தோஷமாய் கழிய வேண்டிய தருணமிது…?

ஏனோ அவளைப் பார்க்க வேண்டும் என ஒரு தாக்கம் உள்ளே….

 மெல்ல நடந்து எதிர் புறத்திலிருந்த தன் வீட்டை நோக்கிப் போகிறான்…..வீட்டில் நுழையவும் நாசி தொட்டு நுரையீரல் நிறைக்கிறது பூ வாசம்…மல்லியும் ரோஜவுமாக மாய உலகம் கொண்டு செல்லும் சுவாசம்…

தரை தளத்தின் ஒரு அறை முழுவதும் நாளைக்கு தேவையான மாலைகள் மற்றும் கட்டப் பட்ட பூ பந்துகள்…. பை பையாய் ரோஜாக்கள்….

தங்க பாவையாய் மஞ்சள் பட்டுடுத்தி…..தலை கொள்ளாமல் பூசுமந்து அருகில் நிற்கும் அவளை கை பிடித்து தன்வரை இழுத்து பின்னோடு சூழ்ந்து….அவள் தோளில் நாடி பதித்து…. மனதிற்குள் அதாக விரிகிறது காட்சி…… 

தலையை உலுக்கி….பின்தலையை தடவி மனம் ஓடும் திசையில் குறுக்கே புகுந்து தடுத்து நிறுத்தினான்…. முதல்ல அவ இவன்ட்ட முகம் தூக்காம பேசட்டும்….. இந்த நாளும் இந்த நிமிஷமும் நினைச்சா கூட திரும்ப வருமா? ஏன் இப்டி இருக்கா? அதுவும் இத்தனை காதலும் ஆசையும் மனசுகுள்ள வச்சுகிட்டு….?

அவள் வீடும் அங்கு இப்படித்தானே இருக்கும்….

அவளுக்கு என் ஞாபகம் வராதா?

“என்ன யவி….ஒரே ஃபீலிங்ஸ் போல…..அண்ணி ஞாபகமா…?” அபயனின் சத்தத்தில் திரும்பிப் பார்க்கிறான்….

சின்னதாய் சிரித்தான் யவ்வன்….

“அங்கயும் விருந்து நடக்கும்டா…..அவங்களால ஈசியா ஃபோன் பேச முடியாது ஓட்டி தீட்டிரும் அவங்க ஃப்ரெண்ட்ஸ் கூட்டம்….” நிலவினி இவனுடன் இதுவரையே பேசவில்லை என்பது அபயனுக்கு தெரியாதே….

ஏதோ நிலவினி இப்போதுதான் பேசாமல் இருப்பதாக புரிந்து தன் அண்ணியின் செயலுக்கு தன் அண்ணனுக்கே விளக்கம் சொன்னான் அவன்.

யவ்வனுக்கு தெரியும் அபயனுக்கு எப்பவுமே பொண்ணுங்க கூட ரொம்ப ஈசியா ஒத்துப் போகும் என…..ஸ்கூல் காலேஜ் என எல்லா இடத்திலும் அபயனுக்கு அவன் க்ளாஸ் கேர்ள்ஸ் அத்தனை பேரும் ஃப்ரெண்டா இருப்பாங்க…..

ஆக வினிக்கு இவன் வீட்டில் தன்னோடு ஒத்துப் போகிறதோ இல்லையோ…..நிச்சயம் ஒரு ஃப்ரெண்ட் இப்பவே ரெடி என தோன்றுகிறது யவ்வனுக்கு…அது ஒரு வகையில் நிம்மதியாகவும் இருக்கிறது…..

“இப்ப என்ன உனக்கு அண்ணிய பார்க்கனும் அவ்ளவு தான…?” அபயன் ஆரம்பிக்க பேச்சு போகும் திசை உணர்ந்து “டேய்” என்றான் யவ்வன்.

“இங்க அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு தடவை யாராவது அவனை கேட்பாங்கடா….” சொல்லிக் கொண்டே எதை எடுக்கவோ மாடியைப் பார்த்துப் போனான் அப்போதுதான் உள்ளே வந்திருந்த அதி….

“சரி சரி நீ இங்க இல்லைனா அதுக்கும் அண்ணிய தான் எதாவது சொல்லுவாங்க மக்கள்….அதனால நீ இங்கயே இரு……ஆனா உனக்கு நான் அண்ணி இன்னைக்கு எப்டி இருக்காங்கன்னு பார்க்க வழி பண்றேன்…..”

இதற்கு மறுப்பு சொல்ல நிச்சயமாக யவியால் முடியவில்லை…..எப்படி இருப்பாள் அவள் இந்நேரம்…? என்ன உடுத்தி இருப்பாள்? என்ன சொல்லிக் கொண்டிருப்பாள்? என்ன செய்து கொண்டிருப்பாள்? கொஞ்சமாவது இயல்பாக இருப்பாளா? மனம் மனோ வேகத்தில் பாய…

“டேய் இதெல்லாம் முடியுமாடா? எதுவும் ப்ரச்சனை ஆகிடாம….” யவியின் இந்த வார்த்தைகள் போதாதாமா அபயனுக்கு….

‘நீ ஆசைப் பட்டு அதுவும் இவ்ளவு முக்கியமான விஷயத்துல வாய்விட்டு கேட்டு நான் செய்யாம இருந்தா தம்பி இனத்துக்கே அவமானம்…. பைதவே இந்த உதவிய மறக்காம ஞாபகம் வச்சுறு….ஏற்ற நேரத்துல பைசா பாக்கி இல்லாம வசூல் செய்துக்கிறேன்….இப்ப வர்றேன்…. உன் கேமிராவ குடு….” அடுத்த ஐந்தாம் நிமிடம் தன் பைக்கில் கிளம்பி இருந்தான் அபயன் தூத்துக்குடி நோக்கி….

அவன் மனதில் ஏற்கனவே ஒரு திட்டம் இருந்தது…..அதானே… இப்ப அந்த ப்ளான்ல சின்ன மாடிஃபிகேஷன்…

ன்னைக்கு இவனது அண்ணி வீட்டில் விருந்தினர்கள் பெரும்பாலோர் வந்திருப்பர்…. அவர்களுக்கு விருந்து கல்யாணம் நடைபெற இருக்கும் சர்ச்சுக்கு பக்கத்தில் ரிசப்ஷனுக்காக எடுத்திருக்கும்  மண்டபத்தில் நடந்து கொண்டிருக்கும்… இவனது அண்ணி தன் நட்பு வட்டம் சூழ வீட்டில் இருப்பாங்க….என்பது வரை இவனுக்கு இன்ஃபோ இன்றியே தெரியும்….அதுதானே இங்கு முறை… ஆனால் அந்த நட்பு வட்டத்தில் இவனது பவிப் பொண்ணு உண்டா இல்லையா என்பது தான் இவனுக்கு விசாரிச்சு தெரிஞ்சாக வேண்டிய விஷயம்…..

ஆனால் ரெஜினா ரெஜினா என ஒரு அன்பு சகோதரி இருப்பதால் இவனது பவிப் பொண்ணு அண்ணி வீட்டில்தான் இருக்கிறது என்பது கன்ஃபார்ம்டு  தகவல்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.