(Reading time: 25 - 50 minutes)

ன்னைக்கு எப்படியும் பவிட்ட இவன் பேசியாகனும்……இல்லைனா நாளைக்கு…….அதைவிட்டா வேற வழி இல்லை…..அடுத்து அவள எப்ப பார்க்க? நாளைய விட இன்னைக்குன்னா பவி அண்ணி வீட்ல இருக்றதால கூட்டம் கம்மி…..நாளைக்கு கல்யாணம் நடக்கிற இடத்துல இருப்பா அவ…. யார் கண்ணுல எப்படி மாட்டும்னு சொல்ல முடியாது….. சோ டுடே இஸ் பெஸ்ட்…..

அன்று பவி கிளம்பிய நாளிலிருந்து இவன் மனதளவில் காத்திருந்தது இந்த நாளுக்காகத்தான்….இதுக்குள்ள அவளா இவனை காண்டாக்ட் செய்திருக்கனும்…...இல்லைனா அவன் அங்க போய் அவளைப் பார்த்துப் பேசியாகனும்…..

ஆக எப்படியும் இன்று இவன் தூத்துக்குடி வந்திருப்பான் தான்…..இதில் இப்போது இவன் யவிக்கும் சின்னதாய் ஹெல்ப் பண்ண போறான்….

நேராக இவன் பைக் சென்று நின்ற இடம்…….சொல்லவே தேவை இல்லை…..நிலவினியின் வீடுதான்….. கல்யாண வீடு என்பதால் வாசலில் வாழை மரங்கள்….சீரியல் பல்ப்ஸ் அலங்காரங்கள்…..பந்தல்…..திறந்து கிடந்த வாசல்….

படிகளை தாண்டி உள்ளே போனான்…..எக்‌ஸாக்ட்லி இவன் வீடு மதிரியே வெறிச் என இருந்தது இங்கும்…..எல்லோரும் மண்டபம் போயிருப்பாங்களே…… பேச்சுக் குரல்கள் மாடியில்தான் கேட்கிறது…..

இவன் யூகமும் அதுதான்….அண்ணி ரூம் மாடியில தான் இருக்கும்…..கையில் கொண்டு வந்திருந்த கவரை ஒரு முறை பார்த்துக் கொண்டான்……நாளை நிலவினி தலையில் வைக்க வேண்டிய பூ ஆரம் இருந்தது அதில்….

பொதுவாக முன்பெல்லாம் காலையில் பெண்ணழைக்க வரும் போதுதான் மாப்பிள்ளை வீட்டார் கல்யாண புடவையுடன் கல்யாணப் பொண்னு தலையில் வைக்க வேண்டிய பூவையும் கொண்டு வருவர்….

ஆனால் நிலவினிக்கு அணியப் போகும் மாலைக்கு மேட்சாக தலையில் ஆரம் வைப்பதாக ப்ளான்…..அது வந்த கதை இதோ….

கல்யாண சேலை கலரை சொல்லிதான் யவ்வன் வீட்டில்  கல்யாண மாலைக்கு ஆர்டர் கொடுத்தது….. அந்த மாலை செய்யும் பூக்கடைக்காரர்….இப்பல்லாம் இதான் ஃபேஷன்…. மாலைக்கு மேட்சா பொண்னு தலைல வைக்க ஆரமும் செய்து கொடுத்துடுவோம்…..அழகா இருக்கும் என்க….

கேட்டலாக்கில் அதைப் பார்த்து,  நிலவினி வீட்டுக்கு அதை ஃபோட்டாவாக அனுப்ப, சரி என்று சம்மதம் வந்திருந்தது பெண் வீட்டில் இருந்து…..

“நிலு இதைப் பாரு இது நல்லா இருக்கு…சரின்னு சொல்லிடலாமா?” என்ற அம்மாவின் கேள்விக்கு பார்த்தும் பார்க்காமலுமாக நிலவினி தலையை ஆட்டி வைத்தது யாருக்கு தெரியும்.

ஆக அந்த ஆரம் இப்பொழுது அபயன் கையில்…..காலையில் மாப்பிள்ளை வீட்டார் வரும் முன்னே பொண்ணுக்கு தலை அலங்காரம் செய்து விடுவர்தானே…..முன்பு போல் வெறும் பூவைக் கொண்டு வந்து தலையில் வைப்பது என்றால் நாளை காலை கொண்டு வந்தால் போதும்தான்….

ஆனால் இந்த ஆரத்தைப் பார்த்து அதற்கு ஏற்றவாறு தலை அலங்காரம் செய்து….இதையும் பியூட்டிஷியனே ஏற்றவிதமாக தலையில் வைத்துவிடுவது என்றால் இன்று இரவே கொடுத்துவிடுவது தானே சரியாக இருக்கும்…..?

இப்படி சொல்லி இதை இங்கு கொண்டு வந்து கொடுக்க சொன்னது அபயனின் அம்மா…..ஆக அது அபயனுக்கு ஏக வசதியாக அமைந்திருக்கிறது….

மாடிக்கு போகலாம் என இவன் நிமிர்ந்து பார்க்கும் போதே…..அங்கிருந்து கீழிறங்குகிறது கொலுசு சத்தம்….கண்ணில் தெரியத் தொடங்குகிறது மென் மஞ்சள் நிறத்தில் அழகிய பிங்க் நிற பார்டர் வைத்த பட்டுப் பாவடை….

இங்கு அதிரத் தொடங்குகிறது இவனது மொபைல்……கண்களை பாவாடையின் மேல் வைத்தபடி…..வர்றது யாருன்னு இப்பவே அவனுக்கு புரிஞ்சிட்டே….. இவன் கைகள் அதுவாக பாக்கெட்டிலிருந்த மொபைலை எடுக்க….இறங்கி வந்து கொண்டிருப்பவள் முகம் தெரியத் தொடங்குகிறது பார்வையில்……அவன் அசைத்த கண்ணில் அதுவாக படுகிறது மொபைலில் ஒளிரும் பெயர்….Glaza

ஹேய்ய்ய்ய்ய் துள்ளிக் குதிக்கலாம் போலிருக்கிறது இவனுக்கு….

 வலக்கையால் தன் மொபைலை வலக்காதில் வைத்தபடி…..முகத்தில் ஒருவித தவிப்பும் ஏக்கமுமாய்…..இடப்பக்க முகத்தை இவனுக்கு காட்டி…… பின்னி தொங்கிய தன் ஒற்றை சடையை இடக்கையால் குடைந்தபடி…. இடப்புறம் சற்று திரும்பிப் பார்த்தாலும் பார்வை படும் தூரத்தில் நிற்கும் இவனைப் பார்க்காமல்…. இறங்கி வந்து கொண்டிருந்தாள் பவிஷ்யா…..இவன் எண்ணை அழைத்தபடி…

சட்டென இவன் பக்கவாட்டு அறையின் வாசலில் தொங்கிய கர்டனுக்கு பின்னாக போய் நின்று கொண்டான்…..

படி இறங்கி முடித்திருந்தவள்…..இப்பொழுது இரண்டு பக்கமும் பார்த்துவிட்டு வீட்டின் பின் வாசலை நோக்கிப் போனாள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.