(Reading time: 25 - 50 minutes)

னாலும் அவ ஏன் பூங்காவன தாத்தா சொத்தைப் பத்தி விசாரிக்கனும்….? அதோட இவன் தன் கண்ணால பார்த்தானே அவ பவ்யமா திவ்யமா பிக்பாக்கெட் அடிக்கிறதை….அதுக்கு என்ன சொல்றதாம்….?

இப்படியாய் தன் மனதை அடக்கி வைத்தான் அவன். ஆனாலும் அவனுக்கு புரியாமல் இல்லை….இவன் மனம் அவள் புறம் இரங்குகிறது என…. இது இரக்கமா? இல்லை சரிவா?

திருமணத்திற்கு முந்திய நாள் ஊர் சாப்பாடு….அதாவது கிராமம் என்றால் பெரும்பாலும் பல தலைமுறையாய் அந்த ஊரில் தான் மக்கள் வாழ்ந்திருப்பர்…..கொண்டல்புரத்தை பத்தி கேட்டா ஏழு தலை முறை கதை இருக்கும்….ஆக ஒரே மூதாதையர் வழி வந்த ஒரு  கூட்டம் தான் ஒரு கிரமாமாய் இருக்கும்…இடையில் வந்து குடியேறிய ஒன்றிரண்டு குடும்பங்கள் தவிர 90% மக்கள் உறவினராய் இருப்பர்….

சொக்காரங்க…தாயாதி…பங்காளி….குடும்பத்துகாரங்க என பலவகையில் சொல்லப் பட்டாலும் அடிப்படையில் இந்த வார்த்தையின் பொருள் இதுதான். ஒரே மூதாதையரில் இருந்து வந்தவர்கள்….. முன்பென்று இல்லை இப்போதும் பல கிராமங்களில் இந்த  குடும்பத்துகாரங்க சேர்ந்துதான் ஒவ்வொரு குடும்பத்தின் நல்லது கெட்டதை நடத்துவது…..ஒரே குடும்பத்து காரங்களுக்குள்ள எத்தனை பகை விரோதம் வந்திருந்தாலும்….. தன் வீட்டு நல்லது கெட்டதுக்கு அந்த பகையாளிய கூப்டலைனா…..மொத்த குடும்பத்துகாரங்களும் விஷேஷத்துக்கு வரமாட்டோம்….அவன கூப்டுன்னு ஒத்தக்கால்ல நின்னு பிரிஞ்சவங்கள சேர்த்துவச்சிடுவாங்க…..வீட்டுக்கு வந்து விருந்து சாப்ட்டபின்ன பகையாவது சண்டையாவது…..அடுத்த நாளே உன் தங்கச்சிய வடகரைல கட்டி கொடுத்தியே அவளுக்கு எதாவது வயசு வந்த பொண்ணு இருக்கா? என் ரெண்டாவது பையனுக்கு வரன் பார்க்கிறேன்….அதான் கேட்டேன் என சேர்ந்தவர்கள் சம்பந்தம் கூட பேசிக் கொள்வார்கள்….. அப்படி அத்தனை பேரையும் இணைத்து வைக்கும் இந்த விருந்துக்குப் பேர்தான் ஊர்சாப்பாடு என்பது…

திருமணத்திற்கு முந்திய நாள் இரவில் இது நடைபெறும்…..முன்பெல்லாம் கிராமத்தின் முக்கிய தொழில் விவசாயம்…..இப்பொழுது போல் ரெடிமேட் கார்மென்ட்ஸ் தைத்து கொடுப்பது…பீடி சுற்றிக் கொடுப்பது போன்ற தொழில்கள் கூட கிடையாது….விவசாயம் மட்டுமே முழு நேர தொழில்….பகல்ல எல்லோரும் வேலைக்கு போய்டுவாங்க…..

மத்த எல்லா ஆஃபீஸுக்கும் சனி ஞாயிறு பார்த்து லீவு கொடுத்துக்கலாம்…..ஆனா செடி கொடிட்ட தண்ணி பாய்க்க மாட்டேன் எனக்கு லீவு வேணும்னு சொல்ல முடியாதே….. ஆடு மாடுட்டயும் அப்டி சாக்கு போக்கு சொல்ல முடியாது…..ஆக இரவில் மட்டுமே விருந்துகள் நடக்கும் பொதுவாக…..அதே முறை இன்று வரை தொடர்கிறது…

காலையில் நடை பெறும் திருமணத்திற்கு யாராவது வரவில்லை எனில் பொதுவாக யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை….ஆனால் இந்த இரவு விருந்திற்கு வரவில்லை எனில் தூது பறக்கும்….விசாரணை நடக்கும்…..வேலிட் ரீசன் இல்லையெனில் வந்து நில் என சட்டம் பிறக்கும்…..எக்கு தப்பா எகிறினா ஊரைவிட்டு ஒதுக்கி வைக்ற அளவுக்கு கூட விஷயம் வம்பாகிப் போகும்…. 

நாளை காலை யவ்வன் திருமணம்….இன்று இரவு ஊர் சாப்பாடு…… அண்ணன் தம்பி முறை வர அத்தனை பேரும் தான் விருந்து பரிமாறுவாங்க….கூடவே நட்பு பட்டாளம்…..ஃப்ரெண்ட்ஸே பெரும்பாலும் கசின்ஸாதான் இருப்பாங்கன்றது அடுத்த விஷயம்….

தாம் தூம் என கோலாகலாமாக நடந்து கொண்டிருக்கிறது விருந்து…..வருகிறவர்களை முறையாய் வாவேற்கவும்…..இடம் பார்த்து உட்கார வைக்கவும்…..எல்லாவற்றையும் மேற்பார்வை பார்ப்பதுமாய்…..அதி யவி அபயன் என மூன்று பேருமே பிஸி….

அதியும் அபயனும் அவர்களது வழக்கமான ஃபார்மல்ஸில் இருந்தால் யவி மட்டும் பட்டு வேஷ்டி சட்டை….ஃபுல்ஸ்லீவ் ஷர்டின் கையை ஒரே ஒர் சுற்று மடித்துவிட்டு….வழக்கத்திற்கு மாறாக கையில் ஒரு ப்ரெஸ்லெட்டுடன்….உபயம் அம்மாவின் கட்டளை….. அவனைப் பார்க்க அவனுக்கே வித்யாசமாய்…..

பந்தி நடந்து கொண்டிருக்கும் ஹாலின் வெளி வாசலில் வந்து  நின்றான்…. தெருவெங்கும் வரிசையாய் கட்டப் பட்டிருக்கும் ட்யூப் லைட் வெளிச்சத்தில் ஜெக ஜோதியாய் ஊர்….

அதில் ஏதிரில் கட்டப்பட்டிருக்கும் மெகா சைஸ் ஃப்ளக்‌ஸ் போர்ட்ஸ்…..இவனுக்கு  இந்த  ஃப்ளக்‌ஸ் போர்ட்ஸ் பழக்கம் சுத்தமாக பிடிக்காது….ஆனால் இவன் சொல்வதை இவன் கசின்ஸ்….எம்ப்ளாயிஸெல்லாம் ஒத்துக்கனுமே….அதோட விளைவு தெருவில் அங்கங்கு முளைத்து நின்றது அது….இவனும் வினியும் கைமாறும் அன்று எடுத்துக் கொண்ட்ட போட்டோக்கள்…..சுற்றி சூழ….உறவினர் என அவைகள்….

போட்டோவில் வினி சேலையிலிருந்தாள்…..அன்று ஃபார்மில் அவளைப் பார்க்கும் போது அவள் சல்வாரில் வந்த ஞாபகம்….ஆக இன்றும் இவன் வேஷ்டி அணிந்திருப்பது போல் அவள் ஏதாவது ஸ்பெஷல் அலங்காரத்தில் இருப்பாள்…..எப்படி இருப்பாள்? என்ன ட்ரெஸ் போட்றுப்பா? அவங்க வீட்டிலும் இன்னைக்கு கல்யாணத்துக்கு வந்தவங்களுக்கு இப்ப விருந்து நடந்துகிட்டு இருக்கும்….இவ என்ன செய்துகிட்டு இருப்பா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.