(Reading time: 25 - 50 minutes)

ப்பொழுது யவிக்கே தன் ப்ரச்சனை குழப்பத்தையும் தாண்டி அபயனிடம் ஏதோ சரி இல்லையோ பையன் எங்கயோ லாக் ஆகுறானோ என்ற எண்ணம் பளிச் பளிச்….

ஆனால் அதிக்கோ ஏன் எதற்கு என்ற எந்த காரணமும் இல்லாமல் இவனது ஃப்ளோர் பால்கனியில் இவனுடன் வெள்ளைக்கோழி நின்று நிலா பார்ப்பதாக ஒரு காட்சி ப்ளாஷாகிறது.சட்டென எழுந்து கொண்டான் அவன். என்னவாகிறது எனக்கு?

இப்படி யவி வினி திருமணம் ஒவ்வொருவர் இதயத்திலும் என்ன இருக்கிறது என அவர்களுக்கும் அடுத்தவர்களுக்குமாய் காட்ட….நடந்து வந்தது.

திருமண வைபவம் என்பது ஒரு நாள் கூத்து என சொல்லப்பட்டாலும் அதற்கு முந்தைய ஏற்பாட்டின் காலமும் திருவிழாவேதான் என்பது உண்மை.

மணமாக போகிறவர்கள் மகிழ்ச்சி ஒருவிதம் என்றால் அவர்களது உடன் பிறந்தவர்களின் நிலை வேறுவகை கொண்டாட்டம்.

அபயன் அதை ஆத்மார்த்தமாய் அனுபவிக்க….தன்னைப் போலவே தன் தம்பிகளையும் நேசிக்கும் அதிக்குள்ளும் அக் கொண்டாட்டம் நுழையாமல் இல்லை…

 ண்ணிட்ட அளவு ரிங் வாங்கினியாடா?...” ஜுவல்லரி ஷாப்பில் வைத்து நிலவினிக்கு மோதிரம் வாங்க பார்த்துக் கொண்டிருந்த யவியிடம் அபயன் கேட்டுக் கொண்டிருந்தான்.

அண்ணன் தம்பிகள் மூன்று பேருமாகத்தான் போயிருந்தனர் அன்று. அதி கூட சென்றிருந்தானே தவிர அவனுக்கு அங்கு என்ன செய்யவென தெரியவில்லை என்பது தான் உண்மை…..

அவன் இதுவரை இப்படி நகை பற்றியெல்லாம் யோசித்ததே இல்லை…. நீரா கொடுத்ததற்காக அந்த மோதிரம் போட்டிருப்பான்…..அம்மா கொடுத்ததற்காக கழுத்தில் ஒரு செயின் இருக்கும்…..மற்றபடி அவனுக்கு நகை அன்னிய உலகம் ஒரு வகையில்….

ஆக தம்பிகளை முன்னால் விட்டுவிட்டு இவன் பின்னால் நின்று கொண்டிருந்தான்.

அபயன் இதில் அதிக்கு நேர்மாறு…. அவன் இதையெல்லாம் எப்பவும் ஆர்வமாக பார்க்கிறவன்…..அம்மாவுக்கு வாங்கனும் என்றாலும்….சொந்தகாரங்க யார் வீட்டு விஷேஷத்துக்கு வாங்கி கொடுக்கனும்னாலும் ….இவங்க வீட்ல அம்மா கூட நகை கடை போற வேலை அபயனுக்குத்தான்….ரசித்து செய்வான்….

ஆக அவன் தான் யவிக்கு இப்ப ஹெல்ப் பண்ணிகிட்டு இருந்தான்…..யவ்வனுக்கு இதில் இப்போது ஈடுபாடு வந்திருந்தது என்பது நிஜம்….

வினிக்கு கொஞ்சம் ஒல்லியான உடல்வாகு… ஆக அவளுக்கு மெல்லிசான நெக்லெஸ் தான் நல்லா இருக்கும்….கொஞ்சம் ஓவல் ஃபேஸ்….இந்த மாதிரி ட்ராப்ஸ் அவ ஃபேஸ்க்கு நல்லா இருக்கும்…

அவளுக்கு நீள ஃபிங்கர்ஸ்….. இந்தமாதிரி மல்டி ரிங் மோதிரம் கூட நல்லாதான் இருக்கும்….. இந்த ஃப்ளாரல் பேட்டன் டைமண்ட் ரிங் கண்டிப்பா அவளுக்கு ஷூட் ஆகும்….ஆனா டே டு டே யூஸ்க்கு இது கஷ்டம்…..சரி இதை எப்பவாவது போட வாங்கிகலாம்…இந்த சிம்பிள் ஒன்னை ரிங் எக்சேஞ்க்கு பார்க்கலாம்….

என வினியை சுற்றி அமைந்து வளர்ந்து கொண்டிருந்தது யவ்வனின் ரசனை…. ஆக அவன் அபயனுடன் சேர்ந்து தன் வருங்காலத்துக்கு நகை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போதுதான் அபயனின் இந்த கேள்வி….அளவு ரிங் வாங்கி வச்சுருக்கியா என?

நிலவினி வீட்டுக்கு பத்திரிக்கை கொடுக்கவென போன போதே இதை யோசித்து யவ்வன் அவள் வீட்டில் கேட்டு வாங்கி வந்திருந்தான் தான்……போன முறை இவன் மோதிரம் போட்டதும் அவள் இவனுக்கு போடவென தன் வீட்டாரிடம் மோதிரம் கேட்ட காட்சி அவ்வப் பொழுது வந்து அவனுக்குள் சிலிர்ப்பும் சிரிப்பும் செய்கிறது தானே…..

ஆக அவன் “அதெல்லாம் எப்பவோ ரெடி பண்ணியாச்சு “ என பதில் சொல்ல….

“டேய் யவி கேட்டு எடுத்தியா ….சர்ப்ரைஸ் கொடுக்கன்னு கேட்காம சுட்டுட்டியா…?” அபயன் சும்மா பேச்சுக்கு யவியை வம்பிழுக்க….. அதிக்குள் தான் அது அந்தரத்தில் இருந்து வந்த சுந்தர குத்தாய் குத்தியது….

“அம்மாவுடைய செயின் வினி வீட்ல கிடச்சுதாம்……” வினி வந்து போன அன்று யவ்வன் இந்த விஷயத்தை தன் வீட்டில் சொல்லியிருக்க……ஃபார்மில் வைத்து நல்ல பிள்ளையாக நிலவினி இதை யவ்வனிடம் சொல்லி இருந்தாளே……அது வெள்ளைக்கோழி ஊருக்குப் போனபின் அதி காதை அடைய அன்றிலிருந்து அதிக்குள் இரண்டு மன நிலவரம்…… இந்த கோழிய என்னனு நினைக்கனும்…?

இதில் அபயனின் பர்ஸ் வேறு அவன் அதை வைத்திருந்த டேபிள் இடுக்குக்குள் இருந்து வீடை பெயின்ட் செய்ய எடுத்த முயற்சியின் போது கிடைக்க……இப்போது அதியின்  மோதிரம் தவிர கோழி சுட்டுட்டுன்னு சொல்ல எதுவும் இல்லை….

இப்பொழுதோ அவள் அதை எடுத்துட்டுப் போனதை திருட்டுன்னு கண்டிப்பா நினைக்கனுமா? என சம்பந்தமில்லாத கேள்வி வேறு சம்பந்த சம்பந்தமில்லாத கோணத்தில் அவனுக்குள் ஓட….. அதிர்ந்துதான் போனான் அவன்….

யவிய அபி கேட்கிற மாதிரி….திருட்டு மட்டும்தான் அந்த மோதிரத்தை அனு எடுத்து வச்சிருக்க காரணமாய் இருக்கனும்னு இல்லையே… சே என்ன நினைவு இது….. அதுக்கில்ல……கீழ விழுந்து கிடந்ததை இவன் ரிங் என தெரியாமல் கூட அவள் எடுத்து வைத்திருக்கலாமே…..இப்படியாய் மனம் அவளுக்கு வக்காலத்து வாங்க இந்த நினைவுக்குப் பின் இவன் மனம் இன்னுமாய் தொய்கிறது அவளிடம்…..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.