(Reading time: 25 - 50 minutes)

வாசலில் போய் நின்றவள் மொபைலை எடுத்து பரிதாபமாக ஒரு பார்வை…..இவன் இன்னும் அட்டென் பண்ணலையே….

இன்னும் இவன் பார்வையில் தான் இருக்கிறாள் அவள்…..கையில் கொண்டு வந்திருந்த ஆரம் அடங்கிய கவரை பக்கத்திலிருந்த மேஜை மேல் பத்திரமாக வைத்தவன்….. அவள் பின் வாசல் படி இறங்கவும்…..அவளை நோக்கிப் போனான்….

வாசல் தாண்டி இறங்கி கிணற்றின் பக்கத்தில் போய் நின்று கொண்டவள் மீண்டுமாக அவனை அழைக்கவா வேண்டாமா என ஆராய்ச்சியில் இறங்க….

மெல்ல அவள் பின்னாக சென்றவன் அவள் இடது புறமாக “பவிப் பொண்ணு” என்றுவிட்டு வலப் புறமாக நின்று கொண்டான்.

அவ்ளவுதான்……அந்த இடத்தில் அவனை எதிர் பார்த்திருப்பாளா என்ன அவள்? ஹூம் என்ற சத்தத்துடன் அதிர்ச்சியில் துள்ளி…..பயத்தின் இயல்பின் படி இடப்பக்கம் குரல் கேட்டதால் வலப்பக்கமாக விலகி அங்கு நின்ற இவன் மீது ஒரு இடி….

“ஷ் ஷ்….நான் தான் பவிப்பொண்ணு….” இவன் இலவம் பஞ்சாய் சொல்ல….

இதற்குள் வந்திருப்பது இவன் என்பதை உணர்ந்து…. சத்தமிட்டுவிடக் கூடாது என தன் வாயை தன் கையாலயே பொத்தி….கிடு கிடு என நடுங்கும் உள்ளத்துடன்…..முழு கண்ணையுமாக திறந்து முன்னால் நிற்பவனைப் பதறிப் போய் பார்த்தாள்…..

 ‘எப்படிடா வந்த?’ ஓலமிட்டது அவள் உள்ளே ஒன்று….ஆனால் ஓங்கி கொண்டாடியது உள்ளாடிய உயிர் அவனைக் கண்டு….

தன் இரு புருவங்களை மட்டுமாக ஆட்டிக் காண்பித்தான் அவள் முகத்தின் முன்….

“நீ…நீங்க” அவள் திக்க…..அருகில் இருந்த கிணற்று சுவரில் ஏறி உட்கார்ந்து கொண்டான் இவன்….

“நானே தான்….” முகத்தில் மொழியில் என எதிலும் குறிப்பாக இல்லாமல் மொத்த அவனுமே  குறும்பாக அங்கு அவன்.

மாட்டிக் கொண்டது போல் ஒரு முழி அவளிடம்

“கூப்டல்ல என்னன்னு சொல்லு…” சீண்டல் செய்தான்.

“அது…..”

“அது?” கேள்வியால் பெண் மனம் நெய்தான்…

 “நிலுவுக்கு…… த…தலையில வைக்ற ஆரம்…….மா… மாப்ள வீட்ல இருந்து….. இ… இப்ப வந்தா நல்லா இருக்கும்….. காலையில ரெடி ஆகன்னு சொன்னாங்க…….” ஒருவாறு சொல்ல வந்ததை சொல்லி முடித்துவிட்டாள்…

“வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்” என்றான் அவன். எதற்கு பாராட்டுகிறான் என்றே புரியாமல் அவள்.

“நம்ம ரெண்டு பேர்க்கும் மைன்ட் எப்படி ஒன்னு போல யோசிக்குதுன்னு பார்த்தேன்….”

இப்ப மட்டும் அவளுக்கு என்ன புரிஞ்சிட்டாம்?

“இந்த ஆரத்தை காரணமா சொல்லிகிட்டு தான் நான் இங்க உன்னைப் பார்க்க வந்தேன்….” விளக்கினான் அவளுக்கு…

அவளைப் பார்க்கத்தான் வந்தானாமா? அவன் மொழியில் வயிற்றுக்குள் ஒரு சிலீர் சுரப்பு…..உயிரில் தேன் கலப்பு…..சதிராடும் பெண்மைக்குள் எங்கோ பய நதி பிறப்பு…..

“இல்ல நிஜமாவே அதுக்குத்தான் கூப்டேன்…..” அழுத்தமின்றி முனங்கி விழி தாழ்த்தி அவள்…

“ம் தெரியும்….ஆனா அதுக்கு ஏன் என் நம்பரை கூப்டனும்?......”

உண்மையில் அவனை இனி பார்க்கவே கூடாது அவனைப் பத்தி பேசவே கூடாது அவனை  நினைக்கவும் கூடாது என்ற நினைவில் அப்படி ஒரு முடிவில்தான் இவள் கொண்டல்புரத்திலிருந்து கிளம்பி வந்தது. ஆனால் நினைக்கிறதெல்லாம் செய்ய முடியுதாமா என்ன?

முன்பு அவன் எங்கு இருக்கிறான் என்றே தெரியாத காலத்திலும் அவனைத் தேடி அலைந்த மனமும் கண்ணும்……இன்று அவன் எங்கு இருக்கிறான் என அறிந்த பின்னும் ஆடாமல் அசையாமல் நின்ற இடம் நீங்காமல் நில் என்றால் நின்றுவிடுமா என்ன?

இந்த 20 நாட்களில் நொடி தோறும் அவன் நினைவின் பின்னோடும் மனதை சுமந்து….அனாலாய் எரிந்து... அது தொட்ட மெழுகாய் உருகி….அன்பில்லா பாலை போல் உலகை உணர்ந்து… தேய்ந்து தீய்ந்திருந்தாள்.

ஆனாலும் அவனை அழைத்து பேசவெல்லாம் துளியும் தைரியம் இல்லை….. அவனை காரணமின்றி அழைப்பதும் ஒன்றுதான்….அவனிடம் இவள் ஐ லவ் யூ சொல்வதும் ஒன்றுதான் அல்லவா…...?

இத்தனை நிலையிலும் இவளுக்கு இருந்த ஒரே ஆறுதல் நிலுவின் கல்யாணம் தான்….எப்படியும் அன்று அவன் வருவான் பார்த்துக் கொள்ளலாம்…..அடுத்து என்ன செய்வதாம்? மறுநாளும் மனது இப்படியே மறுகி பிதற்றுமே? அதைப் பற்றி இப்பொழுது யோசிக்கவெல்லாம் இவளுக்கு தெம்பு இல்லை…. மறுநாளைப் பத்தி மறுநாள் பார்த்துக் கொள்ளலாம்…..

 இந்த நிலையில் தான் இன்று நிலுவின் வீட்டிற்கு இவள் வந்ததே…..நிலவினிக்கு கைமாறிய நாளின் ஃபோட்டோக்கள் இவள் கண் முன் வலம் வருகின்றன…. அங்குமிங்குமாய் அதில் அவன் பிம்ப பதிவுகள்…..ஏங்கி எரிந்து கொண்டிருந்த மனதில் அது இன்னுமாய் எண்ணெய் காய்ச்சி ஊத்தின….

இதில் “ ஏய் இந்த இவன் செமயா இருக்கான்டி…..ஓ அதுவா யவி அண்ணாவோட தம்பி……” என சிறிதாய் பொறாமை பூட்டும் உரையாடல் முதல் ……

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.