(Reading time: 8 - 16 minutes)

வர்கள் இருவரும் ரிஷியின் காலில் விழுந்து தங்களை மன்னிக்கும் படி மன்றாடினர்.

கொஞ்சம் கோபம் தணிந்த அந்த ரிஷி பல திருமணம் நடந்து கணவர்களை இழக்கும் இவளை ஆண்களில் சிறந்த ஒருவன் மணந்துகொள்வான்.மன்னனின் மகளாகப் பிறந்த இவளுக்கும் அந்த சிறந்த ஆண்மகனுக்கும் நடக்கும் முதலிரவில் அவனால் பாம்பாக இருக்கும் நீ கொல்லப்படுவாய் அப்போது உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்.நீ உன் பழைய உருவை அடைவாய்.

இவளுக்கும் அந்த ஆண்களில் சிறந்தவனின்  துணை வாழ் நாள் முழுதும் கிடைக்கும்.இவளின் சாபமும் அன்று தீரும் என்றார்..

ண்களில் சிறந்த ஆண்மகனே..அந்த ரிஷியின் சாபத்திற்கு ஆளான கீர்த்திவர்மன் நானே ஆவேன்.உங்கள் மனைவியாகிய இவளே அந்த ரிஷியின்  சாபத்திற்கு ஆளான பெண். இனி நீங்கள் இருவரும் நீண்ட காலம் மகிழ்ச்சியோடு வாழ்வீர்கள்.எனக்கு விடை கொடுங்கள் என்று சொல்லி வணங்கி விடை பெற்றான் பாம்பிலிருந்து   வெளிவந்த அந்த இளைஞன்.

அவ்விளைஞன் விடை பெற்றுச் சென்றதும் நேரம் நடு நிசியைத் தாண்டியிருக்கும் என சொல்லிக் கொண்டே மஞ்சத்தில் மயக்கத்தில் இருந்த அபரஞ்சிதாவின் அருகில் போய் அமர்ந்து கொண்டான் குதிரைவீரன். மேலாடை சற்றே விலகியிருக்கத் தங்கச் சிலையென படுத்துக் கிடந்த அவளை பார்த்த குதிரைவீரனுக்கு மனம் குறுகுறுத்தது.அவளிடம் விளையாடிப் பார்க்க விரும்பியது.அவ்விருப்பத்தைத் செயல்படுத்த விரும்பி அவளின் காதின் அருகில் வாய் வைத்து அபரஞ்சிதா என்று குழைவாய் அழைத்தான். அப்படி அழைத்தபோது அவனின் ஈர இதழ்கள் அவளின் காது மடலிலும் கழுத்திலும் பட்டது அவனது சூடான மூச்சுக் காற்றும் கழுத்திலும் காதிலும் பட்டது.அவனின் இதழ்களின் ஸ்பரிசமும் அவனது அழைப்பும் மனதிற்குள் இறங்கவே அபரஞ்சிதா மெல்ல மயக்கத்திலிருந்து விடு பட்டாள்.

ம்ம்ம்..என்ற முனகல் அவளிடமிருந்து வெளியானது.அவள் விழித்துக்கொண்டாள் என்பதை உணர்ந்த குதிரைவீரன் சட்டென கால்களையும் கைகளையும் அகட்டிப் போட்டுக் கொண்டு உடலை நீட்டிப் படுத்துக்கொண்டு ஒரு சடலம் கிடப்பதைப்போல மூச்சை அடக்கிக் கிடந்தான்.மயக்கம் தெளிந்து எழுந்த அபரஞ்சிதா வழக்கம்போல் அருகில் பார்க்க மாண்டவன் போல் கிடந்த புதிய கணவனைப்.பார்த்தாள்

அவன் செத்தவன் போல் நடிக்கிறான் என்பதை அவள் அறியவில்லை.தினமும் நடக்கும் கொடுமைதான் இன்றும் நடந்திருக்கிறது என நினத்தாளவள்.தினமும் மயக்கத்திலிருந்து எழுந்ததும் அருகில் அன்றைய கணவன் செத்துக்கிடப்பதைப் பார்த்தவுடன் வாயில் கைவைத்து அழுவாளேயன்றி மாண்டவனை தொட்டு அழமாட்டாள்.ஆனால் இன்று குதிரைவீரனான தனது புதிய கணவன் தன் மனதில் காதலை நிரப்பியவனின்  இறந்த உடலைப் பார்த்து(அவன் உண்மையில் இறந்ததாக நினைத்து) தாங்கமாட்டா துயரத்துடன் அவன் உடல்மீது விழுந்து அழுதாள். மனதிற்குள் சிரித்துக் கொண்டான் குதிரைவீரன்.தன் மீது விழுந்து அழும் அபரஞ்சிதாவை வெளியே நீண்டு கிடந்த தனது இரு கரங்களாலும் தன்னோடு சேர்த்து மெள்ள அணைத்தான்.பூப்போன்ற அவளின் மென்னுடல் தன் உடலோடு அணைக்கப்பட்டதும் குதிரைவீரனின் மனம் ஹம்ம்மா..என்றது. அவனையறியாமல் அவன் வாயும் ஹம்ம்மா..என்று மிக மிக மெலிதாய் வார்த்தையை உதிர்க்க உதிர்க்கப்பட்ட அவ்வார்த்தை அபரஞ்சிதாவின் காதில் விழ காதில் விழுந்த வார்த்தை நிஜமா அல்லது தனது பிரமையா என எண்ணியவள் இறந்தவன் எப்படி தன்னை அணைப்பான் ஹம்ம்மா என்று வார்த்தையை உதிர்ப்பான் என எண்ணியவள் அழுகையை நிறுத்திவிட்டு அவன் தோளில் முகம் புதைத்து அழுதுகொண்டிருந்தவள் சட்டென தன் முகத்தைத் தூக்கி அவன் முகத்தை பார்த்தாள்.இருவர் முகமும் அருகருகே இருக்க அவளின் மூச்சுக் காற்று தன் முகத்தைத் தாக்க உஷரானான் குறும்புக்கார குதிரைவீரன்.

மூச்சை வெளிவிடாமல் இழுத்துப் பிடித்துக்கொண்டான்.மூடியிருந்த கண்களுக்குள் விழிகள் அசையாமல் நிறுத்திக் கொண்டான்.சில நிமிட நேரம் அவனின் முகத்தை உற்று நோக்கிய அபரஞ்சிதா

சுவாசமற்ற அவன் நாசியையும் அசைவில்லா அவன் கண்களையும்  கண்டு உண்மையில் அவன் இறந்து விட்டதாகவே எண்ணினாள்.இறந்த அவனின் பிணம் தன்னை அணைப்பதாகவும் அவனின் வாய் ஹம்மா என்று அழைத்ததாகவும் பயந்து போனாள் அபரஞ்சிதா..அவனின் உயிறற்ற உடலின் அணைப்பிலிருந்து விடுபட அவன் உடல் மீதிலிருந்து எழ முயற்ச்சிதாள்.அப்படி தன் உடல் மீதிலிருந்து எழ முயற்சித்த அபரஞ்சிதாவை எழ விடாமல் தன்னோடு சேர்த்து மேலும் இறுக அணைத்தான் அந்த குறும்புக்கார கில்லாடி.. அணைப்பு மேலும் இறுக எழ  முடியாமல் தோற்றுப் போனவள் குதிரைவீரனின் சடலம் தன்னை இறுக்கிப் பிடிப்பதாக எண்ணி அச்சம் உச்சம் தொட வீல் என்று அலறினாள்.

அதன் பிறகு நடந்ததையெல்லாம் அடுத்த வாரம் பார்ப்போமா..? நன்றி..

தொடரும்...

Episode 05

Episode 07

{kunena_discuss:956}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.