(Reading time: 5 - 10 minutes)

29. கிருஷ்ண சகி - மீரா ராம்

பிரபு உனக்கு எல்லாம் தெரிஞ்சிருந்தும் நீ கூட இத்தனை நாள் எதுவும் சொல்லாம இருந்துட்டீயேப்பா…” என ஆதங்கத்துடன் சதாசிவம் தாத்தா பிரபுவை பார்த்து கேட்டதும்,

“அய்யோ தாத்தா…. இவன் என்கிட்ட பேரை மட்டும் தான் சொல்லியிருக்கான்… அதுபோக வேற எதுவும் எனக்கும் தெரியாது தாத்தா….” என அவன் தன்னிலையை எடுத்து சொல்ல,

“சரி விடு… இப்போவாச்சும் உண்மை எல்லாம் தெரிஞ்சதே… அதுவரை சந்தோஷம்…” என்றார் அவர் சற்றே ஆசுவாசத்துடன்…

krishna saki

“எங்க தாத்தா… பாதி உண்மை தான தெரிஞ்சிருக்கு?... இனிமே தான் மீதி உண்மையை நாம உடனே தெரிஞ்சிக்கணும்… அதுக்கு என்ன வழின்னு பார்ப்போம்…” என்றான் பிரபுவும்…

நடந்தவைகளை கேட்டுக்கொண்டு நின்ற விஜய்க்கு இப்படி ஒரு காதல் அவர்கள் இருவரிடத்திலும் இருந்திருக்கக்கூடும் என்ற எண்ணம் ஆச்சரியத்தைத் தந்தது…

மகத்தின் அருகே சென்ற விஜய், “உங்க காதல் கை கூடாம போனதுக்கு முக்கிய காரணமே ஜித் தான்… அவனால தான் ருணதி அன்னைக்கு…” என சொல்ல முடியாமல் அவன் நிற்க,

“விடுங்க விஜய்… இனி அதைப் பத்தி பேச வேண்டாம்… நடக்கப்போறதை பேசலாம்….” என்றான் மகத்…

“இல்ல மகத்…. அவனால தான் எல்லா பிரச்சினையுமே ஆரம்பிச்சுச்சு… அவன் ஒருத்தன் மட்டும்…” என பேசிக்கொண்டே போன விஜய்யை தடுத்த மகத், பார்வையால் வேண்டாம் என கூறி,

“விஜய்… அதை விடுங்க… அடுத்த வேலையைப் பார்க்கலாம்…” என மகத் அழுத்தி கூற, விஜய்க்கு அவனின் அழுத்தத்திற்கான காரணம் ஓரளவு புரிந்தது…

அதை கவனித்துக்கொண்டிருந்த பிரபு, மகத்திடம், “ஆமாடா இனி நிறைய வேலை இருக்கு… நீ முதலில் ருணதிகிட்ட பேசு…” என்று சொன்னதும்,

“ஆமா மகத்… பிரபு சொல்லுறது சரிதான்… நீங்க முதலில் ருணதிகிட்ட பேசுங்க…” என்றான் விஜய்…

அதுவரை பேசாமல் இருந்த சதாசிவம் தாத்தா, “எல்லாம் நல்ல படியாவே நடக்கும் பிரபு.. கவலைப்படாதே…” என்று கூற,

“எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கு தாத்தா…” என்றவன், “ஆமா மகத், கேட்க மறந்துட்டேன், நதி எப்படிடா இருக்குறா?...” என்றதும்,

“நதி யாரு?...” என்றான் விஜய்…

“நதி மகத்தோட பொண்ணுப்பா…” என சதாசிவம் தாத்தா இயல்பாக கூறியதும், விஜய் கண்கள் விரிந்தது…

“வாட்?...” என அதிர்ந்தவன்,

“என்ன சொல்லுறீங்க தாத்தா?...” என அதிர்ந்துபோனவனாய் அவன் கேட்டதும் தான் பிரபுவிற்கு அவனின் அதிர்ச்சிக்குண்டான காரணம் விளங்கியது…

“விஜய்… நதிகா, மகத் தத்தெடுத்து வளர்க்குற பொண்ணு…” என சொன்னதும்

மகத், பிரபுவைத் திட்டினான்…

“உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்குறேன்… அப்படி சொல்லாதன்னு… அவ என் பொண்ணு… அதை நியாபகம் வச்சிக்கோ… சொல்லிட்டேன்…” என மிரட்டாத குறையாக அவன் சொல்லிவிட்டு நிற்க,

“நீ எப்படா இப்படி புதுசா கோபமெல்லாம் பட ஆரம்பிச்ச?...” என்றான் பிரபு கேள்வியோடு…

“எல்லாம் அந்த மகராசி கன்யா புண்ணியத்தால தான் பிரபு…” என்றார் சதாசிவம் தாத்தா…

“ஓ… எல்லாம் அந்த புண்ணியவதி தயவுதானா?...” என்றான் பிரபு கோபமாக…

“ஆமா பிரபு… அந்த கொடுமையை ஏன் கேட்குற?... அவ என்ன எல்லாம் ஆடிட்டா தெரியுமா?...” என தாத்தா அவனிடத்தில் சொல்ல போக

“தாத்தா… நீங்க…” என மகத் அவசரம் அவசரமாக தடுத்த போது,

“நீ ஏண்டா தடுக்குற?... தாத்தா நீங்க சொல்லுங்க… இந்த தடவை என்ன செஞ்சு தொலைச்சா அந்த ராட்சஸி… அவ சும்மாவே இருக்க மாட்டாளா தாத்தா?... அவ ஏன் இப்படி அகம்பாவம் பிடிச்சு அலையுறா?...” என கண்டபடி அவன் திட்டியபோது,

“பிரபு, தேவையில்லாம வார்த்தையை விடாத… என்ன இருந்தாலும் அவ ஒரு பொண்ணு…” என அவனை அதட்டினான் மகத்…

“என்னடா பொண்ணு?... சீ அவளை எல்லாம் பொண்ணுன்னு சொல்லாத… அவளை மாதிரி ஒருத்திய நான் கேள்விப்பட்டதே இல்லை… இவளை எல்லாம்…” என பிரபு சொல்லிக்கொண்டிருக்கும்போது,

“பிரபு போதும்… பேசினது… சும்மா இரு…”

“நான் எதுக்குடா சும்மா இருக்கணும்… நான் பேசதான் செய்வேன்… அவ உன்னையும் நதிகாவையும் கொஞ்ச நஞ்சமா படுத்தியிருக்குறா?... அந்த சின்னப்பொண்ணை கூட அவ விட்டு வைக்கலையே… தாத்தா அன்னைக்கு எங்கிட்ட சொன்னார்…” என அவன் சொல்லியதும், தாத்தாவைப் பார்த்தான் மகத்…

“இல்ல மகத்… அன்னைக்கு பார்த்து பிரபு எனக்கு போன் பண்ணினான்.. அதான் சொல்லிட்டேன்… மனசு கேட்காம…” என அவர் விளக்கம் கொடுக்க,

“இப்போ எதுக்குடா அவர் மேல கோபப்படுற?... முதலில் அவ கிட்ட இருந்து தூரமா விலகி போக பாரு… அதுதான் உன் வருங்காலத்துக்கு நல்லது…” என ஆத்திரத்துடன் பிரபு சொல்லவும்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.