(Reading time: 11 - 22 minutes)

வள் சிரித்தாள், அந்த சிரிப்பில் தன்னை இழந்துக் கொண்டிருந்தான், 'ஏய்ய், சிரிப்பை நிறுத்து மனுஷன் கஷ்டப் பட்டுட்டிருக்கிறான், இந்தம்மா சிரிக்கிறாங்க,' என்று கூற அவளுக்கு அழுகை வந்தது

'என்னங்க நீங்க, என் கஷ்டத்தை மறக்கத்தான் நான் சிரிச்சேன், அது தெரியாம, நீங்க என்னை திட்டறீங்க,' என்று அவள் கேட்டவுடன்

அவன் கண்ணும் கலங்கியது, 'அது இல்லடா நிஜமாகவே எனக்கு கஷ்டமாக இருக்கு, உன்னை விட்டு போக மனசு இல்லை இப்பவே வந்து உங்க அம்மாகிட்டே பேசறேன், என் செல்லத்தை, என் பொண்டாட்டியை என்னோட அழைச்சுட்டுப் போறேன்னு சொல்றேன் 'என்றான்

'அவள் 'ஓ... என்று அழுதாள், ' ஏய்ய்ய்..... இந்த மாதிரி அழக் கூடாது, நீ எனக்கு நல்லதா சொல்லி அனுப்பிவிடுவேன்னு பார்த்தா, நீ இப்படி அழுது என்னை பயமுறுத்தற, நீ அழச்சே நல்லாவே இல்ல, இப்ப சிரிச்ச பாரு அதுவே தேவல, கொஞ்சமா சகிக்கிரா மாதிரி இருந்தது,' என்று அவன் சொல்ல,

அவள் கொஞ்சமாக சிரித்து, 'அவ்வளவு ஆயிடுத்து, சரி நான் கிளம்பறேன் வீட்டுக்கு போனவுடன் தாத்தாவிடம், நம்ம விதுவை பற்றி பேசுங்க... மறந்துடாதீங்க,' என்றாள்

அவன் அவளை இழுத்து, இறுகி அனைத்து ஒரு முத்தம் கொடுத்து, 'நாளைக்கு பார்க்கலாம்' என்று சொன்னான்,

'நான் ஒன்று சொல்வேன் கேட்பாயா, நீ... என் பொண்டாட்டிதானே?'

'ஆமாம் அதிலென்ன சந்தேகம் 'என்று கேட்டாள்

'எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது, உனக்கு ஏதாவது சந்தேகமா. என்றுதான் கேட்டேன்,” என்று சொல்லிக் கொண்டே, தன் பாக்கெட்டிலிருந்து, பத்தாயிரம் ரூபாயை அவள் பையில் வைத்தான்,

அவள் 'என்ன இது?' என்று கோபமாக கேட்டபோது   

'புருஷன், பொண்டாட்டியோட தேவைக்காக பணம் கொடுக்க வேண்டும் இல்லையென்றால் அவன் புருஷனே இல்லை, நாளைக்கு வரும்போது கொஞ்சம் விரிவா பேசலாம், அப்புறம் உன் கிட்டே மறைக்க விரும்பலே, என்னை தப்பா நினைக்காதே, நீ இப்ப வேலை பார்க்கும் கம்பெனி உன்னுடையது தான், அதாவது நம்மது தான்,' என்று கூறி 'நாளைக்கு பார்க்கலாம்!” என்று கிளம்பி விட்டான்.

அவள் எல்லாவற்றிலும் குழம்பி இருந்தாள், அவன் எதற்காக பணம் கொடுத்தான், அவளுக்கு அவன் செய்வது பேசுவது, எல்லாம் பிடித்திருந்தது, சிரித்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தாள்.

'வாசலில், அவள் அம்மா காத்துக் கொண்டிருந்தாள், “ஏன் லேட்?’ என்றாள் அம்மா

'இல்லைம்மா, வரும்போது என் சிநேகிதி, அவள் காரில் கொண்டு விடுகிறேன் என்றாள், அப்படியே ஏதாவது டிபன் சாப்பிட்டு விட்டு போகலாம் என்றாள், அவள் இறக்கி விடும் போது ஏதோ ஜோக் சொன்னாள், அது என்ன என்று எனக்குப் புரியவில்லை, என்னை மக்கு என்று திட்டி விட்டுப் போகிறாள்,' என்று நீளமாக சொல்லி முடித்தாள்

குளித்துவிட்டு வந்தாள், மத்தியானம் நடந்தது , அவனுடன் கொஞ்சியது, எல்லாம் நினைத்து தானே சிரித்துக் கொண்டாள், சிறிது நேரத்தில் சாப்பிட்டு விட்டு, படுக்கப் போய் விட்டாள்.

வீடு வந்து சேர்ந்த ருத்ரா, நேரே தன் ரூமில் போய் குளித்து டிரஸ் மாத்திக் கொண்டு வந்தான் அவனுக்கு உடம்பெல்லாம் வலி, அவன் தன் தாத்தாவைப் பார்க்கச் சென்றான், அங்கு பாட்டியும் இருந்தார், அவன் மெதுவாக தாத்தாவிடம் செந்தில் கூறிய விஷயத்தை சொன்னான், தாத்தாவிற்கு ரொம்ப சந்தோஷம், பிறகு அப்பாவைக் கூட்டு தாத்தாவும், அவனும் விஷயத்தை சொன்னார்கள், அவருக்கும் மிகுந்த சந்தோஷம், “முடித்துவிடுவோம் அப்பா,’ என்றார் சிவேஷ்,

அம்மாவிடமும் பேசினான், பிறகு எல்லோரும் சரி என்று சொன்ன பின்னால், ருத்ராதான் சிதம்பரத்திற்கு போன்செய்தான், நலம் விசாரித்தான், அவர் 'ரொம்ப நாளாச்சு ஏன் போன் பன்னல,' என்று கேட்டார், அவனும் தன் புது பிசினெஸில், கொஞ்சம் பிசி என்று கூறி, அதுமட்டுமில்லை 'தன் தங்கைக்கு வேறு வரன் தேடிக் கொண்டிருக்கிறோம், வீட்டில் மூன்று கல்யாணம் நாங்கள் ரொம்ப பேரைக் கூப்பிடவில்லை சார், நீங்கள் குடும்பத்துடன் வரணும் கண்டிப்பாக' என்று சொன்னான்,

பிறகு அவரே 'உன் தங்கை என்ன படித்திருக்கிறாள்?' என்று கேட்டார்

அவனும் சொன்னான், உங்கள் மகன் கூட அதே காலேஜ் படித்தார் இல்லையா?' என்று கேட்டான்

'ஆமாம், என் மகனுக்குக் கூட வரன் பார்க்கிறோம், வேண்ணா, என் மகன் ஓகே என்று உனக்கு தோன்றினால் பார்க்கலாம்' என்றார்,'

'என்ன சார், இப்படி எல்லாம் பேசறீங்க, உங்க மகனுக்கு என்ன குறைச்சல், முடித்தே விடுவோம், உங்கள் மகனுக்கும், என் தங்கை தெரிந்திருக்கும் ஒரே காலேஜ் இல்லையா, அதனால் சொன்னேன், உங்கள் மகனிடம் கேட்டு விட்டு, சொல்லுங்கள், முறையாக பெண் பார்த்து நடக்கப் போகும் கல்யாணத்தோடு நிச்சயம் வைத்து விடலாம் பிறகு, கல்யாண நாள் நிச்சயம் செய்துக் கொள்ளலாம்….அப்புறம் ஒன்னே, ஒன்னு சார், என் தங்கை படிப்பு கண்டின்யூ பண்ணனும், நல்லா படிக்கிற பெண்,' என்றான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.