(Reading time: 5 - 9 minutes)

29. வசந்த பைரவி - ஸ்ரீலக்ஷ்மி

டுத்த பதினைந்து நாட்கள் ஒரே பரபரப்பாக இருந்தது..

ஏற்கனவே பாஸ்போர்ட் வசந்துக்கு ரெடியாக இருந்ததால், அவசரமாக விசாவிற்கு அப்ளை செய்து, இதோ இன்று இரவு வசந்தும், பைரவியும் அமெரிக்காவிற்கு கிளம்ப ரெடியாகி விட்டனர்.

சாரதா, பைரவிற்காக அவளுக்கு பிடித்த உணவு பொருட்களை பாக்கிங் செய்து தயாராக வைத்திருந்தாள்..

vasantha bairavi

வசந்திற்காக அமெரிக்க பயணதிற்கு வேண்டிய பணத்தை ஏற்பாடு செய்வதாக ராமமூர்த்தி சொல்லிய பிறகும் கூட , பைரவி அவரிடம் மறுத்து விட்டு, ஏன் தன் அண்ணனுக்கு தங்கை செலவு செய்யக் கூடாதா என்று வாதிட்டு எல்லாவற்றையும், வசந்தின் பயணப் பொறுப்பு முழுவதும் தானே ஏற்றுக் கொண்டாள்..

ஊருக்கு கிளம்பும் இந்த இடைப்பட்ட நாளில், இன்னமும் குற்ற உணர்ச்சியிலேயே இருந்த சாரதாவின் மீது தன் மொத்த அன்பையும் பொழிந்தாள் பைரவி.. பெண் குழந்தை என்று அவளை ஒதுக்கி விட்டேனே என்று அவ்வப்பொழுது புலம்பியபடி இருந்தவரை, பைரவி சமாதானப் படுத்திக் கொண்டே தான் இருந்தாள்..

எல்லாம் நல்லபடியாக ஆனால், கமலா அம்மா சம்மத்துடன் இரண்டு குழந்தைகளுமே வேண்டுமானால், 'வேகேஷனுக்கு உறவினர் போவது போல உரிமையாக இங்கே வந்து அவருடன் இருப்பதாக சொன்னவள், அதே போல கமலாம்மா இஷ்டப்பட்டால், வசந்துமே அங்கே கொஞ்சம் நாள் தங்கியிருக்கலாமே' என்று சாரதாவை சமாதானப் படுத்தியவள், பெரியவர்களுமே, நாளை பின்னாளில் அவளுக்கே திருமணமானலும் அவளுடன் வந்து தங்கலாமே என்று சொல்லி அவரை சமாளித்தபடி இருந்தாள்.

மஹதிக்கும், அஜய்க்கும் தன் தோழி மீண்டும் அமெரிக்கா போகிறாளே என்று கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும், இன்னும் கொஞ்சம் நாட்களில் அவர்களுமே, அஜய்யின் வேலையின் பொருட்டு அமெரிக்காவுக்கே திரும்பி செல்வதால், கூடிய சீக்கிரமே தங்கள் தோழியுடன் இருக்கலாம் என்ற நம்பிக்கையில் சகஜமாக இருக்க முயன்றனர்.

ரஞ்சனியும், கல்யாணியும் எப்பொழுதும் போல பொறாமையுடன், 'அப்போ பைரவி கடைசியில் தங்கள் சொந்த தங்கையா?.. அவளுக்கு வந்த வாழ்வை பார்.. அமெரிக்காவில் கொழிக்கிறாள்.. இந்த அம்மா நம்மளை இப்படி யாருக்காகவாது குழந்தையில மாற்றி கொடுத்திருந்தா, நன்னா இருந்திருக்குமே.. வசந்துக்கும் நல்ல அதிர்ஷ்டம் தான்.. அண்ணா அண்ணான்னு இந்த பைரவி அவனோட இழைஞ்சிண்டு எல்லாத்தையும் செய்யறாள்.. ஓசியில இந்த வசந்த் அமெரிக்கா போறான்' என்று உள்ளுக்குள் வயிரெறிந்தபடியே அவளுக்கு விடை கொடுக்க குடும்பத்துடன் தங்கள் பிறந்தகத்துக்கு வந்து இறங்கி இருந்தனர்.

"அம்மா, அப்பா போயிட்டு வரட்டுமா??" என்று பெற்றவர் கால்களில் விழுந்து நமஸ்கரித்து விடை பெற்றுக் கொண்டிருந்தான் வசந்த்..

"நல்லபடியா போயிட்டு வாப்பா..  கமலாவையும், விஸ்வனாதனையும் கேட்டதாகச் சொல்லு.. அவ உடம்பு குணமானதும் நாங்களும் வந்து பார்க்கறோம்ன்னு சொல்லுப்பா"  என்ற சாரதாவுக்கு, வெறுமனே தலையாட்டினான் வசந்த்..

அவனுக்கும் துக்கம் தொண்டையை அடைத்தது.. பெற்றவர்களை பிரிந்து செல்லும் முதல் தொலை தூரப் பயணம் இது.. பெற்ற தாயை எப்படி எதிர் கொள்ள போகிறோம், என்ற படபடப்பு அவனையறியாமல் உள்ளுக்குள் எழுந்தது.. காலம் தான் எல்லாவற்றுக்கும் நல்ல பதிலை சொல்லும், என நினைத்தவன் ஒரு பெருமூச்சை விட்டு,

"அம்மா, பைரவி எங்கே??... இமிகேரஷனுக்கு நேரமாச்சே?" என கேள்வியாக நோக்க, தன் பார்வையாலேயே அங்கே நிற்கிறாள் என்று பதிலுரைத்தாள் சாரதா.

வசந்த் திரும்ப,  சற்று தள்ளி நின்று கொண்டு ஆனந்திடம் விடை பெற்றுக் கொண்டிருந்த பைரவியை பார்த்தவன் தன் தாயிடம் அர்த்தத்துடன் புன்னகைத்தான்.. ராமமூர்த்தியுமே சிரித்துக் கொண்டார்.

"அப்போ, நான் கிளம்பட்டா ஆனந்த்.. பார்க்கலாம்.. டேக் கேர்" என அவன் கைகளை பற்றி குலுக்கிய பைரவியின் கைகளை இறுக பற்றிக் கொண்டான் ஆனந்த்.

"நான் வருவேன்னு நீ எதிர் பார்க்கலை இல்லை பைரவி".. ஆம் என்று தலையாட்டியவளுக்கு,

"எப்படி நீ இன்றைக்கு ஊருக்கு போறேன்னு தெரிஞ்சும் வராமல் இருக்க முடியும்?? சொல்லு.. நான் ஏற்கனவே உங்கிட்ட சொல்லிட்டேன்.. திரும்பவும் சொல்லறேன்.. நீ கவலைப்படாமல் ஊருக்கு போ.. உன் அம்மாவை கவனி.. உன்னோட கடமையை முடி.. நீயே எதிர்பார்க்காத போது நான் உன் கிட்ட வந்து சேருவேன்.. அதுவரைக்கும் எனக்காக காத்திரு.. காத்திருப்பாயல்லவா??.. உன்னையே தான் நான் நினைச்சிண்டு இருப்பேன்... ஐ லவ் யூ" என்று அவளை, சில நொடிகள், மெல்ல தோளோடு அணைத்துக் கொண்டான், மெல்ல அந்த மென்மையான அணைப்பில் தன்னை தொலைத்தவளுக்கு அந்த நொடியில் அவள் மனம் அவள் அனுமதியின்றியே ஆனந்தை சென்றடைந்துவிட்டதை உணர்ந்தாள்.. உண்மை தெரிந்துவிட்டது அவனனில்லாமல் இனி அவள் இல்லை என்று…நேரம் கரைவதை உணர்ந்தவன் சட்டென தள்ளி நின்று கொண்டு, மெல்ல தலையாட்டி அவளுக்கு விடை கொடுத்தான் அந்த உண்மையான காதலன்.

பைரவிக்கு, மனசு பாரமாக தோன்றினாலும், அவளை கடமை அழைக்க, அவனுக்கு தலையாட்டி பார்க்கலாம் என்று கண்களால் விடைபெற்று, சாரதா அருகே சென்றவள்,

"போய் விட்டு வரேன் சாராதாம்மா.. வரேன் வசந்த்ப்பா"  என்று சொன்னவள், கையாட்டியபடியே, வசந்துடன் இணைத்துக் கொண்டவள், இமிகேரஷனுக்காக விமான நிலையத்துக்குள் நுழைந்தாள்.

அடுத்த இரண்டாவது மணி நேரத்தில் விமானம் அவர்களை சுமந்து கொண்டு உயரே பறந்தது..

எங்கிருந்தோ வந்தான்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் - கண்ணன்
எங்கிருந்தோ வந்தான்

சொன்னபடி கேட்பான் துணிமணிகள் காத்திடுவான்
சின்ன குழந்தைக்கு சிங்காரப் பாட்டிசைப்பான்
கண்ணை இமையிரண்டும் காப்பது போல் என் குடும்பம்
வண்ணமுறக் காக்கின்றான் வாய் முணுத்தல் கண்டறியேன் கண்ணன்

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் - கண்ணன்
எங்கிருந்தோ வந்தான்

 

வசந்தம் மலர்ந்தது.

Episode 28

{kunena_discuss:909}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.