(Reading time: 12 - 24 minutes)

15. சதி என்று சரணடைந்தேன் - சகி

ப்போ எனக்கு என்ன சந்தேகம்னா!தண்டனையை அனுபவிக்கிறது இவனா?அவளா?"நிரஞ்சனின் சந்தேகம் மனதை குத்தி கிழித்தது.இனம் புரியாத வலி இதயம் எங்கிலும் பரவியது!!காதலின் வலியை பிரிவினில் உணரலாம்.ஆனால் அதன் மகத்துவத்தை???

வலிகளிலே தான் உணர முடிகிறது..ஆத்மார்த்தமான உணர்வு..

அச்சமயம் விழிகள் சிந்தும் ஒருத்துளி கண்ணீர் உலகையே அழித்துவிடும் சக்தி கொண்டது.

Sathi endru saranadainthen

காதல் என்றால் என்ன?என்ற கேள்விக்கு பதில்...

இறைவனின் இதயத்துடிப்பு!!

சிந்தனைகள் கண்களில் சூழ அமர்ந்திருந்தாள் அனு.காலை தான் அவளை பெண் பார்த்துவிட்டு சென்றிருந்தனர்.

அவளை பிடித்துள்ளது என்றும் கூறி இருந்தனர் அவர்கள்.மனம் படபடத்தது.

"அனு!"-தாயின் குரல் கேட்டவள் கண்களைத் துடைத்தாள்.

"என்னாச்சு?தனியா உட்கார்ந்திருக்க?"-ஆறுதலாய் அவள் கேட்க கண்ணீர் மீண்டும் கண்களில்!!

"உனக்கு இந்தக் கல்யாணத்துல சம்மதம் தானே!"

"உங்களுக்கு சம்மதம்னா! எனக்கும் சம்மதம் தான்!"

"பாரு அனு..அந்தப்பையன் கூட வாழப் போறது நீதான்!நான் இல்லை...கடைசி நேரத்துல அவருக்கு தலைகுனிவு ஏற்பட வைக்காதே!யாரையாவது காதலிக்கிறீயா?"

"ச்சீ...ச்சீ...இல்லைம்மா!"

"வேற என்ன?"

"பயமா இருக்கும்மா!"

"என்ன பயம்?"

"கல்யாணத்துக்கு அப்பறம்,உன்னை தினமும் பார்க்க முடியாது!உன்கிட்ட திட்டு வாங்க முடியாது!ராகுல் ஆர்யா அண்ணா எல்லாம் ரொம்ப மிஸ் பண்ணுவேன்.இப்போ கூட அண்ணி இருக்காங்க.அங்கே...யாரும் இருக்க மாட்டாங்க.எனக்கு சப்போர்ட் பண்ண அப்பா இருக்க மாட்டாரு!"-அவள் அடுக்கினாள்.

"அனு!குழந்தையா நீ?அங்கே என் ஸ்தானத்திலும் அவர் ஸ்தனத்திலும் உன் அத்தை மாமா இருப்பாங்க!அதுமட்டுமில்லாம அந்த பையன் மட்டுமே போதுமே எல்லா பாசமும்,பாதுகாப்பும் உனக்கு கிடைத்துடுமே!"

"என்ன இருந்தாலும் அவர் யாரோ தானே!"

"இந்த உலகத்துல நீ பிறக்கும் முன்னாடி நாங்க கூட யாரோ தான்.உறவுகள் எப்போதும் அழகானது.அதிலும் கணவன் மனைவி உறவு ஜென்ம ஜென்மமாய் நிலைக்கிற பந்தம் அது...!"

அவள் தன் தாயை கட்டிக்கொண்டாள்.

"என்ன ஆனாலும் சரி! உன் பிறந்த வீட்டுக்கும்,புகுந்த வீட்டுக்கும் தலைகுனிவு வர கூடாது! உனக்கு இருக்கிற சந்தேகங்கள் பையனுக்கு இருக்கலாம்.அதனால,உங்க உறவு வலுப்பட தாமதமாகலாம்.அதை மட்டும் அடிப்படையா  வச்சிட்டு யாரையும் வெறுக்கதே!புரியுதா?"

"சரிம்மா!"

"அழக்கூடாது!தைரியமா இருக்கணும்.போய் தூங்கு!"

"ம்.."-இவற்றை மாடியில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தாள் தீக்ஷா.

அவள் கண்கள் கலங்கின.

சில தினங்களுக்கு முன் நடந்த நிகழ்வு...

மனதில் கவலைகள் சூழ தன் தாயின் புகைப்படத்தை அணைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் சதி.

"தீக்ஷா!சாப்பிடுறா மாதிரி இல்லையா?"-மதுவின் குரலில் கலைந்து கண்களைத் துடைத்தாள்.

"என்னாச்சும்மா?ஏன் அழுற?"

"இல்லை அத்தை தூசி..."

"பொய் சொல்லாதே!என்னாச்சு?ராகுல் எதாவது சொன்னானா?"

"ஐயோ!அதெல்லாம் இல்லை..."

"வேற என்ன?"

"அது..எனக்கு அம்மா ஞாபகம் வந்துடுச்சு!"-தூக்கிவாரி போட்டது.மது உடனே அவளை அணைத்தார்.

"பார் தீக்ஷா! உனக்கு நாங்க இருக்கோம்! இனி அம்மா இல்லைன்னு நீ கவலைப்பட கூடாது!நான் இருக்கேன்.இனி என்னை அம்மான்னு கூப்பிடணும் புரியுதா?"-இழந்த தாய் அன்பு மீண்டும் வாழ்வில் கிடைக்கும் என்பது அவள் எதிர்நோக்காதது!ஆனால்,கிடத்துவிட்டது.ஒரு புன்னகையோடு தன்னறைக்கு சென்றாள்.ராகுல் எதையோ எழுதி கொண்டிருந்தான். இவளை பார்த்ததும் டைரியை மூடி வைத்தான்.

"சதி!"

"ம்?"

"உன்கிட்ட கொஞ்சம் பேசணும்!"

"என்னங்க?"

"அது...இப்படி உட்காரு!"-அவள் தயங்கியப்படி சற்று விலகி அமர்ந்தாள்.

"அது...இதைக் கேட்ட பிறகு என்னை பற்றி நீ என்ன நினைப்பன்னு தெரியலை...ஆனா,உன்கிட்ட என் கடந்தகாலத்தை சொல்லி ஆகணும்!"-அவள் அமைதி காத்தாள்.

"நீ நினைக்கிறா மாதிரி நான் இந்த குடும்பத்தோட வாரிசு இல்லை!"-அவன் தன் இறந்த காலத்தை முழுதும் கூறி முடித்தான்.அனைத்தையும் பொறுமையாக கேட்டாள் சதி.

"என்னோட பிறப்பு தவறானது!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.