(Reading time: 12 - 24 minutes)

"ன்னங்க...அப்படி சொல்லாதீங்க!ஒரு மனுஷனோட பிறப்பு எப்படி இருந்தாலும்,அவனோட வளர்ப்பு தான் முக்கியமானதா இருக்கும்!"-ராகுல் அவளை உற்றுப் பார்த்தான்.இன்னொருத்தியாய் இருந்தால் இந்நேரம் கேவலப்படுத்தி இருப்பாள்.இவள் என்ன????குழம்பியது அவன் மனம்.

"நான் ஒண்ணு கேட்கட்டா?"

"ம்!"

"தெரியாம பண்ண தப்புக்கு இத்தனை வருஷம் தண்டனை அவசியமா?"-அவன் கோபம் உச்சத்தை தொட்டிருக்க வேண்டும் கோபமாக எழுந்து நின்றான்.

"அன்னிக்கு அந்த தவறு நடக்கும் போது உங்க அப்பா சுயநினைவுல இல்லை தானே!அதுக்கு போய்...ஏன் எல்லா பிரச்சனையும் தீர்ந்த நிலையில இந்த தண்டனை?"

"எந்த பிரச்சனையும் தீரலை!"-அவன் கோபத்தில் கண்ணாடியை குத்த அது உடைந்து தூளானது.அவன் கையில் ரத்தம்.

"ஐயோ!"-பதறிவிட்டாள் அவன் சதி.தன்னிச்சையாக அவள் கண்கள் கலங்கின.

"என்னங்க நீங்க?"-என்று தன் புடவையை சிறிது கிழித்து முதலில் அவன் காயத்தை துடைக்க பார்த்தாள்.அவன் கையை இழுத்துக்கொண்டான்.

"நான் பேசுனது தப்பு தான்!ப்ளீஸ் கையை காட்டுங்க!"-அவள் கண்ணீர் அவனை கரைத்திருக்க தான் வேண்டும்.அவன் பிடிவாதம் இலகியது.

காயத்தை துடைத்தவள் ஓடிச்சென்று மருந்தையும் எடுத்து வந்தாள்.

ராகுலின் பார்வை அவளை விலகவில்லை.அவன் வலிக்கு அவளது கண்ணீர் அவன் நெஞ்சை கரைத்தது.

"எனக்கு அப்போ தான் விவரம் தெரிய ஆரம்பித்தது!"-அவன் மீண்டும் தொடங்கினான்.

"ஒருநாள் மிஸஸ்.ஸ்ரேயா ரகு யார் கூடவோ போன்ல பேசுறதை தற்செயலா கேட்க நேரிட்டது!"

ன்று....

"சொல்லு வித்யா!"

"எப்படி இருக்கடி!உன் மேரேஜ் லைப் எல்லாம் எப்படி?"

"ஆ..போகுது!"

"நீ எதுக்குடி உன் மாமாவையே கல்யாணம் பண்ண?"

"ஹே!ராகுல் என் பையன்!"

"அந்த டிராஜடி மட்டும் உன் லைப்ல நடக்காம இருந்திருந்தா!நல்லா இருந்திருக்கும்!"

"அந்த டிராஜடி என்னோட முடிவு தான்!"

"வாட்??என்னடி உளர்ற?"

"ஆமா!அது என்னோட சம்மதத்தோட தான் நடந்தது!"

"ஆர் யூ மேட்?!"

"உனக்கே தெரியும் ரகு மாமாவை நான் எவ்வளவு காதலிச்சேன்னு!ஆனா,அந்த கீதா என் மாமாவை என்கிட்ட இருந்து பிரிச்சா!அவளும்,மாமாவும் என் கண் முன்னாடி சந்தோஷமா இருக்கறது எனக்கு பிடிக்கலை.அதான் அன்னிக்கு சூழ்நிலையை எனக்கு சாதகமாக்குனேன்!அதனால இரண்டு பேரும் பிரிஞ்சிடுவாங்கன்னு நினைத்தேன்.ஆனா,அப்போவும் நடக்கலை.இப்போவும் அவ மேலே இருக்குற காதலால இப்போவும் அவர் என்னை ஒதுக்கியே வைத்திருக்கிறார்!"-இதை கேட்ட தீக்ஷா திகைத்து போனாள்.

"நடந்த சூழ்நிலையில அந்த மனுஷன் மேலே தப்பே இல்லைன்னு எனக்கு தெரியும்!அவர்...அவர் என் ஹீரோ சதி!என்னால அவரை வெறுக்க முடியாது!ஆனா அவர் எல்லா பொய்யையும் நிஜம்னு நம்பி தினந்தினம் செத்துட்டு இருக்கார்.என்னோட பிரிவு அந்த ராட்சஸிக்கிட்ட இருந்து அவரை விலக்கும்னு தான் இத்தனை வருஷம் அவரை மனசை கல்லாக்கி விலக்கி வைத்திருந்தேன்.தினந்தினம் செத்துட்டு இருக்கேன் சதி!நான் முதல்முறையா அம்மான்னு கூப்பிட்டவங்க கர்ப்பத்துல ஏன் பிறக்கலைன்னு வருத்தப்பட்டுட்டு இருக்கேன்!எந்த மகனும் தன் தாயை இப்படி சபித்திருக்க மாட்டான்.இப்படிப்பட்டவங்களுக்கு பிறந்ததை நினைத்தாலே அசிங்கமா இருக்கு!"-தீக்ஷாவின் மனம் நொறுங்கி போனது.எவ்வளவு வேதனைகளை அடக்கி வைத்திருக்கிறான்??எப்படி இவனால் முடிந்தது??தீக்ஷா நடுங்கியப்படி அவன் கண்ணீரை துடைக்க முயல,அதற்குள் அவன் அவளை அணைத்துக்கொண்டான்.சிலையென இருந்த காதல் உயிர்பெற்றது அங்கே...!!

இறுக்கமான அந்தப்பிணைப்பு அந்த இரண்டு இதயத்திற்கும் பாலமாய் அமைந்திருக்கலாம்.ராகுலின் கர்வம் உடைய ஆரம்பித்தது என்பதற்கு அவன் செய்கையே சாட்சியாய் இருந்தது.

"அவரை ரொம்ப மிஸ் பண்றேன்!"-நாம் சில நேரத்தில் தாங்க இயலாத வேதனைகளை சந்திக்கும் போது நம் மனம் தன்னிச்சையாக சிந்திப்பது மனதிற்கு பிரியமானவர்களையே!நாம் எவ்வளவு தான் அவர்களை விலக்கி வைத்திருந்தாலும் நேசம் மிக அவ்வுறவின் மகத்துவத்தை இதயம் என்றும் மறவாது!!

உரிமைகளை மட்டும் சாட்சியாக்கி உதித்த மாயம் உணர்வுகளோடு தன்னை தொலைத்ததாகும்!!

ஆழ்மனதின் ரகசியங்களை வெளி கொணரவும் அதற்கு தெரியும்,ஆழ்மனதின் காயங்களுக்கு மருந்தாகவும் அதற்கு தெரியும்.நேசிக்கும் அன்பிடம் தோல்வி ஏற்பட்டால் தயக்கமின்றி ஒப்புக்கொள்ளுங்கள்...

ஏனெனில் அவ்விடத்தில் வெற்றி பெற்றது தாமாவீர்கள்...!!

சதியின் கரங்கள் சிறு தயக்கத்தோடு அவனுக்கு ஆறுதல் கூற முற்பட்டு தயங்கி கொண்டிருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.