(Reading time: 12 - 24 minutes)

"தீக்ஷா!"

"அழகா இருக்கு!"-என்று இருவரையும் ஒன்றாக நிற்க வைத்தார்.இருவரும் திடுக்கிட்டனர்.

"ஜோடி பொருத்தம் அருமை!"-ஏனோ அச்சமயம் தீக்ஷாவின் முகம் நாணத்தால் நிலத்தை நோக்கியது.

அவள் தலைகுனிந்த அழகை அவனும் கவனிக்காமல் இல்லை.

"இனி!உன்னை பற்றி கவலைப்பட எங்களுக்கு அவசியமே இல்லை!அதான் உன் சதி இருக்காளே!"-அவனுக்கு எந்த பாவனையை அளிப்பது என்றே புரியவில்லை.

"இருந்தாலும் உன் மேலே கோபம்டா!"

"ஏன்மா?"

"உன் இஷ்டத்துக்கு தாலியை கட்டிட்ட!உன் கல்யாணத்தை எவ்வளவு சிறப்பா செய்ய இருந்தோம் தெரியுமா?"

"................."

"சரி விடு...!!!உனக்கு குழந்தை பிறக்கும்போது எல்லாத்துக்கும் சேர்த்து பண்ணிடலாம்!"-அதற்கு மேல் அவனால் முடியவில்லை.

"மா!எனக்கு முக்கியமான ஒரு வேலை இருக்கு!இதோ வந்துடுறேன்!"

"என்னடா வெட்கபடுறீயா?"

"எப்படி போனாலும் மாட்டிக்கிறேனே!"-அவன் மனதில் கருவினான்.

"நான் இங்கே இருக்கிற வரைக்கும் எந்த வேலைக்கும் போக கூடாது வீட்டிலே இரு!"

"போகலை!போகலை!இப்போ கீழே போய் அம்மாவை பார்த்துட்டு வரட்டா?"

"சரி போ!!"-அவன் தப்பித்தோம் என்று ஓடினான்.அங்கு அடுத்ததாய் தீக்ஷா மாட்டினாள் என்பதில் சந்தேகம் தேவையில்லை.

கீழே இறங்கி வந்தவன் மேல் எதேர்ச்சையாக மோதினான் அர்ஜூன்.

"ஏ...அர்ஜூன்!எப்படி இருக்க?"-அவன் பதில் பேசவில்லை.

"ராகுல் அண்ணா!"என்று ராகுலை அழைத்தப்படி வந்தாள் அனு.

அர்ஜூன் எதிரிலே நின்றிருந்தும் அங்கு எந்த உருவமும் இல்லை என்ற பாங்கில்...

"அண்ணா!வெளியே போகணும்!"

"அனு..அர்ஜூன்...."

"வரீயா?வரலையா?"

"அனு நான் இங்கே இருக்கேன் தெரியுதா?"

"தெரியுது!"

"உன் அண்ணன் நான் இங்கே இருக்கேன்.எவனோ ஒருத்தனை என் முன்னாடியே உரிமையா அண்ணன்னு கூப்பிடுற?"-ராகுலின் இதயத்தில் சுருக்கென்று தைத்தது.

"உறவுக்காக அடுத்தவன் உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுக்காதவனை எல்லாம் மதிக்கணும்னு எனக்கு தலை எழுத்தில்லை.எனக்கு ஆர்யாவே ராகுல் அண்ணாக்கு அப்பறம் தான்!நீ யார்டா குறுக்க?"

"அனு நிறுத்தும்மா!"

"லுக் மிஸ்டர் RR.நீங்க எனக்கு சப்போர்ட் வரணும்னு யாரும் அழலை!"

"அவன் கிடக்கிறான்  நீ வாண்ணா!"-அனு ராகுலை இழுத்துக்கொண்டு சென்றாள்.

"அனு!"

".........."

"அனு!"

"அவன் இஷ்டத்துக்கு பேசிட்டே இருப்பான்!நீ பேசாம இருப்பியா?மனசுல என்ன தியாகசிகரம்னு நினைப்பா?ஒரு வார்த்தை அவன் பேசும் போது நான் அவளோட அண்ணன்னு சொல்ல வாயில்லை?இப்போ எதுக்கு கையை கட்டிட்டு நிற்கிற?"-கையை கட்டி திட்டு வாங்கி கொண்டிருந்தவன் கட்டை அவிழ்த்தான்.

அனு அந்த புல்தரையில் அமர்ந்தாள்.இவன் புன்னகைத்தப்படி அவளருகே அமர்ந்தான்.

"டார்லிங்..."-அவள் கையை தட்டிவிட்டாள்.

அதை பார்த்து கொண்டிருந்த டேஜா தன் எஜமானனின் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளும்படி பரிந்துரைத்தான்.

"என்னடா?நீ என்ன இவனுக்கு சப்போர்ட்டா?இதோப்பாரு...அன்னிக்கு உன்னை மழையில இருந்து கூட்டிட்டு வந்தது நான் தான்!மறுபடியும் கூட்டிட்டு போய் தண்ணியில தள்ளிவிட்டுவிடுவேன் ஜாக்கிரதை!"-அவள் எச்சரிக்கையில் பயந்து குரைப்பதை நிறுத்தினான் டேஜா!

"அந்தப் பயம் இருக்கட்டும்!"-ஆள்காட்டி விரலை நீட்டி அழகாய் மிரட்டியவளின் விழிகள் திடீரென்று அவனை கண்டு விரிந்தன.அவன் பார்வையில் ஒருவித அதிசயம்!!

அதுவரையில் தங்கையின் மிரட்டலை ரசித்துக்கொண்டிருந்தவனின் விழிகள் அவள் விழி தஞ்சம் புகுந்த இடத்தை நோக்கின.

வந்திருந்தது ரவிக்குமாரும்,கௌதமும்!!

"என்னம்மா?இப்போவே மிரட்டி பிராக்டிஸ் பண்ணிக்கிறீயா?"-கௌதமை பார்த்து புன்னகைத்தப்படி கேட்டார்.

அவரை பார்த்து எழுந்து நின்றனர் இருவரும்!!

"எப்படி இருக்கீங்க அங்கிள்?"

"நல்லா இருக்கேன்மா!"

"உள்ளே வாங்க சார்!"-ராகுல் ரவிக்குமாரை அழைத்து சென்றுவிட,கௌதமின் மனம் அவனறியாமல் இரு நொடி அவன் கால்களை அனுவின் முன் கட்டிப்போட்டது.அதுவரையில் மிரட்டி கொண்டிருந்தவள் தலை குனிந்தப்படியே பேசாமல் நின்றிருந்தாள்.ஏதோ உணர்ந்தவன்,உள்ளே சென்றான்.அவன் சென்றதும் முகத்தை கைகளால் மூடி அங்கிருந்து ஓடினாள் அனு.

தொடரும்

Episode # 14

Episode # 16

{kunena_discuss:877}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.