(Reading time: 12 - 24 minutes)

 

னினும் அவள் கண்கள் அவனது துக்கத்தை பகிர்ந்து கசியாமல் இல்லை.

மௌனங்கள் பேசிய மொழி,உடைப்பட...தன் சகத்தை விலகினான் ராகுல்.

விழிகள் நான்கும் சிக்கிக்கொள்ள அத்தாக்கத்திலிருந்து மீள இருவரும் போராடி கொண்டிருந்தனர்.

உயிர்வரை ஊறிய தடுமாற்றம்,பேச்சிழந்த நிலையில் அவள் நினைவையும் இழக்க செய்திருந்தது அவனது அந்த செய்கை.

நிலைமையை சமாளிக்க அவள் மௌனம் உடைப்பட வேண்டிய நிர்பந்தம்!!

"நீங்க..அதை நினைத்து வருத்தப்படாதீங்க!எல்லாம் சீக்கிரமே சரியாகும்!"அவ்வளவுதானா?அச்சமயம் அவன் மனம் எதிர்ப்பாரத்தது ஒரு வார்த்தை பதிலே,'நானிருக்கிறேன்!'என்ற பதில்.அவள் வார்த்தைகள் அதை அளிக்க தவறி இருந்தன.

சில நேரத்தில் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் ஒரு துணையை நாடுகிறார்கள்.

வாழ்க்கையை தாங்கிப்பிடிக்கும் துணையை!!அந்நேரங்களில் அவர்கள் வேண்டும் ஆறுதல் தங்களுக்காக சிந்தும் ஒரு துளி கண்ணீராய் கூட இருக்கலாம்!அதுவே,அவர்களின் நம்பிக்கை மீள போதுமானதாக அமையும்!!!

அவள் வார்த்தைகள் கூற மறுத்ததை அவள் கண்ணீர் கூறிவிட்டிருந்தது அவனுக்கு!!

"தேங்க்யூ சதி!"-அவள் புன்னகைத்தாள்.

அவன் தன் கைப்பேசியை எடுத்துக்கொண்டு நகர்ந்தான்.அவள் மனதில் ஒரு நம்பிக்கை உதித்தது!!ராகுலின் வேதனைகள் யாவும் விரைவில் தீர போகிறது என் நம்பிக்கை அது!!

"கு சாப்பிட்டானா நிரு?"

"இல்லைடா...நான் போய் கூப்பிட்டேன்!கொஞ்ச நேரம் கழித்து வரேன்னு சொன்னான்."

"சரி இரு...நான் போய் கூப்பிட்டு வரேன்!அதுக்குள்ள காலி பண்ணிடாதே!"

"எங்களுக்கு தெரியும் போடா!"-சரண் புன்னகைத்தப்படி ரகு அறைக்கு செல்ல அங்கவரோ எதையோ அணைத்தப்படி உறங்கி கொண்டிருந்தார்.

அருகில் சென்றவர் அதை எடுக்க அது ஒரு புகைப்படம் என்ற தெரிந்தது.

அதில்,கீதா,ராகுல்,ரகு மூவரும் இருந்தனர்.

ராகுல் பிறந்த பின் முதன்முதலாய் எடுத்தப்படம்!!

சரணின் முகம் வாடியது!!

அவரருகே அமர்ந்தவர் ரகுவின் கரத்தை தன் கரத்துள் சிறைப்படுத்தினார்.

"எவ்வளவு கஷ்டத்தை தாங்குறடா!தெரியாம பண்ண தப்புக்கு இத்தனை வருட தண்டனை!என்னால ஒண்ணு உறுதியா சொல்ல முடியும்.ராகுல் மனசுல இன்னும் நீ ஹீரோ தான்! அவனுக்கே தெரியுமான்னு தெரியலை...அவனோட ஒவ்வொரு செய்கையும் உன்னோட பிரதிபலிப்பு தான்! நிச்சயமா...எல்லாம் சரியாகிடும்டா! உன் மகன் நிச்சயம் திரும்பி வருவான்!உன்னை மறுபடியும் அப்பான்னு கூப்பிடுவான்!"-சரணின் மொழிகளில் உறுதி இருந்தது.

றுநாள் காலை.....

மதுவின் கண்களை யாரோ மூட திடுக்கிட்டார் அவர்.

"யாரு?ராகுல்?"

"யாருன்னு கண்டுப்பிடிங்க மம்மி!"

"அர்ஜூன்!"-அவன் கையை எடுத்தான்.

"எப்படி மம்மி கண்டுப்பிடிச்சிங்க?"

"என் அர்ஜூன் குரல் எனக்கு தெரியாதா?சரி...எப்படி இருக்க?அம்மா வரலையா?"

"அம்மா வராம எப்படி?வந்தாங்க...நான் உங்களை பார்த்ததும் இப்படியே கட் பண்ணி வந்துட்டேன்.அம்மாவை கவனிக்கலை!"

"சரிதான் நல்ல பையன்டா நீ!சரி...நீ போய் ஃபரஷ் ஆகு போ!"-அவன் ஒரு புன்னகையோடு நகர்ந்தான்.

அதிசயமாய் அன்று வீட்டில் இருந்தான் ராகுல்...

கண்களில் ஏதோ சிந்தனை!!

அதனால் அது மூடி இருந்தது.

"ராஜா!"-அழைக்கும் விதத்திலே குரலின் உரிமையாளர் யாரென அறிந்தான்.

"மா!"

"நீ வீட்டில இருக்க மாட்டேன்னு நினைத்தேன்!"

"எப்போம்மா வந்தீங்க?எப்படி இருக்கீங்க?"

"நல்லா இருக்கேன்டா!இப்போ தான் வந்தேன்!நீ எப்படி ராஜா இருக்க?உடம்பு இளைத்துட்ட போல?"

"உங்களை பார்க்காம இருக்கேன்ல அதான்!"

"அப்போ இனி குண்டாயிடுவ!"-அவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே அங்கு தீக்ஷா வந்தாள்.

"என்னங்க.."-ஏதோ கூற வந்தவள் பவித்ராவை கண்டு புரியாமல் விழித்தாள்.

"ஆ...சதி!!நான் சொல்லிருக்கேன்ல!பவிம்மா!அவங்க தான்!"-அவள் ஒரு புன்னகை பூத்து அவர் அருகே வந்து பாதம் பணிந்தாள்.

"நல்லா இரும்மா!உன் பேரு சதியா?"

"அது நான் கூப்பிடுறது!"-அவனறியாமல் உரிமைக்கு வந்தான் ராகுல்.

"சரிடா!நான் ஒண்ணும் அந்த பெயர் சொல்லி கூப்பிடலை!உடனே சண்டைக்கு வர!உன் பேர் என்னம்மா?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.