(Reading time: 9 - 18 minutes)

ப்போ ஒரு பெட். உங்க பிளனை நீங்களே எக்சிகியூட் பண்ணுங்க. பட் நான் ஒரு ஹெல்பும் பண்ண மாட்டேன். என்னை வர வைக்குறதும் உங்க பொறுப்பு. ஓகே வா? “

“ டபுள் ஓகே. பட், பெட் என்ன? “

“ என்ன வேணும்? “

“ ம்ம்.. அத நாளைக்கு நைட் கேக்குறேன் “ என்று கூறி அவளை சிவக்க வைத்தான் அவளவன்.

இதன் பிறகு சமுத்திரா வந்து, பாப்பாவை வாங்கிக் கொண்டு ஷணுவை அறைக்கு அழைத்து சென்றுவிட்டாள். பிறகு கண்ணன் அவன் திட்டத்தைச் செயல் படுத்த ஹரிக்காக வழிமேல் விழிவைத்து காத்துக்கொண்டு இருந்தான்.

இங்கு மகதியோ எல்லா குட்டிஸையும் அவர் அவ்ர் அம்மாக்களிடம் ஓப்படைத்துவிட்டு வந்து சற்று ஹாய்யாக அமர்ந்து இருந்த  அனுவிடம் வந்து ஒருவரை பொரிந்து தள்ளிக்கொண்டு இருந்தாள்.

“ ஹவ் டேர் ஷீ.....?? எவ்ளோ தைரியம் இருந்தா என்ன பார்த்து இப்படி கேக்க தோணும்? என்ன பார்த்தா அப்படியாடி இருக்கு???”

“ ஐயோ அக்கா ஏன் புலம்புற ? மீ பாவம். என்னால முடில ? “

“ என்னாலையும் தான்டீ. எப்படி என்ன பாத்து அப்படி கேக்க தோணுச்சு? “ என மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்தாள்.

---- இது ஆவுறதுக்கில்ல, வாங்க நாமளே போய் நடந்தது என்னனு பாப்போம்.. -----

நிஷா, வர்ஷாவை பந்தியில் அமர வைத்துவிட்டு திரும்பிய மகதியை அவளின் உறவினர் ஒருவர் நலன் விசாரிக்க, அவருக்கு பதில் அளித்தவளை பந்தியில் எதிர் கொண்டார் அவளின் ஒன்று விட்ட பெரியப்பா. அவர் உடன் வந்தவன் ஹரி.

“ என்னமா மகதி எப்படி இருக்க? என்ன படிக்குற? “ என ஆரம்பித்தார் அவர் .

“ நல்லா இருக்கேன் பெரியப்பா ”  என அவருக்கு இன்முகத்துடன் பதில் அளித்தவளின் செவிகளை வந்து வருடியது அந்த வரிகள்.

   “ வெண்ணிலவ உளவு பாக்க வெச்ச இரவு கருப்பு தான்

     வேலை செஞ்சு உழைக்கும் எங்க விவசாயி கருப்பு தான்

     மண்ணுக்குள்ள இருக்கும் போது வைரம் கூட கருப்பு தான்

     மதுரவீரன் கையில் இருக்கும் வீச்சருவா கருப்பு தான்

     பூமியில முத முதலா பொறந்த மனுசன் கருப்பு தான்

     மக்கள் பஞ்சம் தீர்க்கும் அந்த மழை மேகம் கருப்பு தான்

     உன்னை என்ன ரசிக்க வச்ச...

     உன்னை என்ன ரசிக்க வச்ச கண்ணு முழி கருப்பு தான்

     கற்பு சொல்லி தந்த அந்த கண்ணகியும் கருப்பு தான்

     தாய் வயிற்றில் நாம் இருந்த.........

     தாய் வயிற்றில் நாம் இருந்த கருவறையும் கருப்பு தான்

     வணங்கும் கருப்பு தான்.. “

புது பாடல்களுக்கிடையில் இந்த பாடல் ஒலிக்க, முதலில் குழம்பியவளுக்கு சில நொடிகளில் பதில் கிடைத்து விட்டது. அந்த வேலையைச் செய்தது யாரென்று. வேறு யாரு.. எல்லாம் அவன் தான், ஹரி. அவன் கருப்பு என்று சொல்ல முடியாத புது நிறம் தான். இவளின் பால் வெண்மை நிறதுக்கு முன்னாடி அவன் நிறம் ரொம்ப கம்மிங்க ஆனலும் அவளின் கருவாயாவுக்கு பதில் சொல்லனுமே..அதான் ஹரி ஸார் இப்படி சாங்க் மூலமா ரிவிட் விடுறாராம் .

‘ ஓஓஓ.. கருவாயன் எஃப்பெக்டா!! கருப்பு அழகு தான் டா.. ஆனா நீ........ ‘ என்று மனம் இழுக்க, உண்மை உணர்ந்தவளாக, ‘ நீயும் சுமாரா... கொஞ்சமே கொஞ்சம் அழகு தான் டா... பட், இதை எல்லாம் ஒத்துக்கிட்டா, அப்புறம் நான் மகதி இல்லையே.. ‘ என்று எண்ணிக் கொண்டாள்.

பாடல் வரிகளை ரசித்தாலும் அவனிடம் கெத்தாக ஒரு லூக் விட்டவளை, கம்பீரமாக தனது மீசையை முறுக்கி விட்டு, பாடல் வந்த திசையை கண்ணால் காட்டியவனை இவளால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை. அந்த ரசனைக்கு அவளின் மென் உதடுகள் உதித்த சின்ன புன்னகையை  கண்ட்ரோல் பண்ணினாள் அவள் . ஆனால் அவளின் இதழ்கலோ , பக்கத்தில் இருக்கும் பெரியப்பா பார்க்காத வண்ணம் தானாக முணுமுணுகின்றன “ரொம்பத்தான்”.

அவனும் அவள் செய்கைக்கு ஒரு குறும்புடன் கூடிய முறைப்பைப் பரிசாக தர தான் செய்தான். இவை அனைத்தையும் ஒரு ஜோடி கண்கள் பொறாமையுடன் நோக்குவதை அறியாமல் இருந்தனர் இருவரும்.

              I hate u and then I love u..

             It’s like I want to throw you off a cliff,

             Then rush to the bottom to catch you

சண்டைகள் தொடரும்

Episode 02

Episode 04

{kunena_discuss:954}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.