(Reading time: 28 - 56 minutes)

14. காதலை உணர்ந்தது உன்னிடமே - சித்ரா. வெ

இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

ரு வாரமாகவே அன்று இரவு என்ன நடந்தது... ஏன் இப்படி யுக்தாவிடம் நடந்துக் கொண்டோம் என்று பிருத்வி யோசித்து கொண்டு தான் இருந்தான்... அவனுக்கு ஞாபகம் தான் வர மறுத்தது... ஆனால் அவனுக்கு நினைவு இருந்த நிமிடம் வரையில் சாப்பிட்டதும் ஏதோ மயக்கமாக இருப்பதை அவன் உணர்ந்திருந்தான்... ஆனால் எப்படி..?? அதுதான் அவனுக்கு விளங்காமல் இருந்தது....

பார்ட்டிக்கு வந்த அனைவரும் சாப்பிட்டதை தானே இவனும் சாப்பிட்டான்... அவர்களெல்லாம் நன்றாக தானே இருந்தனர்... சாப்பாடு வீட்டில் அம்மா தயார் செய்தது... கூல் ட்ரிங்ஸ் இவன் தான் வாங்கி வந்தான்.... அம்மா அப்பா சீக்கிரம் கிளம்பியதால்... இவன் தான் முன்னின்று அனைவருக்கும் உணவு பரிமாறினான்.. இப்படி இருக்க மயக்கம் வர காரணமென்ன..?? அன்று இரவு யுக்தாவும் மயக்கமாக இருப்பதாக சொன்னதாக லேசா ஞாபகம் இருந்தது...

ஆனால் எதனால்..??

Kadalai unarnthathu unnidame

இதையெல்லாம் யோசித்துக் கொண்டிருந்த போது தான் அவனின் அப்பா அவனிடம் யுக்தாவுக்கும் இவனுக்கும் திருமணம் செய்ய வேண்டும் என்று பேசினார்... என்ன தான் இவன் யோசனையோடு இருந்தாலும்... அவன் யுக்தாவிற்கு செய்தது தீங்கு தானே.. சப்னாவையும் தான் ஏமாற்றிவிட்டான்... நான் போதையில் தான் இதை செய்தேன்.... எனக்கு எதுவும் ஞாபகம் இல்லை என்று தட்டி கழிக்கும் விஷயமா இது... அதனால் அதைப்பற்றி கூட அவன் பெற்றோர்களிடம் எதுவும் அவன் சொல்லவில்லை....

அவனை பொறுத்தவரை அவன் வாழ்க்கையில் ஒரே ஒரு பெண்ணுக்கு தான் இடமளிக்க வேண்டும்.... ஆண் என்றால் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதில் அவனுக்கு உடன்பாடு இல்லை... அந்த ஒருத்தி சப்னா என்று நினைத்திருந்தான்... ஆனால் யுக்தாவிடம் இப்படி நடந்த பின் சப்னாவை மணக்கும் தகுதியை அவன் இழந்துவிட்டான்.... அதனால் தான் இந்த திருமணத்துக்கு சம்மதம் என்று அவன் அப்பாவிடம் கூறினான்...

ஆனால் அவன் யோசனையை அவன் கைவிடவில்லை... அப்போது தான் கூடவே யுக்தா கொண்டு வந்த கேக்கை சாப்பிட்டது ஞாபகம் வந்தது... அதுவும் அது அவள் செய்தது... ஒருவேளை யுக்தா ஏதாவது கலந்திருப்பாளா..?? அப்படி சந்தேகிக்க மனம் வரவில்லை...

ஆனால் நடந்ததையெல்லாம் நினைத்தால் அவள் அப்படி செய்திருப்பாளோ..?? என்றும் தோன்றியது... அந்த சூழ்நிலையில் ஒரு பெண் தன் தாயிடம் சாதாரணமாக குற்றத்தை ஒத்துக் கொண்டாளா..?? போதையில் தவறு செய்தாலும் அதை இவன் நியாயப் படுத்த விரும்பவில்லை... ஆனால் ஒரு பெண்ணான அவள் இதைப்பற்றி விளக்கமாக அவள் பெற்றோரிடம் ஏன் கூறவில்லை... அவள் சாதாரணமாக ஏன் ஒத்துக் கொள்ள வேண்டும்...

இப்படி ஒரு சந்தேகம் வந்ததும் அவனால் அதை மறந்து இப்படி ஒரு திருமணத்தை செய்து கொள்ள மனம் வரவில்லை.... அவன் பெற்றோர் இவனை தவறாக நினைத்திருக்கிறார்களே... அவர்கள் அப்படி நினைத்தால் கூட பரவாயில்லை... யுக்தா வீட்டில் என்ன நினைப்பார்கள்... ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்துவிட்டு தன் மகளிடமும் தவறாக நடந்துக் கொண்டதாக கேவலமாக தானே நினைப்பார்கள்... அப்படி ஒரு கேவலத்தோடு அவர்களுக்கு மருமகனாக எப்படி இருக்க முடியும்...

அவன் சந்தேகத்தை தெளிவுப் படுத்திக் கொள்ள தான் அவனும் யுக்தா வீட்டுக்கு வந்தான்... அவன் போன போது தான் தட்டு மாற்றி கொள்ள ஆயத்தமானார்கள்... யுக்தாவிடம் இந்த விஷயத்தை தெளிவுப்படுத்தாமல் எதுவும் செய்ய வேண்டாம் என்று தான் இப்போது வேண்டாம் என்று கூறினான்.

பிருத்வி அப்படி சொன்னதும் எல்லோரும் அதிர்ச்சியாக பார்த்தனர்...

"என்ன பிருத்வி எதுக்கு இப்போ தட்டை மாத்த வேண்டாம்னு சொல்ற... மதி தான் கேட்டாள்.

ஏற்கனவே குழப்பத்தில் இருந்த யுக்தாவின் பெற்றோர்களும் அதிர்ச்சியோடு பார்த்து கொண்டிருந்தனர்..

"இல்லம்மா அன்னிக்கு நடந்தது எங்களுக்குள்ள சாதாரணமா தெரிஞ்சு நடக்கல... ஏதோ மயக்கம் மாதிரி இருந்துச்சு... அது எதனால அப்படின்னு குழப்பத்துல இருந்தேன்... ஆனா இப்போ யுக்தா மேல கொஞ்சம் சந்தேகம் அதை தெளிவுப்படுத்திக்கனும்.. அதான்..."

இதுவரையிலும் அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கவிக்கு பிருத்வி பேசியது கோபத்தை வரவழைத்தது... செந்திலும் மதியும் இந்த திருமணத்தை பற்றி பேச வந்ததே கவிக்கு பிடிக்கவில்லை...

இரண்டு பேரும் தவறு செய்துவிட்டார்கள் என்பதால் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டுமா என்ன..?? இருவரும் காதலித்தார்கள் என்றால் கூட பரவாயில்லை... இந்த பிருத்வி எப்படி பட்ட கேரக்டர்... வேறொரு பெண்ணை காதலிச்சிட்டு சம்யுகிட்ட இப்படி நடந்திருக்கான்... இன்னும் சப்னா கூட எப்படிப்பட்ட ரிலேஷன்ஷிப் இருக்கோ.. இவன் கூட சம்யுக்கு கல்யாணமா..??

இதுக்கு தான் ஆரம்பத்துலேயே இந்த காதல் வேண்டாம் என்று சம்யுவிடம் சொன்னாள்... பன்னிரண்டு வருடத்தில் அந்த பிருத்வி எப்படியெல்லாம் மாறியிருக்கிறானோ என்பது தான் இவள் கருத்து... ஆனால் பார்ப்பதற்கும் பழகுவதற்கும் நல்லவனாக தெரிந்தான்... ஆனால் அவன் குணம் எப்படி பட்டதாக உள்ளது...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.