தேவாவுக்கும் இந்த திருமண செய்தி எட்டியது... பிருத்வி யுக்தாவை காதலிக்கவில்லை என்று தான் அவனுக்கு தெரியுமே பிறகு எப்படி இந்த திருமணம் என்று குழம்பினான்... அவன் டெல்லியில் இருந்து வந்ததிலிருந்து கவியிடம் யுக்தாவை பற்றி விசாரித்துக் கொண்டிருந்தான்... அவள் யுக்தா நன்றாக இருப்பதாக கூறினாள்... இப்போது இந்த திருமணத்தை பற்றி கேட்டாலும் பட்டும் படாமலும் பதில் சொன்னாள்... பெங்களூர் போக போவதாகவும்... திருமண நேரத்தில் இங்கு இருக்கப்போவதில்லை என்றும் கூறினாள்...
என்னதான் மனதுக்கு பிடித்தவனாக தேவா இருந்தாலும் தன் தோழியின் அந்தரங்கத்தை கூற கவி விரும்பவில்லை...
தங்கை என்ற முறையில் லஷ்மியிடமும் இந்த திருமணத்தை பற்றி தகவலை மாதவன் தெரிவித்தார்.. தன் மகனை வேண்டாமென்று சொல்லிய பொறாமையிலும்... இந்த அவசர திருமணம் குறித்து சந்தேகத்திலும்... ஏற்கனவே யுக்தாவை தவறாக பேசிய லஷ்மி இப்போதும் தன் சொந்தங்களிடம் இந்த திருமணத்தை பற்றி தப்பு தப்பாக சொல்லி வைத்தாள்...
தன் அன்னை பேசுவது தேவாவுக்கும் தெரிய வந்தது.... அன்னை பேசியதில் உண்மை இல்லை என்றாலும் இந்த திருமணம் ஏதோ பிரச்சனையால் நடக்கிறது என்று யூகித்தான்... அது என்னவென்று அறிந்து கொள்வது ஆண்மைக்கு அழகில்லை என்று அதைப்பற்றி அவன் ஆராயவில்லை... அந்த திருமணத்திற்கு சென்று அவர்களை சங்கடப்படுத்தவும் அவன் விரும்பவில்லை...
இந்த திருமணம் பற்றி தெரிந்ததும் சப்னா அதிர்ந்தாள்... திரும்பவும் பிருத்வியிடம் பேசி அவன் மனதை மாற்ற முயற்சித்தாள்... நான் உனக்கு தகுந்தவனல்ல நீ என்னை மறந்து விடு என்று அவளிடம் தெளிவாக கூறிவிட்டான் பிருத்வி... அவன் குடும்பத்தாரிடமும் பேசி பார்த்தாள்... இந்த திருமணம் முடிவான நிலையில் எதுவும் செய்ய முடியாது என்று அவர்களும் மறுத்துவிட்டனர்...
தன் பெற்றோரிடம் பேசினாலும் இந்த விஷயங்களை கேள்விப்பட்டாள் அவர்கள் இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்று அவளுக்கு தெரியும்... இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில் ச்சீ இந்த பழம் புளிக்கும் என்ற நரி கதையை போல் அவனை விட்டு விலகிவிட்டாள் சப்னா.
இந்த திருமணம் வேண்டாம் என்று வாதாடி பிறகு சம்மதித்தாளும் அதற்கு மேல் அந்த திருமண ஏற்பாட்டில் எந்த ஆர்வமும் காட்டாமல் அறையிலேயே முடங்கி கிடந்தாள் யுக்தா... அவளை பார்த்து சுஜாதாவிற்கும் சாவித்திரிக்கும் கஷ்டமாக இருந்தாலும் திருமணம் முடிந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் திருமண ஏற்பாட்டை கவனித்தனர் இருவரும்..
இப்படி எல்லோருடைய மனதிலும் சங்கடத்தோடு இனிதே நடைவேறியது பிருத்வி சம்யுக்தாவின் திருமணம்... ஆனால் திருமணம் முடிந்த அன்றே பிருத்வி செய்த செயலால் பயந்து போனாள் வளர்மதி... யுக்தா மௌனமாக இருந்ததால் இன்று பிரச்சனையில்லை... ஆனால் இனிவரும் நாட்கள் எப்படியிருக்குமோ என்று அவள் கவலைக் கொண்டாள்.
உண்மையிலேயே இந்த காரியத்தை யுக்தா செய்தாளா..?? அப்படி இல்லையென்றால் ஏன் அந்த தவறை அவள் செய்ததாக ஒத்து கொள்ள வேண்டும்...?? இதை அவள் செய்யவில்லையென்றால் அது பிருத்விக்கு தெரிய வருமா..?? பிருத்வியின் கோபத்தை யுக்தாவின் மௌனம் மாற்றுமா..?? திருமண பந்தத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் இவர்கள் திருமண வாழ்க்கை இனி எப்படியிருக்கப் போகிறது..??
ப்ரண்ட்ஸ் இந்த அத்தியாயத்தோடு fb முடிந்தது. அதுக்கே அப்பான்னு இருக்கு.. இந்த அத்தியாயத்தை படிச்சிட்டு உங்க கருத்துகளை சொல்லுங்க... கமெண்ட் போடலாமான்னு யோசிக்கிறவங்களும் தயங்காம கமெண்ட் போடுங்க...
இப்ப தான் ஒன்னு யோசிச்சேன் fb யே 14 அத்தியாயங்கள் ஆகிவிட்டது... இன்னும் இவங்க ரெண்டுப்பேரையும் சேர்த்து வைக்க எத்தனை அத்தியாயங்கள் ஆகும்னு தெரியல... இவ்வளவு நாள் பொறுமையா படித்தது போல் அதையும் படித்து உங்க கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..
Thanks for all KUU readers
தொடரும்
{kunena_discuss:933}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.