(Reading time: 28 - 56 minutes)

ங்கு பிருத்வியின் சம்மதம் கிடைத்ததும்... அங்கே சாவித்திரியும் சுஜாதாவும் யுக்தாவின் சம்மதத்துக்கு போராடினர்....

"அம்மா எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்றேனே... ஏன் கேக்க மாட்டேங்குறீங்க..."

"என்னடி சொல்ற... நீ பண்ணிட்டு வந்திருக்க காரியத்துக்கு... கல்யாணம் பண்ணாம என்னடி பண்ணுவாங்க..."

"அம்மா ஏதோ தப்பு நடந்துட்டா... உடனே கல்யாணம் பண்ணனுமா..??"

"என்னடி சாதாரணமா சொல்ற...?? உன்னை ஒருத்தன் பலாத்காரம் பண்ணியிருந்தா... அதிலிருந்து உன்னை மீட்க நினைச்சிருப்போம்.... வயசுக் கோளாருல தப்பு பண்ணிட்டு வந்திருந்தா... திருத்த பார்த்திருப்போம்... ஆனா நீ காதல், மாதவி, ஒரு நாள் வாழ்ந்தா போதும்னு உளரிக்கிட்டு இருக்க... அதுக்கு உனக்கு கல்யாணம் தான் செஞ்சு வைக்கனும்..."

"அம்மா இதுல பிருத்விக்கும் இஷ்டமில்ல... அவரும் ஒத்துக்கமாட்டாரு.. அப்புறம் எதுக்கு இந்த கல்யாண ஏற்பாடு செய்றீங்க..."

"அது பிரச்சினையில்ல யுக்தா... மதி பிருத்வியை ஒத்துக்க வச்சுட்டா.."

"ஏன் சாவிம்மா.. இப்படி கட்டாயப்படுத்தி இந்த கல்யாணத்தை செய்யனுமா..??"

"இப்படி பேசுறவ எதுக்கு அப்படியெல்லாம் செஞ்ச... நீ செஞ்சு வச்சிருக்க காரியத்தோட வீபரீதம் உனக்கு தெரியுதா..?? இல்லையா..?? நீ செஞ்ச தப்பு உன்னோட வயிறுல கருவா வளர்ந்தா என்ன பண்ணுவ..??"

தன் அன்னை கேட்ட கேள்வியில் ஒரு நொடி அதிர்ந்தாள் யுக்தா... ஆனால் அடித்த நொடியே சமாளித்து... "அம்மா அப்படியெல்லாம் சினிமா, சீரியலில் தான் மிகைப்படித்திக் காட்டுவாங்க... நிஜத்துல அதெல்லாம் ரேர் தான்...

"ஆமா ஒருநாள் நடந்த தப்பை சினிமால மிகைப்படுத்தி தான் காட்டுவாங்க... ஆனா அது ரேர் தான்... அது உனக்கு நடந்தா என்ன பண்ணுவ...??"

தன் அன்னை கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று சில நொடி யோசித்தாள் யுக்தா... ஆனால் உடனே அதற்கு ஒரு பதிலும் வைத்திருந்தாள் அவள்... " அப்படி ஒருவேளை நடந்தா... பிருத்வி மேல நான் வச்சிருக்க காதலுக்கு கிடைச்ச பரிசுன்னு சந்தோஷமா வளர்ப்பேன்..."

அதைக்கேட்டு கோபத்தில் சுஜாதா யுக்தாவை அடிக்க கை ஓங்கினாள்... அதை தடுத்தாள் சாவித்திரி...

"சுஜாதா என்ன பண்ற... வளர்ந்த பொண்ணை அடிக்கப் போற..."

"பின்ன என்னக்கா... எப்படி பேசுறா பாருங்க... முதலில் லஷ்மி அப்புறம் பிருத்வி... ரெண்டுப்பேரும் இவளை பத்தி தப்பா பேசும் போது எனக்கு எப்படி இருந்ததுன்னு தெரியுமா...?? ஆனா இவ கல்யாணம் செஞ்சுக்காமலேயே குழந்தை பெத்து வளர்க்க போறதா சொல்றா... இவ புத்தி ஏன் இப்படி போகுது... அவங்க சொல்றது போல வெளிநாட்டு கலாசாரம் தான் இவளை மாத்திடுச்சா..??

இங்கப் பாருடி... நீ என்ன செய்யனும்னு நினைக்கிறியோ செய்... நியூயார்க் போகப் போறீயா போ... அதுக்கு முன்னாடி எங்களுக்கு இங்கேயே சமாதி கட்டிட்டு போ.."

"என்ன சுஜாதா... ஏன் இப்படியெல்லாம் பேசுற..."

"பின்ன என்னக்கா... அவரைப் பாருங்க யார்க்கிட்டேயும் எதுவுமே பேசாம அமைதியா இருக்காரு... ஏன் இப்படி செஞ்சன்னு இவளையோ... இல்ல நீ தானே எல்லாத்துக்கும் காரணம்னு என்னையோ.... திட்டியிருந்தாளோ இல்ல நாலு அடி அடிச்சிருந்தாளோ கூட எனக்கு பெருசா தெரிஞ்சிருக்காது... இப்படி உட்கார்ந்திருப்பது தான் கவலையா இருக்கு.... அவரை தனியா விட கூட பயமா இருக்கு...

இப்படி தினம் தினம் இவளை நினைச்சு ரெண்டுபேரும் வேதனை படுவதை விட கொஞ்சம் விஷத்தை சாப்பிட்டு செத்து போகலாம்... "

"அம்மா போதும் நிறுத்துங்க.... ஏற்கனவே கேசவன் அப்பா மரணத்தையே இன்னும் நம்மலால மறக்க முடியல...  இப்படியெல்லாம் பேசாதீங்க... என்ன நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கனும் அப்படிதானே..?? சம்மதிக்கிறேன்... ஆனா இப்படி கட்டாயப்படுத்தி கல்யாணம் செஞ்சு வைப்பதோட பலனை சீக்கிரம் தெரிஞ்சுப்பீங்க..." சொல்லிவிட்டு கோபமாக அங்கிருந்து சென்றுவிட்டாள்.

"என்னக்கா பிருத்வியை காதலிக்கிறதா சொன்னா... அவன் வேணும்னு என்னன்னவோ செஞ்சா... இப்போ என்னடான்னா இப்படி பேசுறா... இவ விருப்பமில்லாம இந்த கல்யாணம் செஞ்சு வைக்கனுமா..."

"இங்கப்பாரு அன்னைக்கு பிருத்வி எல்லார் முன்னாடியும் கோபமா பேசினது... அப்புறம் கவி இவ மேல கோபமா இருக்கிறது... எல்லாம் சேர்ந்து இவ ஏதோ குழப்பத்துல இருக்கா.... இந்த கல்யாணம் முடிஞ்சா எல்லாம் சரியாயிடும் கவலைப்படாத" என்று சாவித்திரி சுஜாதாவை தேற்றினாள்.

இருவரும் சேர்ந்து மாதவனையும் சம்மதிக்க வைத்தனர்.

பிருத்வி யுக்தாவின் சம்மதம் கிடைத்ததும் அடுத்து வரும் முகூர்த்ததிலேயே வடபழனி முருகன் கோவிலில் திருமணம் செய்யலாம் என்று முடிவு செய்தனர்...

இந்த திருமணத்தில் கவி ஆர்வம் காட்டவில்லை... அதுமட்டுமல்லாமல் பெங்களூரில் வேலை முடிவானதால் திருமண நெருக்கத்தில் அவள் பெங்களூர் கிளம்பிவிட்டாள்.... எல்லோரும் சங்கடத்தில் இருந்ததால் அவளை திருமணத்திற்கு இருக்க சொல்லி கட்டாயப்படுத்தவில்லை...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.