(Reading time: 28 - 56 minutes)

" இப்படியெல்லாம் பேசற நீ ஏன் அப்படி செஞ்ச...?? கண்ணகி மாதவின்னு கதை சொல்றீயே எனக்கு கோவலனா இருக்க என்னைக்கும் எண்ணமில்லை... ஆம்பளைன்னா எப்படி வேணாலும் இருக்கலாம்ன்னு சொல்றதுல எனக்கு உடன்பாடு இல்லை... இப்படி வாழ நினைச்ச என்ன ஒரு பெண்ணை ஏமாத்தும் படி வச்சிட்டியே..."

"நல்ல கொள்கை தான்... ஆனா அந்த கொள்கையை போதையிலும் கடைப்பிடிச்சிருந்தா... நான் உங்களை பாராட்டியிருப்பேன்... அதான் உங்க கொள்கையை தவற விட்டுட்டீங்களே அப்புறம் என்ன..?? நான் தான் உங்களை கல்யாணம் செஞ்சுக்க போறதில்லைன்னு சொல்லிட்டேனே... அந்த சப்னாவையே கல்யாணம் செஞ்சுக்கோங்க..."

அவள் நக்கலாக பேசிய அந்த பேச்சில் அவன் கோபம் அதிகமாகி அவளை அடிக்க கை ஓங்கினான்... மதி தான் அவனை தடுத்தாள்... "பிருத்வி என்ன இது பொண்ணை அடிக்கிற பழக்கம்..."

மதி சொன்னதும் அடிக்க ஓங்கிய கையை கீழே இறக்கியவன்... "அம்மா போதையில செஞ்சாலும் நான் பண்ணது தப்பு.... அதுக்கு எனக்கு என்ன தண்டனை வேணாலும் கொடுங்க... ஆனா இவளை என்னால கல்யாணம் செஞ்சுக்க முடியாது... நான் காலம் முழுக்க பிரம்மச்சாரியா கூட இருந்துடுவேன்... ஆனா இவளை கல்யாணம் பண்ணிக்க முடியாது..." என்று கோபத்தோடு கூறினான்.

"நீங்க கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாலும் நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க போறதில்ல... நீங்கல்லாம் போகலாம்..." யுக்தாவும் உடனே அதற்கு பதில் கூறினாள்.

அவள் அப்படி சொன்னதும் "இதுக்கு மேல இங்க இருக்கனுமா... வாங்க போகலாம்.." என்று கோபமாக வெளியேறினான் பிருத்வி... கேக்ல மயக்க மருந்து கலந்தது நான் தான் என்று யுக்தா கூறியதை விட வீட்டை விட்டு துரத்தாத குறையாக இப்போது பேசியது தான் மதிக்கும் செந்திலுக்கும் அதிர்ச்சியாக இருந்தது.... இவர்கள் இதுவரை பார்த்த யுக்தாவிற்கு இப்படியும் ஒரு குணமா...?? அங்கிருந்து கிளம்புவதற்கு முன் மதி சுஜாதாவிடம்...

"சுஜா... நடந்த தப்பை சரி பண்ணனும்னு தான் வந்தோம்... ஆனா இப்போ எங்களுக்கு என்ன பண்ணணும்னு தெரியல... நாங்க வரோம்..." என்று விடைப்பெற்றனர்.

அவர்கள் போனதும் யுக்தாவிடம் வந்த சுஜாதா... "நீ ஒரு தப்பு பண்ணிட்டு வந்து நிக்கும் போது... நாங்க எதுவும் கேக்கலன்னு தான் இப்படி ஒரு பரிசை எங்களுக்கு குடுத்திருக்கியா... உன்னை பெத்த வயிறு குளிர்ந்து போச்சு..." என்று கோபமாக சொல்லிவிட்டு போய்விட்டாள்..

அடுத்து வந்த சாவித்திரியோ... " கவியை விட எல்லா விஷயத்துலையும் நீதான் பக்குவமா நடந்துக்கறவன்னு உன்னை பெருமையா நினைச்சிருக்கேன் யுக்தா... நீ இப்படியெல்லாம் செய்வேன்னு நான் நினைச்சு கூட பார்க்கல... என்று வருத்தமாக கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

மாதவனுக்கோ தன் மகள் விஷயம் குறித்து அடுத்தடுத்து அதிர்ச்சியே... அந்த அதிர்ச்சியில் அவர் யுக்தாவிடம் எதுவும் பேசாமலே சென்றுவிட்டார்.. அடுத்து அவள் எதிர்பார்த்தது கவியை... ஆனால் அவள் அங்கு இல்லை...

நான் தான் போதை மருந்தை கலந்தேன் என்று யுக்தா சொன்ன அந்த நொடியே அவள் அறைக்கு வந்துவிட்டாள் சங்கவி... அவளை தேடி அறைக்கு வந்த யுக்தா... "கவி" என்று பேச்சை ஆரம்பிக்கும் முன்பே அவள் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை அறைந்தாள் கவி..

"என்கிட்ட பேசாதே...  எதுவும் பேசாதே... உன்னை பத்தி எவ்வளவு பெருமையா நினைச்சிருக்கேன் தெரியுமா... நியூயார்க்ல இருந்தாலும் நீ மாறாம இருக்கேன்னு சந்தோஷப்பட்டிருக்கேன்... ஆனா நீ வெளிநாட்டுல இருந்து வந்தவன்னு நிரூபிச்சிட்ட...  அந்த பிருத்வியை கல்யாணம் பண்ணிக்கனும்னா அப்படி செஞ்ச...??

 அவன் வேறொரு பெண்ணை காதலிக்கிறான்னு தெரிஞ்சும் எப்படி சம்யு.... அப்படி என்ன காதல் அது.... என் காதல் ஜெயிக்கும்... என் காதல் கல்யாணத்துல முடியும்னு நம்பிக்கை இருக்குன்னு அன்னைக்கு சொன்னியே... இதை மனசுல வச்சிக்கிட்டு தான் சொன்னியா... நான் உடனே ஊருக்கு வரேன்னு சொன்னதுக்கு கூட வேண்டாம்னு சொன்னியே இதுக்குதானா..?? நீ இப்படி செய்வேன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல... என் மேல வச்சிருக்க அன்பு உண்மைன்னா இதுக்கு மேலே என்கிட்ட பேச முயற்சி பண்ணாத..."

சொல்லிவிட்டு விறுவிறுவென்று அங்கிருந்து போய்விட்டாள்... அதுவரைக்கும் அழக்கூடாதுன்னு கட்டுபடுத்தி வச்சிருந்த அழுகையை அழுது தீர்த்துவிட்டாள் யுக்தா.

ஆத்திரம் புத்தியை மழுங்க செய்யும் என்பதற்கு பிருத்வி மட்டும் இல்லை கவியும் கூட உதாரணம் தான்... சிறிது நேரத்திற்கு முன்பு வரை சம்யு மேல் அதிக நம்பிக்கை வைத்திருந்தாள் அவள்...  ஆனால் எப்போது சம்யு அவள் வாயாலேயே அதை ஒத்துக் கொண்டாளோ... அவள் இதை செய்திருப்பாள் என்று நம்பினாள்... காசுக்காக தொழில் செய்பவர்கள் கூட போலீஸிடம் மாட்டிக் கொண்டால் தன் முகத்தை யாரும் பார்க்கக் கூடாது... தன் பெயர் வெளியில் வரக் கூடாது என்று தான் நினைப்பார்கள்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.