(Reading time: 28 - 56 minutes)

ப்படி ஒரு பிள்ளையை வச்சிக்கிட்டு எப்படி தான் வீடு தேடி பொண்ணு கேக்க வராங்களோ... அம்மாவும் சித்தியும் அதுக்கு தலையாட்டறாங்க... சித்தப்பா தான் கொஞ்சம் யோசிக்கிறாருன்னு பார்த்தா... அவரையும் சம்மதிக்க வைக்கிறாங்க...

இவளால் எதுவும் பேச முடியவில்லை... பெரியவர்கள் முடிவெடுக்கும் போது இவள் தலையி்ட வேண்டாம் என்று தான் அமைதியாக இருந்தாள்... அவங்க போனதும் சித்தப்பா சித்தி கிட்ட பேசி புரியவைக்கனும் என்று நினைத்திருந்தாள்..

இந்த விஷயத்தில் பிருத்வி மேல் தான் இவளுக்கு சந்தேகம்... சம்யு அவன் மேல் வைத்திருக்கும் காதலால் அமைதியாக இருக்கிறாள்... முதலில் அவள் விஷயத்தை சொல்லட்டும் அப்புறம் இருக்கு அவனுக்கு... அப்படிதான் நினைத்துக் கொண்டு நின்றிருந்தாள்... இதில் பிருத்வியின் வருகையே இவளுக்கு பிடிக்கவில்லை... இதில் அவன் பேசியது அவளுக்கு கோபத்தை தான் வரவழைத்தது..

"ஹலோ மிஸ்டர்... என்ன பேசறீங்க... நீங்க உள்ள வரும்போதே உங்க சட்டையை பிடிச்சு கேள்வி கேக்காம அமைதியா இருக்கோம் அப்படிங்கிறதால என்ன வேணாலும் பேசுவீங்களா..??"

"கவி.. அமைதியா இரு .." சாவித்திரி தான் அடக்கினாள்.

"நீங்க சும்மா இருங்கம்மா... நம்ம அமைதியா இருக்கோம் என்பதால நம்ம சம்யுவையே குறை சொல்றாரு... வேற பொண்ணை காதலிச்சிட்டு... நம்ம சம்யுக்கிட்ட தப்பா நடந்துக்கிட்டதும் இல்லாம... ஏதோ மயக்கமாம்... அதுல யுக்தா மேல சந்தேகமாம்...

இங்க பாருங்க பிருத்வி... உங்களை எதுவும் கேக்காம அமைதியா இருக்கோம்னா... அது எங்க சம்யு அமைதியா இருக்கறதால தான்.... எங்க அமைதிய நீங்க அட்வான்டேஜா எடுத்துகாதீங்க..." கோபத்தில் கொஞ்சம் சத்தமாகவே பேசினாள்.

அதுவரையும் அமைதியாக தான் யுக்தாவிடம் பேச வேண்டும் என்று நினைத்து வந்தவனுக்கு கோபம் தான் வந்தது... தன்னை விட வயதில் சிறியவளான ஒருத்தி தன்னை கேவலமாக நினைக்கும் அளவுக்கு நிலைமை அமைந்ததுக்கு யார் காரணம்.. யுக்தா தானா..?? அவனுக்கு கோபம் வந்தால் தான் என்ன பேசுகிறோம் என்று தெரியாதே... அங்கு அவன் கோபம் வெளிப்பட்டது..

"யுக்தா அமைதியா இருக்கறதால தான் நீங்களும் அமைதியா இருக்கீங்களா... ஏன் அவ அமைதியா இருக்கனும்... போதை மயக்கத்தால தானே தப்பு நடந்தது அதை ஏன் உங்கக்கிட்ட சொல்லல...?? எனக்கு நைட் என்ன நடந்ததுன்னே ஞாபகம் இல்ல.. அவளுக்கும் அப்படி தானே இருந்திருக்கும்... அப்போ எப்படி இப்படி நடந்துச்சுன்னு ஏன் தெரிஞ்சிக்க நினைக்கல... அவக்கிட்ட எதுவோ தப்பு இருக்கப் போய் தானே அமைதியா இருக்கா.."

"பிருத்வி என்னடா என்னன்னவோ பேசற... எங்களுக்கு ஒன்னும் புரியல.." மதி தான் குழப்பத்தோடு கேட்டாள்.

"அம்மா இதுக்கு யுக்தா தான் விளக்கம் கொடுக்கனும்... அவக்கிட்ட தான் தப்பு இருப்பதா எனக்கு சந்தேகமா இருக்கு..."

அவன் அப்படி சொன்னதும் கவி யுக்தாவை அழைத்து வர  அவள் அறைக்குச் சென்றாள்.. ஏற்கனவே குழப்பத்தில் இருந்த பெரியவர்கள் மேலும் குழம்பினர்..

அதுவரை இந்த உலகத்தையே மறந்து அமர்ந்து கொண்டிருந்த யுக்தா... கவி வேகமாக கதவை திறந்ததும் திரும்பி பார்த்தாள்...

"சம்யு... நீ கொஞ்சம் வெளிய வா... இதுக்கு மேலேயும் மௌனமா இருப்பதுல அர்த்தம் இல்ல.... அந்த பிருத்வி என்னன்னமோ பேசுறான்... இதுல உன்னோட தப்பு இருக்குன்னு சொல்றான்... என்ன நடந்ததுன்னு இப்பயாவது சொல்லு... " என்று அவளை இழுத்துக் கொண்டு சென்றாள்.

அவளை பார்த்ததும் நேராக அவளிடம் சென்றான் பிருத்வி.. "யுக்தா ஏன் இப்படி செஞ்ச... நீ இப்படி பண்ணுவன்னு நான் நினைச்சே பார்க்கல...

நீ உன்னோட காதலை சொன்னப்ப.... எப்படி ஃபீல் பண்ணேன் தெரியுமா..?? உன் மனசை கஷ்டப்படுத்திட்டேன்னு... நீ நியூயார்க் போகப் போறேன்னு சொன்னப்போ.. என்னால தான் நீ போகப் போறேன்னு நினைச்சு கஷ்டப்பட்டேன்... ஆனா நீ இப்படி நடந்துக்கிட்டியே..!!"

"பிருத்வி என்ன சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியல..."

"நீ என்னோட பர்த்டேக்கு வந்ததை நினைச்சு சந்தோஷப்பட்டேன்... ஆனா உன்னோட காதலை அடையறதுக்கு... நீ இந்த வழியில போவேன்னு எதிர்பார்க்கல... நீதானே கேக்ல ஏதோ கலந்த..??"

"என்ன உளர்றீங்க பிருத்வி... நான் ஏன் கேக்ல ஏதாவது கலக்கனும்.. எனக்கு அப்படி எந்த அவசியமும் இல்ல.."

"இருக்கு... நீ என்னை காதலிச்ச... கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைச்ச... ஆனா நா வேற ஒரு பொண்ணை காதலிக்கிறத உன்னால ஏத்துக்க முடியல... அதுக்கு தான் இப்படி செஞ்சிருக்க..."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.