(Reading time: 28 - 56 minutes)

ந்த பத்து நாட்களாக அவனை சமாதானப்படுத்த அவள் முயன்று கொண்டிருந்தாள்... ஆனால் அவன் பிடிவாதமாக மறுத்து கொண்டிருந்தான்... அவனின் கோபமும் பிடிவாதமும் அவள் அறிந்தது தான்... இதே கோபத்தையும் பிடிவாதத்தையும் ஒரு சமயம் அவள் சாதகமாக்கி கொண்டாள்.... ஆனால் அதே பிடிவாதம் இன்று அவளுக்கு பாதகமாகி போனது... அவனை கொஞ்சம் விட்டுப்பிடிக்க நினைத்தாள்... ஆனால் அவளுக்கு தெரியவில்லை... இப்போது அவனை விட்டால் அதன்பிறகு அவனை பிடிக்கவே முடியாது என்று... அந்த சிறப்பும் சாவித்திரியையே சேரும்..

சாவித்திரிக்கு இந்த நகர வாழ்க்கை புதிது தான்... இந்த நகர வாழ்க்கையில் புது கலாச்சாரமாக தோன்றியிருக்கும் திருமணம் ஆகாமலே சேர்ந்து வாழும் வாழ்க்கை(living together), எல்லை மீறும் அளவுக்கு காதலித்துவிட்டு இதற்கு மேல் ஒத்து வராது என்று பிரியும் காதலர்கள் இதெல்லாம் அவள் அறியாதது... அவள் இருந்ததெல்லாம் கிராமத்தில் தான்...

கிராமத்தில் தவறே நடக்காது என்று இல்லை... ஆனால் அங்கு தவறு செய்தால் அது சாதாரணமான விஷயமாக இருக்காது...  தவறு செய்தவர்களிடம் பேச மற்றவர் தயங்குவர்.... முன்பெல்லாம் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்... இப்போதெல்லாம அப்படியில்லை என்றாலும்... அவர்களை விட்டு மற்றவர் ஒதுங்கியே இருப்பர்....

பொதுவாக ஒரு ஆணும் பெண்ணும் காதலித்து எல்லை மீறிவிட்டால் திருமணம் செய்து வைக்க முடிவெடுப்பர்... அந்த பெண்ணை காதலன் ஏமாற்ற நினைத்தாலோ பஞ்சாயத்தில் அவனுக்கு அந்த பெண்ணை திருமணம் செய்து வைக்க தான் பார்ப்பர்... இதில் பிரச்சனை என்றால் இரு குடும்பத்தில் ஜாதி மத பிரச்சனையாகத் தான் இருக்கும்... பொதுவாக பஞ்சாயத்து நியாயமான தீர்ப்பு வழங்கத்தான் பார்க்கும்...

இதில் தன் மகளை எந்த வகையில் சேர்ப்பது என்று சாவித்திரிக்கு தெரியவில்லை... ஆனால் தன் மகள் அந்த பிருத்வியை காதலிக்கிறாள்... அவனும் தன் மகளை ஏமாற்ற நினைக்கவில்லை... யுக்தா மீது கோபம் மட்டும் தான்.... அதனால் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பது நல்லது என்று யோசித்தாள்... அதை சுஜாதாவிடம் சொல்லி வளர்மதியிடம் பேச சொன்னாள்...

தன் மகள் அவர்களை அவமானப்படுத்தாத குறையாக பேசிய பின் எப்படி மதியிடம் போய் பேசுவது என்று சுஜாதா முதலில் தயங்கினாள்.... பிறகு தன் மகளின் வாழ்க்கையை குறித்து மதியிடம் பேசினாள்... மதியும் செந்திலும் ஏற்கனவே குற்ற உணர்வில் இருந்ததால் இதற்கு ஒத்துக் கொண்டார்கள்...

ஆனால் மதியால் பிருத்வியின் சம்மதத்தை எளிதாக வாங்க முடியவில்லை.... என்னதான் யுக்தாவே தவறு செய்திருந்தாலும் ஒரு பெண்ணை ஏமாற்றும் பாவம் எதற்கு என்று சொல்லிப் பார்த்தாள்... அவளே அதைப்பற்றி கவலைப்படாத போது நான் ஏன் கவலைப்பட வேண்டும் என்று மறுத்தான்...

இந்த திருமணம் நடக்கவில்லையென்றால் எனக்கும் சுஜாவுக்குமான நட்பு பாதிக்கப்படும்... அதை நான் என்றுமே விரும்பியதில்லை என்று மதி அழுதாள்.... என்னதான் பிருத்வி கோபமும் பிடிவாதமும் கொண்டவனாக இருந்தாலும்... தன் அப்பா அம்மாவை மீறி எதுவும் செய்யமாட்டான்... அவர்கள் வருத்தப்படும்படியாக நடந்துக் கொள்ள மாட்டான்...

தன் அன்னை அழுததும் அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை... இந்த திருமணத்திற்கு சம்மதித்தான் ஆனால் ஒரு கண்டிஷனோடு....

அவர்கள் நட்பை காப்பாற்றி கொள்ளவும்... ஒரு பெண்ணுக்கு தீங்கு செய்ததாக குற்ற உணர்வு இல்லாமல் அவர்கள் இருக்க வேண்டும் என்பதற்காகவும் தான் இந்த திருமணத்திற்கு ஒத்து கொள்வதாகவும்... அவள் கழுத்தில் தாலிக்கட்டுவதோடு மட்டும் அவன் வேலை முடிந்தது... அதற்குமேல் அவர்கள் எதையும் எதிர்பார்க்கக் கூடாது... அதற்கு ஒத்து கொண்டால் மட்டுமே திருமணம் என்றும் முடிவாக கூறினான்...

தன் மகன் இப்படி ஒரு கண்டிஷன் போடும்போது ஒரு தாயால் எப்படி அதை ஒத்து கொள்ள முடியும்... ஒரு திருமணம் செய்து வைப்பதே... கணவன் மனைவி ஒருவருக்கொருவர் துணையாக காலம் முழுவதும் வாழ வேண்டும் என்பதற்கும்.. தலைமுறை தலைமுறையாக குடும்பம் தழைத்து வளர்வதற்கும் தான்...

ஆனால் தாலிக் கட்டுவதோடு அவ்வளவுதான் என்று தன் மகன் கூறுகிறான்.. இதற்கு மதி எப்படி ஒத்துக் கொள்வாள்... இருந்தாலும் ஒத்துக் கொண்டாள்... காலத்துக்கு அனைத்தையும் மாற்றும் சக்தி இருக்கிறது என்று அவள் நம்பினாள்...

அவள் ஒன்றும் பொத்தாம் பொதுவாக காலத்திற்கு மாற்றும் சக்தி இருக்கிறது என்று நம்பவில்லை... அவளுக்கு அவள் மகனை பற்றி தெரியும்... போதையாக இருந்தால் கூட ஒரு பெண்ணிடம் தவறாக நடக்கும் அளவுக்கு தன் மகன் தரம் தாழ்ந்தவன் அல்ல... அவனுக்கு யுக்தாவை பிடித்திருக்கிறது... இது அவனுக்கே தெரியவில்லை... இப்போது அவள் மீது அவனுக்கு இருப்பது கோபம் மட்டும் தான்.... திருமணம் செய்து அவள் வீட்டுக்கு வந்தாள் எல்லாம் மாறிவிடும் என்று நம்பினாள்... அவன் கண்டிஷனுக்கு ஒத்துக் கொண்டாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.