(Reading time: 6 - 11 minutes)

ம்ம்ம்”

“ ஒரு பிரச்சனை ..அதனால வெளில போறேன்..முக்கியாம நோட்ஸ் எதுவும் இருந்தால்,எனக்காகவும் கொஞ்சம் எடுத்து வை..நான் வந்து உங்கிட்டபேசுறேன். “ என்றாள் அவள். சந்துருவின் நினைவில் இருந்தவளோ இயந்திரத்தனமாய் “ம்ம்ம்” என்று தலையாட்டி வைத்தாள்.

அதே நேரம் எரிச்சலான மனநிலையோடு, கல்லூரிக்கு தயாராகி கொண்டிருந்தாள் ஆரு. அவ்வப்போது வின்சை மனதிற்குள் திட்டின் கொண்டும் இருந்தாள்.

காலெஜில்,

“ஹேய் ஆரூ” தூரத்தில் இருந்து தன்னை பார்க்க வந்துவிட்டு, மனதை மாற்றிகொண்டு திரும்பி நடந்தவளை கண்டுப்பிடித்துவிட்டான் வின்சண்ட்.

“ வி…..”

“ வா வா… என்ன வந்துட்டு பாதியிலேயே திரும்பி போற”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல..ஜெனி கிட்டஒரு விஷயம் சொல்லனும்னு நினைச்சு மறந்தே போயிட்டேன்..அதான் அவளை மறுபடியும் பார்க்க போனேன்” என்றாள் அவள்.. என்னதான் சிரிக்க முயன்றாலும் அவள் குரலில் முகத்திலும் போலித்தன்மை அப்படியே தெரிந்தது..

“ என்ன ஆரு,நைட் எல்லாம் தூங்கவே இல்லையா நீ?”

“ஏ…ஏன் அப்படி கேட்குற?”

“இல்ல,கண்ணெல்லாம் சிவந்து இருக்கே”

“ அது எல்லாம் ஒன்னும் இல்ல…”

“ஹ்ம்ம்ம்..ஆனா நாந்தான் சரியா தூங்கவே இல்லை”

“இப்போ எனக்கு இந்த செய்தி ரொம்ப தேவையா?” என்பது போல முறைத்தாள் ஆரு.. அவள் கண்களிலிருந்து வந்து தீ அவனது முதுகு தண்டையே கொழுத்தியிருக்கும்..

“ ப்ப்பாஅ…முட்டகண்ணி எப்படி முறைக்கிறா பாரேன்..கடவுளே என்னை காப்பாற்று” என்று அவன் கெஞ்சிய நேரத்தில் ஆருவின் பின்னால் நடந்துவந்தான் ஹம்சா என்கிற அவனது வகுப்பு நண்பன் ஹம்சா வர்தன்.

“இதோ பாரு எல்லாம் இந்த ஹம்சாவினால்தான்” என்று அவன் கைக்காட்ட, “எவ அவ?” என்று கோபத்தோடு திரும்பியவள் பின்னால் இருந்த புதியவனி பார்த்ததும் அசடு வழிந்தாள்.

“ஹம்சான்னு சொன்ன?” என்று கேள்வியுடன் பார்த்தாளவள்.

“ இவந்தான் என் பெஸ்டூ ப்ரண்டு ஹம்சவர்தன்” என்று அவன் தோளில் வின்ஸ் கைபோட்டு நிற்க கோபம்,பொறாமை, வெட்கம், அசடு என்று நவரசங்களையும் வெளிப்படுத்தியது ஆருவின் முகம்.

ப்ரசாந்த்தின் வீட்டை அடைந்திருந்தாள் தீப்தி. தன்னிச்சையாய் அவளில் கண்கள் அந்து வீட்டு பக்கத்தில் இருந்த பெயர்பலகையை பார்க்க அதில்” தீரஜ் ப்ரசாந்த்” என்று அவனின் பெயரும் இருந்தது..

“ ஹ்ம்ம்ம் பேரு கூட பாதிதான் உண்மையா? ஆண்டவா!” என்று தலையில் அவள் கைவைத்த போது வாசலுக்கு வந்திருந்தான் தீரஜ்.

“தீப்தி வா வா “ அவளை பார்த்த சந்தோஷத்தில் தான் இந்த வீட்டில் உரிமையாய் இருக்கிறோம் என்பதை கூட அவன் உணரவில்லை.

“ஹாய் தீரஜ்” என்று அவன் பெயரை அழுத்தமாய் அழைத்தாள் தீப்தி..

“வா வா”என்று அவளை வரவேற்று அவன் இரண்டடி எடுத்து வைத்து, அப்போதுதான் அவள் அழைத்த பெயரை உணர்ந்து அதிர்ச்சியாய் நிமிர்ந்தான்… !  நினைவுகள் தொடரும்.

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 30

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 32

நினைவுகள் தொடரும்...

Buvaneswari is continuing the story from where it was let off... Appreciate your comments but no comparisons between the three writers please...

{kunena_discuss:677}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.